பாக்கியலட்சுமி: கமலா கொடுத்த கம்ப்ளைன்ட்க்கு ராதிகா சொன்ன வார்த்தை.. பாக்யாவிற்கு தெரியவரும் உண்மை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஜூலை நான்காம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்கலாம். அதில் ஈஸ்வரி மீது கமலா போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கும் விஷயம் ராதிகாவிற்கு தெரிய வருகிறது. அதே நேரத்தில் வீட்டிற்கு போலீஸ் தேடிவந்த விஷயம் கேட்டு பாக்கியா முக்கிய முடிவு எடுக்கிறார். அது பற்றி பார்க்கலாம்.
அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் பாக்யா வீட்டிற்கு வந்த போலீஸ் ஈஸ்வரி பற்றி விசாரிக்க குடும்பத்தினர் யார் கம்ப்ளைன்ட் கொடுத்தது என்று கேட்டதும் அவர்கள் கமலா என்ற பெயரை சொல்ல, செல்வி அது ராதிகா உடைய அம்மா என்று சொன்னதும் எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

பிறகு ஈஸ்வரி ஊரில் இல்லை என்பதை புரிந்து கொண்ட போலீஸ் நாளைக்கு அவங்க வந்ததும் தகவல் கொடுத்து அவங்களை கூட்டிட்டு வரணும். இல்லன்னா நாங்களே அவங்கள கைது பண்ணி கூட்டிட்டு போயிருவோம் என்று வார்னிங் கொடுத்துவிட்டு கிளம்புகின்றனர்.
இதை எடுத்து செல்வி ராதிகாவையும் அவருடைய அம்மாவையும் திட்டிக் கொண்டிருக்கிறார். மறுபக்கத்தில் ஈஸ்வரி, ராமமூர்த்தி, இனியா எல்லோரும் சந்தோஷமாக இருக்க அதை பார்த்து பாக்கியா பீல் பண்ணிக் கொண்டிருக்கிறார். அதோடு அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் ஜெனி ஆன்ட்டிக்கு இந்த விஷயம் தெரியனும் என்று சொல்ல, செழியனும் ஆமாம் அம்மாவுக்கு இதை சொல்லிவிட வேண்டும் என்று சொல்ல எழில் இப்போதைக்கு சொல்ல வேண்டாம் என்று மறுக்கிறார்.

அம்மாவுக்கு தெரிஞ்சா ரொம்ப பயப்படுவாங்க என்று சொல்ல, செழியன் இப்போ சொல்லலன்னா கடைசியில் அவங்களுக்கு தெரியும் போது ரொம்ப பதறிடுவாங்க. அது அவங்களுக்கு ஷாக்கிங்கா இருக்கும் என்று சொல்லி போன் செய்கிறார். போனை எடுத்த பாக்கியா எழில் பற்றி விசாரிக்கிறார். அப்போது செழியன் அவன் இன்னும் கதை சொல்ல போகல இங்கே தான் இருக்கிறான். இங்க வேறு ஒரு பிரச்சனைம்மா...
நீ கொஞ்சம் தனியாவா என்று சொல்லி நான் சொல்றதை கேட்டு நீ பதறாதே என்று சொல்லிக்கொண்டு போலீஸ் ஈஸ்வரியை தேடி வந்தது, கமலா கம்ப்ளைன்ட் கொடுத்த விஷயம் போன்றவற்றை சொல்ல பாக்கியா அதிர்ச்சி அடைகிறார். அதோடு ஈஸ்வரி உட்பட எல்லோரும் சந்தோஷமாக இருப்பதை பார்த்து இந்த விஷயத்தை எப்படி சொல்றது என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்.

மறுபக்கத்தில் வெளியே போன ராதிகா வீட்டிற்கு வந்ததும் கமலா கோபி தன்னிடம் பேசியது பற்றியும் அதனால் போலீசில் தான் கம்ப்ளைன்ட் கொடுத்த விஷயத்தை பற்றியும் சொல்ல ராதிகா ஏமா இப்படி பண்ணுன என்று கோபப்பட்டு பதறுகிறார். அதற்கு கமலா நான் செஞ்சது தான் சரி, அந்த அம்மா ஜெயிலுக்கு போகணும் அப்பதான் மாப்பிள்ளைக்கு புத்தி வரும் என்ன நடக்கணுமோ அதை நான் பாத்துக்குறேன். நீ அதை பத்தி கவலைப்படாத என்று ராதிகாவுக்கு ஆறுதல் சொல்லி சமாளிக்கிறார்.

பிறகு பாக்கியா கும்பகோணத்தில் இருந்து ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருக்கும் இப்போது ஈஸ்வரி எனக்கு தூக்கம் வருது என்று நிம்மதியாக தூங்க, பாக்யா சென்னைக்கு போனதும் என்ன நடக்கப் போகிறது என்று தெரியலையே என்று கண்கலங்கி கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications