பாக்கியலட்சுமி: மயூ முன்பு ராதிகாவை வீட்டை விட்டு துரத்திய கோபி.. கோர்ட்டில் பாக்யா கொடுத்த அதிர்ச்சி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஜூலை 13 ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் கோபி ராதிகாவையும் கமலாவையும் வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறார். அதை பார்த்து மயூ அதிர்ச்சி அடைந்து நிற்கிறார். அதுபோல ஈஸ்வரியை ஜெயிலில் இருந்து வெளியே கூட்டிட்டு வருவதற்காக பாக்யா முக்கிய முடிவு எடுத்திருக்கிறார். அது பற்றி பார்க்கலாம்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் கமலா தன்னுடைய மகனிடம் போனில் பேசிக் கொண்டிருக்கும்போது கோபி கதவை தட்ட கமலா கதவை திறக்கிறார். கமலாவை பார்த்ததும் கோபி போதையில் வீட்டிற்கு வந்து இனிமே நீங்க இந்த வீட்ல இருக்க கூடாது எங்க அம்மாவை எப்படி எடுக்கணும்னு எனக்கு தெரியும். நீங்க வெளியே போங்க என்று கோபப்பட, கமலா நீங்க சொன்னா நாங்க போயிடணுமா? அதுக்கு எல்லாம் போக முடியாது என்று கோபியை அசிங்கப்படுத்திவிட்டு வீட்டிற்குள் போய் விடுகிறார்.

அதைத்தொடர்ந்து அடுத்த நாள் ராமமூர்த்தி நான் கோர்ட்டுக்கு வரல என்று சொல்ல பாக்கியா நீங்க கண்டிப்பா வரணும் என்று சொல்லி அவரே ரெடி ஆகி எழிலுடன் அனுப்பி வைக்கிறார். இறுதியாக எல்லாரும் கோர்ட்டுக்கு போங்க நான் ரெஸ்டாரண்டில் முக்கியமான ஒரு வேலை இருக்கு அதை முடிச்சுட்டு வரேன் என்று பாக்கியா சொல்ல, செல்வி அக்கா ஏன் இப்படி பண்ணுதுன்னு தெரியல என்று புலம்பி கொண்டிருக்கிறார்.

அதேபோல ராதிகாவும் நான் கோர்ட்டுக்கு வரலை என்று சொல்ல கமலா ராதிகாவை பழைய விஷயங்களை எல்லாம் பேசி மனசை மாற்றி கூட்டிட்டு வருகிறார். பிறகு எல்லோரும் கோர்ட்டில் காத்திருக்கின்றனர். அப்போது பாக்யாவை காணாததால் கமலா எங்க அந்த பாக்கியாவை காணும் இல்லனா குறுக்க நெடுக்க நடந்துக்கிட்டே இருப்பா. அவளை மட்டும் காணலையே என்று தேடுகிறார்.

கமலாவையும் ராதிகாவையும் பார்த்ததும் ராமமூர்த்தி கோபத்தில் புலம்பி கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் கோபி அங்க வந்து அப்பா என்று சொல்ல, என்னை பார்த்து அப்படி சொல்லாத உன்னை கொன்னே போட்டுடுவேன் என்று கோபப்படுகிறார். அந்த நேரத்தில் ராதிகாவும் கமலாவும் கோர்ட்டுக்குள் கூப்பிட முதலில் போய் விடுகின்றனர். பிறகு ராமமூர்த்தி, எழில், செழியனையும் வக்கீல் வந்து கூப்பிட அவர்களும் உள்ளே போகின்றனர். ஆனால் பாக்கியா மட்டும் கோர்ட்டுக்கு வரவில்லை பாக்கியாவை தேடி செல்வியும் கோர்ட்டுக்கு வந்திருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications