ஈஸ்வரி பற்றி உண்மையை சொன்ன மயூ.. ஆனால் ராதிகாவும் கமலாவும் செய்த செயல்.. பாக்யா எடுத்த முடிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஜூலை 12ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்கலாம். அதில் ராதிகாவின் குழந்தை கலைந்து போனதற்கு ஈஸ்வரி தான் காரணம் என்று ஈஸ்வரி ஜெயிலில் அடைக்கப்பட்டு இருக்கிறார். ஈஸ்வரியை வெளியே எடுக்க வேண்டும் என்று பாக்கியா முயற்சி செய்து கொண்டிருக்கும் போது மயூ சில உண்மைகளை சொல்லி இருக்கிறார். அது பற்றி பார்க்கலாம்.
அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் ராதிகாவின் வீடு பூட்டி இருப்பதால் மயூ ரோட்டில் நின்று கொண்டிருக்கிறார். அப்போது பாக்கியா தெருவில் நடந்து வரும் போது அவரிடம் தெருவில் உள்ளவர்கள் எல்லோரும் கேள்வி மேல் கேள்வி கேட்க, அவர்களுக்கு பதில் அளித்தபடியே பாக்யா வந்து கொண்டு இருக்க மயூவை பார்த்ததும் ஏன் வெளியில நிக்கிற என்று பாக்கியா விசாரிக்க, வீட்டில் யாரும் இல்லை அதனால் வெயிட் பண்ணிட்டு இருக்கிறேன் என்று மயூ சொல்கிறார்.

அதனால் பாக்கியா தன்னுடைய வீட்டிற்கு கூப்பிட மயூ வேண்டாம் என்று சொல்லி பார்க்குக்கு செல்கிறார்.பிறகு பாக்யா வீட்டிற்கு வந்து ஸ்நாக்ஸ் கொண்டு வந்து கொடுத்து மயூ பக்கத்தில் துணையாக இருக்கிறார். பாக்கியா டல்லாக இருப்பதை பார்த்து மயூ என்னாச்சு என்று கேட்க, ஈஸ்வரி பற்றி பேசி பாக்கியா கண்கலங்க பாட்டி எந்த தப்பும் பண்ணல... அம்மா பூ ஜாடி தடுக்கிதான் கீழே விழுந்தாங்க.
பாட்டி அவங்களுக்கு ஹெல்ப் பண்ண தான் வந்தாங்க... அப்ப நானும் அங்கே தான் இருந்தேன் என்று உண்மையை சொல்ல இந்த விஷயத்தை கேட்டு பாக்கியா நீ வீட்ல யார்கிட்டயும் சொல்லலையா? என்று கேட்க எல்லோரும் மாறி மாறி சண்டை போட்டுக்கிட்டே இருந்தாங்க அதனால சொல்ல பயமா இருந்தது உங்ககிட்ட தான் சொல்றேன் என்று மயூ சொல்லிக் கொண்டிருக்கிறார்.

அந்த நேரத்தில் இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போது கமலாவும் ராதிகாவும் அங்கு வர, கமலா இவ கூட உனக்கு என்ன பேச்சு என்று பாக்யாவை அவமானப்படுத்தும் வகையில் மயூவை திட்டுகிறார். அதோடு பாக்கியா கொடுத்த ஸ்நாக்ஸை தட்டிவிட்டு மயூவை கூட்டிக்கொண்டு செல்கிறார். பிறகு பாக்கியா பழனிச்சாமியோடு வந்து லாயரிடம் விஷயத்தை சொல்ல, அவர் மயூ சாட்சி சொன்னால் ஈஸ்வரி வெளியே வந்துடுவாங்க என்று சொல்கிறார்.

பாக்யா மயூவை பேச வைத்து வீடியோ எடுக்கலாமா என்று கேட்க, அதெல்லாம் ஆதாரமா எடுத்துக்க மாட்டாங்க. நேர்ல வந்து சொன்னா மட்டும் தான் உங்க மாமியாரை வெளியே எடுக்க முடியும். என்று சொல்ல குழந்தையை எப்படி கூட்டிட்டு வர முடியும் என்று பாக்கியா கேள்வி கேட்கிறார். பழனிச்சாமி ராதிகாவுக்கு தெரியாமல் தான் எப்படியாவது கூட்டிட்டு வரணும் என்று சொல்கிறார்.

இதைத்தொடர்ந்து பாக்யா வீட்டிற்கு வரவும் ராமமூர்த்தி ஈஸ்வரியை வெளியே எடுக்க ஒரே வழி தான் இருக்கு நான் போய் ராதிகா காலில் விழுந்து கேஸை வாபஸ் வாங்க சொல்ல போறேன் என்று கிளம்பி செல்ல, பாக்யா அவரை தடுத்து நிறுத்தி அத்தை வெளிய வந்துருவாங்க... எனக்கு நம்பிக்கை இருக்கு என்று சொல்கிறார். பிறகு எழில் செழியனிடம் என்ன பண்ண போறாம்னு தெரியல ஆனா நாளைக்கு கண்டிப்பா ஒரு அதிசயம் நடக்கும் என்று சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications