பாக்கியலட்சுமி: கோர்ட்டில் கோபி சொன்ன வார்த்தை! உடைந்து போன ஈஸ்வரி.. ராதிகாவிடம் பாக்யா கேட்ட கேள்வி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஜூலை 11ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் நீதிமன்றத்தில் ஆஜராகி இருக்கும் ஈஸ்வரியை வெளியே எடுப்பதற்காக பாக்கியா பல முயற்சிகள் எடுக்கிறார். ஆனால் கோர்ட்டில் கோபி சொன்ன வார்த்தையால் ஈஸ்வரிக்கு சிக்கல் வந்திருக்கிறது. அதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் பாக்கியாவிடம் வக்கீல் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார். அப்போது பாக்கியா ஈஸ்வரி எதுவும் செஞ்சிருக்க மாட்டாங்க என்று அவருக்காக வாதாட வக்கீல் இவங்களுக்கும் ஈஸ்வரிக்கும் நல்ல அண்டர்ஸ்டாண்டிங் இருந்திருக்கு அதனாலேயே ஈஸ்வரிக்கு ராதிகாவை பிடிக்கல. ராதிகாவை பிடிக்காததால் தான் அவங்களோட குழந்தையை கொலை செய்ய ராதிகாவை தள்ளிவிட்டு இருக்காங்க என்று வக்கீல் சொல்ல பாக்கியா மறுப்பு சொன்னாலும் அங்கு எதுவும் எடுபடவில்லை.

அதைத்தொடர்ந்து கோபியை விசாரிக்க கோபி நான் அந்த நேரத்தில் வீட்டில் இல்லை. எனக்கு ஒன்னும் தெரியாது என்று சொல்லிவிடுகிறார். அதோடு ஈஸ்வரி உங்க குழந்தை வேண்டாம் அழித்துவிடு என்று சொன்னாரா என்று கேட்க அதற்கு கோபி ஆமா எனக்கு வயசு ஆயிட்டு என்று என் மேல இருக்கிற பாசத்துல அப்படி சொல்லிட்டாங்க என்று உளறி விடுகிறார். இதனால் நீதிபதி இந்த வழக்கை ஒத்தி வைக்கிறார்.

மேலும் நீதிபதி ஈஸ்வரியை நீதிமன்ற காவலில் வைப்பதற்கு உத்தரவு பிறப்பிக்கிறார். அதற்கு பிறகு கோர்ட்டில் நின்று கொண்டிருக்கும் கமலா மற்றும் ராதிகாவிடம் பாக்கியா நீங்க இப்படி பண்ணுவீங்கன்னு நான் கொஞ்சம் கூட நினைக்கவே இல்ல. கிடைத்த சந்தர்ப்பத்தை பார்த்து அத்தையை பழி வாங்கிட்டீங்க என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது எழில் வந்து இவங்ககிட்ட பேசி ஒன்றும் ஆகப் போவது கிடையாது. இதையும் அவங்க பெரிய பிரச்சினையாக்குவாங்க வா என்று பாக்கியாவை அழைத்து செல்கிறார்.

அதைத்தொடர்ந்து ஈஸ்வரியை பார்ப்பதற்காக எல்லோரும் கவலையோடு காத்திருக்க போலீஸ் யாராவது ஒருவரை மட்டும்தான் அனுப்ப முடியும் என்று சொல்லிவிடுகின்றனர். பிறகு ஈஸ்வரி பாக்யாவை பார்க்க வேண்டும் என்று சொல்ல பாக்கியா போனதும் ஈஸ்வரி பாக்யாவை கட்டி பிடித்து, பாக்கியா நான் இனி காலம் முழுக்க இங்கேதான் இருக்கணுமா? என்று கதறி அழ உங்களை நான் எப்படியாவது வெளியே எடுத்து விடுவேன் என்று பாக்கியா அவருக்கு ஆறுதல் சொல்கிறார்.

அதைத்தொடர்ந்து வீட்டுக்கு போனதும் எல்லோரும் அழுது கொண்டிருக்க, ஈஸ்வரி இல்லாட்டி நானும் இருக்க மாட்டேன் ஏதாவது பண்ணிடுவேன் என்று ராமமூர்த்தி உடைந்து போய் அழுகிறார். அதற்கு எழில் அவருக்கு ஆறுதல் சொல்லி நம்பிக்கை கொடுக்கிறார். அப்போது கோபி மட்டும் வாயை மூடிட்டு இருந்திருந்தால் இன்னைக்கு பாட்டிக்கு ஜாமீன் கிடைத்திருக்கும் எல்லாத்தையும் கெடுத்துட்டார் என்று எழில் கோபப்படுகிறார். பாக்யா அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிப்போம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications