கோபிக்கும், பாக்யாவுக்கும் சமையல் போட்டி.. அதுவும் ஈஸ்வரி சொன்ன வார்த்தை! அதிர்ச்சியில் ராமமூர்த்தி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் வரும் ஞாயிற்றுக்கிழமை ஜூலை 21ஆம் தேதி 2 மணி நேர எபிசோடு ஒளிபரப்பாக இருக்கிறது. அதற்கான ப்ரோமோ இப்பொழுது வெளியாகி இருக்கிறது. அதில் பாக்யா மற்றும் கோபிக்கு இடையே சமையல் போட்டி நடைபெறுகிறது.

பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று எதிர்பார்ப்பு எல்லோருக்கும் இருக்கிறது. ஒரு வழியாக ஈஸ்வரி ராதிகாவின் குழந்தை கலைந்ததற்கு காரணம் இல்லை என்பது மயூ மூலமாக கோர்ட்டில் நிரூபணம் ஆகி இருக்கிறது. அதைத் தொடர்ந்து கோபி ஈஸ்வரியிடம் மன்னிப்பு கேட்க ஈஸ்வரி, நீ என்னுடைய பிள்ளையே கிடையாது இனி உனக்கும் எனக்கும் சம்பந்தம் கிடையாது. நீ எப்போவோ செத்துப்போயிட்டா...

Television Baakiyalakshmi Serial vijay TV

நான் செத்தா கூட என் முகத்துல முழிக்க கூடாது என்று பேசி தன் தலையில் தண்ணீரை ஊற்றி தலைமுழுகி கோபியை வீட்டை விட்டு துரத்தி இருக்கிறார். இது நேற்று நடந்தது ஆனால் இன்று மீண்டும் கோபிகா வீட்டில் வந்து நின்று அம்மா என்று ஈஸ்வரியை கூப்பிட்டுக் கொண்டிருக்கிறார். இதனால் ஈஸ்வரி மனம் மாறுவாரா இல்லை கோபி மீது கோபத்தோடு இருப்பாரா என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

இது ஒரு பக்கம் நடக்க மறு பக்கத்தில் பாக்கியா தன்னுடைய மாமியார் மீது பொய் வழக்கு தொடுத்துட்டாங்களே என்று ராதிகா மீது கோபப்படுவார்கள் என்று பார்த்தால் மயூவை கோர்ட்டுக்கு கூட்டிட்டு போனதிற்காக ராதிகாவிடம் மன்னிப்பு கேட்டு விட்டு மயூ தைரியமாக உண்மையை சொன்னதற்காக ராதிகாவிடமே நீங்க உங்க பிள்ளையை நல்லா வளர்த்து இருக்கீங்க என்று பாராட்டு பத்திரம் வாசித்துக் கொண்டிருக்கிறார். இது இன்றைய எபிசோடு பார்க்கும்போது கடுப்பாகத்தான் இருக்கும்.

கதாநாயகி என்றால் தைரியமாக எல்லாவற்றையும் தகர்த்தெறிந்து முன்னேறுவார் என்று பார்த்தால் இந்த பாக்கியா மட்டும் எப்போதுமே தியாக சுடராக இருக்கிறார் என்பது பார்க்கும் போதே மனதிற்குள் ஆட்டோமேட்டிக்காக தோன்றி விடுகிறது. இந்த நிலையில் அடுத்து கோபிக்கும் பாக்யாவிற்கும் பஞ்சாயத்து தொடங்கி இருக்கிறது.

Television Baakiyalakshmi Serial vijay TV

அதாவது வரும் ஞாயிற்றுக்கிழமை 2 மணி நேரம் எபிசோடு நடைபெறுகிறது. இரண்டு வாரங்களாக பிரச்சனைகளோடு இந்த சீரியல் ஒளிபரப்பாகி வந்த நிலையில் இப்போது கலகலப்பாக கொண்டு போக வேண்டும் என்பதற்காக பாக்யா மற்றும் கோபி இருவரும் ஒரு சமையல் போட்டியில் கலந்து கொள்கிறார்கள். அதில் சமையலையே தெரியாத கோபி தன்னுடைய செஃப்களை மட்டும் நம்பி களத்தில் குதித்து இருக்கிறார்.

பாக்யாவோடு ஈஸ்வரி ராமமூர்த்தி என மொத்த குடும்பமும் வந்து நிற்க, ஈஸ்வரியை பார்த்ததும் கோபி அம்மாகாலில் விழுந்து நான் இந்த போட்டியில் ஜெயிக்கனும்னு ஆசீர்வாதம் பண்ணுங்க என்று இவ்வளவு நடந்த பிறகும் எல்லாரும் முன்பும் சொல்ல, ஈஸ்வரி பாக்கியா தான் இந்த போட்டியில் ஜெயிக்கணும் என்று சொல்ல இதை பார்த்து ராமமூர்த்தி அதிர்ச்சியாகி நிற்கிறார்.

உண்மையில் ஈஸ்வரி இவ்வளவு மாறிட்டாரா என்பது பார்க்கும் ரசிகர்களுக்கு மட்டுமல்ல ராமமூர்த்திக்கும் கொஞ்சம் அதிர்ச்சியாக தான் இருக்கிறது. ஆனாலும் ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+