போட்டியில் கோபிக்கு கிடைத்த அதிர்ச்சி.. செழியனுக்கு அதிர்ச்சி கொடுத்த இனியா.. பதறும் பாக்கியா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஜூலை 23ஆம் தேதி என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் இனியா செழியனிடம் ஏமாற்றிவிட்டு பப்புக்கு போயிருக்கும் நிலையில் இனியாவை தேடிப்போன செழியனுக்கு அதிர்ச்சி கிடைத்திருக்கிறது. மறுபக்கத்தில் பாக்கியா மற்றும் கோபிக்கு இடையே சமையல் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அது பற்றி பார்க்கலாம்.
அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் பாக்யாவிற்கும் கோபிக்கும் இடையே இறுதிப்போட்டி விறுவிறுப்பாக நடக்க நடுவர்கள் என்ன சமைக்கிறீங்க போட்டியில் ஜெயிப்பீங்களா? என்று கேட்க, பாக்யா நான் இந்த போட்டியில் 100 சதவீதம் சமைப்பேன் என்று தான் சமைக்கும் டிஷ் பற்றி சொல்கிறார். கோபியும் நானும் ஜெயிப்பேன் என்று சொல்கிறார். ஆனால் அவர் சமைக்கும் டிஷ் பெயர் கூட அவருக்கு சரியாக சொல்ல தெரியவில்லை.

இதை பார்த்த செல்வியும் ஈஸ்வரியும் கோபியை திட்டிக் கொண்டிருக்கின்றனர். அப்போது கோபி தன்னுடைய செஃப் இடம் நல்லபடியா செய்து முடித்து விடுங்கள் இல்லைனனா மானம் மரியாதை எல்லாம் போயிடும் என்று சொல்கிறார். இதற்கிடையே பாக்கியா போனை எடுத்து பார்த்து சமைத்துக் கொண்டு இருக்க செல்வி என்னக்கா சமையல் மறந்து போச்சா வீடியோ பார்த்து சமைக்கிறியா என்று கேட்க இல்ல இனியா இன்னும் போனை எடுக்கல செழியனுக்கு போன் போட்டா அவனும் எடுக்கல அதான் பயமா இருக்கு என்று சொல்ல ஈஸ்வரி இனியாவை பற்றி யோசிக்காமல் நீ சமைக்கிறது மட்டும் பாரு என்று சொல்கிறார்.
ஆனாலும் பாக்கியா ஒரு நிமிஷம் நான் இனியாவுக்கு போன் பண்ணி பாத்துட்டு வந்துருவேன் என்று சொல்லி தனியாக சென்று போன் செய்ய இனியா அப்போதும் எடுக்காமல் டான்ஸ் ஆடிக் கொண்டிருக்கிறார். உடனே செழியனுக்கு போன் செய்து விசாரிக்க நான் இனியா பிரண்டு வீட்டுக்கு வெளியேதாமா இருக்கேன் இனியாவை கூப்பிட போறேன் என்று சொல்லி ஃபோனை வைக்கிறார்.

பிறகு செழியன் இனியா பிரண்ட் பிரியா வீட்டு கதவை தட்ட வீட்டுக்குள் இருந்து வந்த வேலைக்காரி வீட்ல யாரும் இல்ல. நான் இந்த வீட்ல தான் வேலை செய்கிறேன். நான் வரும்போது யாரும் வீட்ல இல்ல பூட்டி இருந்தது என்கிட்ட இருக்கிற சாவியை வைத்து திறந்து தான் வீட்டிற்குள் வந்தேன் என்று சொல்லி வீட்டை பூட்டிக்கொண்டு அவர் கிளம்ப செழியன் ஒன்றும் புரியாமல் நிற்கிறார்.
என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி கொண்டு இருக்க அம்மாவுக்கு போன் செய்து விடலாமா? என்று போனை எடுத்து பிறகு வேண்டாம் அவங்க பயந்துடுவாங்க என்று முடிவை மாற்றிக் கொள்கிறார். மறுபக்கத்தில் சீனியர்ஸ் இனியா நம்பரை கேட்டு பப்பில் தகராறு நடக்க இனியாவின் பிரெண்ட்ஸ் தர முடியாது என்று சொல்ல, அவர்களுக்குள் சண்டை உருவாகிறது.
அந்த நேரத்தில் இனியா பாக்யாவிற்கு போன் செய்ய வெளியே வந்ததும் இவர்களை பார்த்து பிரித்து விட முயற்சி செய்ய பவுன்சர்ஸ் வந்து சண்டையை பிடிக்கின்றனர். பப் ஓனர் போலீசுக்கு தகவல் கொடுக்க இவர்கள் எல்லோரும் வேண்டாம் என்று அழுகின்றனர். அடுத்ததாக கோபியின் செஃப் செய்த கேக் கருகி போய்விட கோபி டென்ஷனாக இருக்கிறார். அதற்கு நடுவர்கள் ஏதாவது புது டிஷ் பண்ணுங்க என்று கூல் செய்கின்றனர்.

ஆனால் பாக்கியா டிஷ் செய்து முடித்து ஒரு பௌலில் மாற்றி அதை ஃப்ரிட்ஜில் வைக்க சொல்லிவிட்டு திரும்பவும் செழியனுக்கு போன் செய்து இனியா பற்றி விசாரிக்க செழியன் இனியா வந்துவிட்டதாகவும் ஒரு ரெஸ்டாரண்டில் சாப்பிட்டுக் கொண்டிருப்பதாகவும் பொய் சொல்லி சமாளிக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications