பாக்கியலட்சுமி: கோபியை பழிவாங்க மாமியார் எடுத்த முடிவு‌..கதறி அழுத ராதிகா..ஈஸ்வரி சொன்ன ஃப்ளாஷ் பேக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஜூலை இரண்டாம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் கமலா மீண்டும் மீண்டும் கோபி மற்றும் ஈஸ்வரியை அவமானப்படுத்தி பேச கோபமான கோபி இன்றும் கமலாவை அடிக்க கை ஓங்குகிறார்.

இந்த நிலையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் ரெஸ்டாரண்டில் கோபமாக இருக்கும் கோபிக்கு அவருடைய நண்பர் வீட்டு பிரச்சனையை பிசினஸில் காட்டாத ஏற்கனவே ஒருமுறை தோற்றுப் போய்விட்டா, இப்போ மீண்டும் நீ அதே தப்பு செய்யாத என்று அட்வைஸ் செய்கிறார்.

Television Baakiyalakshmi Serial vijay TV

அடுத்ததாக கமலா கோபி தன்னை அடிக்க கை ஓங்கியது நினைத்து வருத்தமாக இருக்க ராதிகா கோபி ஏன் இப்படி மாறிட்டாருன்னு தெரியவில்லை. என் மேலேயும் மயூ மேலேயும் அவ்வளவு பாசமா இருந்தாரு. ஆனா அந்த கோபி இப்ப எங்க போனாருன்னு தெரியல. இவ்வளவு நடந்த பிறகும் அவங்க அம்மாவுக்கு தான் அவர் சப்போர்ட் பண்ணி பேசுறாரு என்று கண்கலங்கி அழுது கொண்டிருக்கிறார்.

அதற்கு கமலா நானே உன் வாழ்க்கையை கெடுத்துட்டேன். நீ ஏற்கனவே செஞ்ச கல்யாணம் தப்பா போனபோது ஒரு குழந்தையை வச்சு தனியா நீ தவிச்சு போய் விடக்கூடாது என்பதற்காகத்தான் நான் இவரை கல்யாணம் பண்ணிக்க என்று சொன்னேன். ஆனா அவர் இப்படி எல்லாம் இருப்பார்ன்னு நான் நெனச்சு பாக்கல என்று பீல் பண்ணி பேசிக் கொண்டிருக்கிறார்.

அதற்கு ராதிகா என் வாழ்க்கையே போச்சு. இப்ப நான் என்ன பண்ணட்டும் என்று கண்கலங்கி கேட்ட, அதற்கு கமலா எல்லாத்தையும் நானே சரி பண்ணுறேன் என்று சொல்கிறார். அடுத்ததாக பாக்யா வீட்டில் ஜெனி பால் வைத்துவிட்டு கவனிக்காமல் மாடிக்கு சென்று விட பால் பொங்கி கேஸ் லீக் ஆகுவதால் அமிர்தா ஓடி வந்து அடுப்பை ஆஃப் பண்ணுகிறார். பிறகு ஜெனி வந்ததும் கேஸ் ஆப் பண்ணிட்டு போயிருக்கலாமே என்று சொல்ல இருவருக்கும் இடையே வாக்குவாதம் உருவாக அது சண்டையாக மாறுகிறது.

அந்த நேரத்தில் எழில் மற்றும் செழியன் இருவரும் கீழே வந்து இருவரையும் சமாதானம் செய்து மாடிக்கு அழைத்து செல்கின்றனர். மறுபக்கத்தில் கோவிலில் ஈஸ்வரி தன்னுடைய பழைய நினைவுகள் கதை எல்லாம் மற்றும் பாக்யா, ராமமூர்த்தியிடம் சொல்லிக் கொண்டிருக்க ஈஸ்வரியின் நடவடிக்கை பழைய மாதிரி அவர் சந்தோஷமாக இருப்பதை பார்த்து ராமமூர்த்தியும் பாக்கியாவும் சந்தோஷப்படுகின்றனர்.

பிறகு கோபி ராதிகா வீட்டிற்கு வந்து ரெஸ்டாரண்ட் சம்பந்தமான பைலை தேட கமலாவிடம் பார்த்தீர்களா என்று கேட்ட அவர் அமைதியாகவே இருக்க, ராதிகா எங்கே காணவில்லை என்று கேட்க அதற்கும் கமலா எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார். அதற்கு கோபி இப்படியே இருந்தா என்ன அர்த்தம்? பதில் சொல்லுங்க என்று கேட்க அதற்கு கமலா அவ வெளியே போய் இருக்கா என்று சொல்ல வெளியே போயிருக்கான்னு எதுக்கு அனுப்பினீங்க என்று கேள்வி கேட்கிறார்.

அதற்கு கமலா இந்த வீட்டில் நிம்மதி இல்லைன்னு சொல்லுதா எனக்கு மூச்சு முட்டி செத்துடுவேன் போல இருக்குன்னு சொல்லுறா அவளை இந்த வீட்டில இருக்க சொல்லி சாக சொல்லட்டுமா என்று கேட்க கோபி ராதிகாவுக்கு போன் போட, கமலா எதுக்கு இப்போ அவளை போன் பண்ணி வர சொல்ல போறீங்களா? என்று கோபப்படுகிறார்.

என்னுடைய பிள்ளையோட வாழ்க்கை இப்படி ஆகணும்னு நாங்க எதிர்பார்க்கவே இல்லை. ஏற்கனவே ஒரு வாழ்க்கை சரியா அமையல நீங்க நல்ல வாழ்க்கை கொடுப்பீங்கன்னு நாங்க நினைச்சா ஆனா இங்கேயும் குடிகார புருஷன், கொலைக்காரி மாமியார் அதனால் அவள் எப்படி இந்த வீட்ல நிம்மதியா இருப்பா என்று சொல்ல கோபி கமலாவை மீண்டும் அடிக்க கை ஓங்குகிறார். அதை பார்த்து கமலா அதிர்ச்சியாகி நிற்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+