பாக்கியலட்சுமி: இனியாவை காப்பாற்றிய ராதிகா.. ஆனால் பாக்யாவுக்கு ஆப்பு வச்சுட்டாங்களே
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஜூலை 24ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் இனியா பப் போன இடத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் போலீஸ் வந்து அவரை கைது செய்து வீட்டிற்கு கூட்டிட்டு போக முயற்சி செய்தபோது அங்கு ராதிகா வந்து இனியாவை காப்பாற்றுகிறார். ஆனால் பாக்கியாவிற்க்கு பெரிய ஆப்பு வைத்திருக்கிறார். அதை பற்றி பார்க்கலாம்.
பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் இனியா மற்றும் அவருடைய நண்பர்கள் எல்லோரும் எங்களை விட்டுடுங்க என்று பப் ஓனரிடம் கெஞ்ச அவர் போலீஸ் வந்து பேசிக்கட்டும் என்று சொல்கிறார். அதற்கு ஆண்கள் எல்லோரும் நாங்கள்தான் குடிச்சிருக்கோம் அவங்க யாரும் குடிக்கல அவங்களையாவது விட்டுடுங்க என்று கேட்க ஓனர் மனசு மாறி பெண்களை மட்டும் போக சொல்ல அவர்களும் கிளம்பி வெளியே வரும்போது போலீஸ் உள்ளே வந்து விடுகின்றனர்.

பிறகு போலீஸ் உள்ளே இருந்த எல்லோருடைய ஐடி கார்டுகளையும் வாங்கி வயசை பார்க்க அங்கு எல்லோருக்கும் 19 வயது ஆகிறது. அதை பார்த்ததும் போலீஸ் இந்த வயசுலயே நீங்க எப்படி பப்புக்கு வந்தீங்க? நீங்க எப்படி இவங்கள உள்ளே விட்டீங்க என்று கேள்வி எழுப்புகின்றனர். அதோடு நீங்க இங்கே வந்தது உங்க வீட்டுக்கு தெரியுமா என்று கேட்க எல்லோரும் தெரியாது என்று சொல்ல படிச்சு பெரிய ஆளா வருவதை விட்டுட்டு பப், பார்க் என்று சுத்திட்டு இருக்கீங்க...
உங்கள மாதிரி உள்ளவங்களால தான் ரோட்டில் நிறைய ஆக்சிடென்ட் ஆகிறது என்று திட்டி உங்களை எல்லாம் ஜெயில்ல போட்டா தான் புத்தி வரும் உங்களை வெளியே அனுப்பிவிட்டு வீட்டில் சந்தோசமா இருக்கும் இந்த பெற்றோருக்கும் அப்போ தான் புத்தி வரும் என்று அதிர்ச்சி கொடுக்க, தெரியாம பண்ணிட்டோம் என்ன விட்டுடுங்க என்று எல்லோரும் மன்னிப்பு கேட்கின்றனர்.
செழியன் அந்த நேரத்தில் இனியாவுக்கு போன் செய்ய இனியா என் அண்ணன் கிட்ட பேசிக்கட்டுமா என்று அதற்கு லேடி போலீஸ் அதெல்லாம் முடியாது ஸ்டேசனுக்கு வந்து எல்லாரிடமும் பேசலாம் வா என்று ஜீப்பில் ஏற சொல்ல அந்த நேரத்தில் ஜீப் இல்லாததால் ஜீப்புக்காக பப் வாசலில் எல்லோரும் காத்துக் கொண்டிருக்கும் போது அங்கு தன்னுடைய தோழியோடு வந்த ராதிகா இதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.

பிறகு போலீஸிடம் என்ன ஆச்சு என்ன பிரச்சனை என்று கேட்க, இனியா நடந்த விஷயத்தை சொல்லி எங்களை காப்பாத்துங்க என்று கெஞ்சுகிறார். ராதிகா போலீசிடம் இனியாவிற்காக பேச இனியாவின் தோழிகளும் எங்களையும் விட்டுவிட சொல்லுங்க என்று கெஞ்சுகின்றனர். அப்போது லேடி போலீஸ் எதுவாயிருந்தாலும் இன்ஸ்பெக்டர் கிட்ட பேசுங்க என்று சொல்ல, ராதிகா இன்ஸ்பெக்டரிடம் அவங்கள ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போனா வாழ்க்கையே போய்விடும் விட்டுடுங்க என்று கேட்க இதெல்லாம் அவங்க யோசித்து இருக்கணும்.. இங்கே எதுவும் பேச முடியாது என்று சொல்லி விடுகிறார்.
உடனே ராதிகா தன் அண்ணன் மூலமாக டிஸ்பியிடம் பேசியதால் அவர் இன்ஸ்பெக்டரிடம் பேசி இனியாவையும் அவருடைய தோழிகளையும் வெளியே கூட்டிட்டு வருகிறார். பிறகு இனியாவை கூட்டி சென்று அறிவில்லையா என்று திட்டிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் செழியன் போன் செய்ய போனை வாங்கிய ராதிகா நான்தான் ராதிகா பேசுறேன் இனியா இங்கே தான் இருக்கா இப்போ அவ உனக்கு அனுப்புற லொகேஷனுக்கு வா பேசிக்கலாம் என்று போனை வைக்கிறார்.
இனியா அனுப்பிய லொகேஷன் பப் முகவரியாக இருப்பதை பார்த்து செழியன் அதிர்ச்சியாகி அங்கு வந்து இனியாவை என்ன பண்ணுனீங்க என்று ராதிகாவிடம் சத்தம் போட, அவளை நான் தான் காப்பாற்றினேன் என்று ராதிகா பதிலடி கொடுக்கிறார். நான் மட்டும் இப்போ இனியாவை காப்பாத்தலைன்னா அவ ஸ்டேஷனில் தான் இருந்திருப்பா. குடும்பத்தோட ஸ்டேஷனுக்கு போய் அவமானப்பட்டு இருப்பிங்க.

பப்புக்கு வந்து குடிச்சிட்டு கும்மாளம் போட்டா போலீஸ் புடிச்சிட்டு தானே போவாங்க என்று சொல்ல இனியா பப்புக்கு வந்தது உண்மைதான் ஆனால் குடிக்கல என்று சொல்ல செழியன் இனியாவை திட்டி அழைத்துச் செல்ல முயற்சி செய்த, ராதிகா இனியாவின் கையை பிடித்து அப்படி எல்லாம் விட்டுவிட முடியாது உங்க அம்மாவுக்கு போன் போட்டு இங்க வர சொல்லு என்று சொல்ல இனியாவும் செழியனும் அதிர்ச்சியாகி இருக்கின்றனர்.

மறு பக்கத்தில் கோபி, பாக்யாவிற்கு இறுதி சுற்று போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இருவரும் சமையல் செய்து முடித்திருந்த நிலையில் நடுவர்கள் இறுதி தீர்ப்பு சொல்வதற்காக தயாராகி இருக்கின்றனர். அப்போது கோபி எப்படியா இருந்தாலும் பாக்கியாதான் ஜெயிக்கப் போறா ஒவ்வொரு முறையும் எனக்கு பாக்யாவிடம் தோற்றுக்கொண்டே இருப்பது வேலையா போயிடுச்சு என்று புலம்பிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications