பாக்கியலட்சுமி: மயூவிடம் ராதிகா கேட்ட கேள்வி.. கமலா பற்றி தெரிய வந்த உண்மை.. கோபி இப்படி சொல்லிட்டாரே

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஜூலை 17ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை பற்றி இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் மயூ சொன்ன வாக்குமூலத்தால் ஈஸ்வரி விடுதலையாகி இருக்கும் நிலையில் தன்னுடைய தவறை நினைத்து கோபி வருந்தி கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் மயூ சொன்ன வார்த்தையால் கமலாவுக்கு பிரச்சனை வருகிறது.

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் ராதிகா சோகமாக உட்கார்ந்திருக்க கமலா பயந்தபடியே ராதிகாவிடம் பேச போக ராதிகா கோபப்படுகிறார். என்ன பொய்காரியா கொண்டு வந்து நிறுத்திட்டல... நீ சொன்ன வார்த்தையை நம்பி நானும் கோர்ட்டு படி ஏறி இப்போ கேவலப்பட்டு வந்திருக்கிறேன். இனிமே நான் சொல்றத யாரு நம்புவாங்க என்று கோபப்படுகிறார்.

Baakiyalakshmi Serial

அதற்கு கமலா நான் மட்டுமா சொன்னேன் நீயும் தான் அந்த பொம்பள உன்னை தள்ளிவிட்டுதுனு சொன்னியே என்று கேட்க, நான் சொல்லல என்னை நீ தான் சொல்ல வெச்ச... என்று ராதிகா பதிலடி கொடுக்கிறார். பிறகு கமலா அப்படியே பேச்சை மயூ பக்கம் திருப்பி விடுகிறார். யாராவது அம்மாவுக்கும் பாட்டிக்கும் எதிரா சாட்சி சொல்லுவாங்களா? அந்த பாக்கியா அப்படி உன்ன சொல்ல சொன்னாளா என்று மயூவை பிடித்து திட்ட, மயூ நான் ஒன்னும் பொய் சொல்லல உண்மையை தான் சொன்னேன் என்று அதிர்ச்சி கொடுக்கிறார்.

அதற்கு ராதிகா அதை சொல்றதுக்கு உனக்கு நேரமே கிடைக்கலையா? வீட்ல யார்கிட்டயாவது சொல்லி இருக்கலாமே என்று ராதிகா கோவப்பட்டு எழுந்து ரூமிற்கு சென்று விடுகிறார். மறுபக்கம் கோபி குடித்துக்கொண்டு தன்னுடைய நண்பனிடம் நான் தன்னுடைய அம்மாவிற்கு பெரிய துரோகம் செய்துவிட்டேன். யார் என்ன சொன்னாலும் நான் என் அம்மாவை நம்பி இருக்கணும். ஆனா நான் அவங்களை நம்பல.

Baakiyalakshmi Serial

அவங்க என்கிட்ட ராதிகாவை தள்ளி விடலன்னு சொன்னாங்க அப்போ கூட நான் நம்பாமல் போயிட்டேனே நானெல்லாம் இந்த உலகத்துல பிறந்திருக்கவே கூடாது அப்படி பொறக்காம இருந்திருந்தா எங்க அம்மாவுக்கு இவ்வளவு பெரிய அவமானம் வந்திருக்காது. எங்க அம்மா மட்டும் என்கிட்ட பேசலனா செத்து போயிருவேன் என்று புலம்பிக் கொண்டிருக்கிறார்.

Baakiyalakshmi Serial

அடுத்த கட்டத்தில் கமலா மீண்டும் மயூவை திட்டிக் கொண்டிருக்க, மயூ எழுந்து போய் ராதிகாவிடம் சாரி சொல்ல ராதிகா எப்படி நீ பாக்கியாவிடம் வீட்டில் நடந்த விஷயத்தை சொன்ன என்று கேட்க மயூ தனக்கு ஸ்கூல் சீக்கிரமாக விட்டது, பிறகு பார்க்கில் பாக்யாவை சந்தித்தது அப்போ எதார்த்தமாக சொன்னது என எல்லா விஷயத்தையும் சொல்ல மயூ பேசவிடாமல் கமலா இடை இடையே புகுந்து பாக்கியா மீது பழி சுமத்த முயற்சி செய்கிறார்.

Baakiyalakshmi Serial

அப்போது மயூ உண்மையாகவே ஈஸ்வரி பாட்டி அம்மாவை பிடித்து தள்ளிவிடல அவங்க அம்மாவ பிடிக்க தான் வந்தாங்க. அதுக்குள்ள அம்மா கீழ விழுந்துட்டாங்க அப்பவும் அவங்க ஹெல்ப் பண்ண தான் வந்தாங்க என்று சொல்கிறார். அதற்கு ராதிகா இதை ஏன் நீ முன்னாடியே என்கிட்ட சொல்லல வீட்ல இவ்வளவு பிரச்சனை நடந்துச்சு அப்பவே நீ என்கிட்ட சொல்லி இருக்கலாமே என்று கேட்க, சொல்ல பயமா இருந்தது என்று மயூ சொல்கிறார்.

Baakiyalakshmi Serial

பாக்கியா ஆன்ட்டி பேசும்போது அழுதாங்க பாவமா இருந்தது அதனால உண்மைய சொல்லிட்டேன் என்று சொல்ல, அப்போ நான் அழுததெல்லாம் உனக்கு பாவமா இல்லையா என்று ராதிகா கேள்வி கேட்கிறார். மறுபக்கம் பாக்கியா பிரியாணி சிக்கன் 65 என்று பெரிய விருந்து ஏற்பாடு செய்து ஈஸ்வரியின் விடுதலையை கொண்டாட கோபி கண்ணீரோடு வீட்டு வாசலில் வந்து நிற்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+