நீங்க பண்ணுனது ரொம்ப தப்பான விஷயம்.. ராதிகா கேட்ட கேள்வி.. நடுத்தெருவில் பாக்கியா சொன்ன வார்த்தை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஜூலை 18ஆம் தேதி முதல் 20-ம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. இதில் பாக்கியா மற்றும் ராதிகா இருவரும் மீண்டும் நேருக்கு நேர் தெருவில் சந்திக்கும் போது ராதிகா கடும் கோபத்தை காட்டுகிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்புதான் ரசிகர்களுக்கு இருக்கிறது. ஏற்கனவே ராதிகாவின் குழந்தை கலைந்து போனதற்கு காரணம் ஈஸ்வரி தான் என்று கமலா தொடுத்த வழக்கில் ஈஸ்வரி நிரபராதி என்று மயூ சொன்ன வாக்குமூலத்தால் ஈஸ்வரி விடுதலை ஆகி இருக்கிறார்.

இதைத் தொடர்ந்து கோபி பாக்யாவின் வீட்டிற்கு சென்று ஈஸ்வரியிடம் மன்னிப்பு கேட்க, ஈஸ்வரி இனி என்னுடைய மகனே கிடையாது என்னை நம்பாமல், நான் அவ்வளவு கெஞ்சியும் என்னை நடுத்தெருவில் விரட்டி விட்டியே... நீ என்னை அம்மா என்று சொல்லாதே. நான் செத்தால் கூட என்னுடைய முகத்தை நீ பார்க்க கூடாது. என்னுடைய ஒரே மகள் பாக்கியா தான் அவள் ஒரு மோசமானவனை கல்யாணம் செய்து அவன் அவளை விட்டு விட்டு போய்விட்டான்.
இப்போ என்னுடைய மகளோடு நான் இருக்கிறேன். என் மகள் மட்டும் எனக்கு போதும் என்று கோபியை அவமானப்படுத்தி விரட்டி விட்டிருக்கிறார். இதனால் கோபி ராதிகா வீட்டிற்கு வந்து என்ன செய்வார் என்று எதிர்பார்ப்பில் இருந்த நிலையில் கோபி ராதிகா வீட்டிற்கு வந்ததும் சோபாவில் அமர்ந்து அழுது கொண்டிருக்கிறார். அதை பார்த்து ரசிகர்கள் பீல் பண்ணினார்களோ இல்லையோ கமலா என்ன இவர் இப்படி மாறிவிட்டார் என்று அதிசயப்படுகிறார்.
இதுவரைக்கும் வில்லன் போல மிரட்டிக்கொண்டு காமெடி செய்து கொண்டிருந்த கோபி அழுது கொண்டிருப்பதை பார்க்கும்போது பலருக்கும் ஐயோ பாவம் என்று சொல்ல வைத்திருக்கும். ஆனால் இனி தன் மீது இருக்கும் தப்பை மறந்து வழக்கம் போல பாக்கியா தான் இத்தனைக்கும் காரணம் என்று சொல்லப் போகிறாரா அல்லது தன் தப்பை உணர்ந்து திருந்தி நடக்க போகிறாரா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இப்படியான நிலையில் இனி வரும் எபிசோடுகளுக்கான எபிசோடின் ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் ராதிகாவும் மயூவும் வெளியே நடந்து சென்று கொண்டிருக்கும்போது அந்தப் பக்கமாக வந்த பாக்யா மயூவிடம் ரொம்ப நன்றி என்று சொல்ல போக, ராதிகா தடுத்து நிறுத்துகிறார். அப்போது ராதிகாவிடம் பாக்கியா மன்னிப்பு கேட்கிறார்.
அதற்கு ராதிகா என்ன கேட்காமல் எப்படி என் பொண்ணை கூட்டிட்டு போவீங்க? போலீஸ் கோர்ட் கேஸ் எல்லாம் தெரிஞ்சுக்கிற வயசா அவளுக்கு என்று சொல்ல, அதற்கு பாக்கியா அப்படி இல்லை என்று தன் கருத்தை சொல்ல வர நிறுத்துங்க என்று கோபப்பட்ட ராதிகா இதே மாதிரி வேற ஒரு சிச்சுவேஷன் வருது உங்க பொண்ணு இனியாவை கோர்ட்டுக்கு நான் கூட்டிட்டு போனா உங்களுக்கு எப்படி இருக்கும்? என்று கேட்கிறார்.
அதற்கு பாக்யா இதை நானும் நிறைய யோசிச்சேன். ஆனா வேற வழி இல்லாம தான் கூட்டிட்டு வந்தேன் என்று சொல்ல, ராதிகா நீங்க பண்ணுனது ரொம்ப தப்பான விஷயம் பாக்கியா.. எப்போதும் நிலைமை ஒரே மாதிரி இருக்காது அப்போ நான் பாத்துக்குறேன் என்று மயூவை கோபமாக கூட்டிக்கொண்டு போகிறார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications