ஐயோ பாவம்! கோபி வீட்டுக்கு மீண்டும் போன பாக்யா.. அவமானப்படும் ராதிகா.. ஈஸ்வரி இப்படி சொல்லிட்டாங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஜூன் 15ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம். அதில் ராதிகா வீட்டிற்கு பாக்கியா மீண்டும் போய் ஈஸ்வரிக்கு சாப்பாடு கொடுத்திருக்கிறார். அதற்கு கோபி சொன்ன பதிலை கேட்டு ராதிகா கோபம் அடைகிறார்.

அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் கமலாவும் ராதிகாவும் பேசிக் கொண்டிருக்க காலிங் பெல் சத்தம் கேட்டதும் கமலா கதவைத் திறக்க பாக்கியா நிற்பதை பார்த்து ஷாக் ஆகிறார். நீ எதுக்கு இங்க வந்த என்று கமலா கேட்க, அத்தைக்கு சாப்பாடு கொண்டு வந்தேன் என்று பாக்கியா சொன்னதும் மாப்பிள்ளை தான் வேளை வேளைக்கு அவங்களுக்கு சாப்பாடு தராங்களே நீ எதுக்கு எடுத்துட்டு வந்த என்று கேள்வி கேட்கிறார்.

அதற்கு அத்தை தான் கொண்டுட்டு வர சொன்னாங்க என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது ஈஸ்வரி வந்து பாக்கியா வா வா நீ எதுக்கு கண்டவங்க கிட்ட பேசிட்டு இருக்க என்று உள்ளே கூப்பிட்டு செல்ல, அதற்கு கோபமான கமலா இது சரியா படல பாக்கியா இங்கே வரதை தடுத்து நிறுத்து என்று ராதிகாவிடம் ஏற்றி விடுகிறார். பாக்கியா சாப்பாடு கொடுத்துவிட்டு வெளியே போனதும் இவங்க இங்கே எதற்கு வராங்க? இனிமே அவங்க இங்கே வரக்கூடாது என்று சொல்கிறார்.

அதோடு இது என் வீடு இங்க யார் வரணும் யார் வரக்கூடாது என்று நான் தான் முடிவு பண்ணுவேன் என்று ராதிகா சொல்ல, அதற்கு ஈஸ்வரி கோபி அந்த வீட்ல இருக்கும்போது நீ அங்க வந்து மாசக்கணக்கா தங்குனியே அப்போ இதெல்லாம் உனக்கு தோணலையா? என்று பதிலடி கொடுத்து வெளியே அனுப்புகிறார். பிறகு கோபி வந்ததும் ராதிகா பாக்யா எதுக்கு இங்க வராங்க? இனிமே வரக்கூடாது என்று சொல்ல, கோபி பாக்கியா வர்றதுல உனக்கு என்ன பிரச்சனை? அம்மாவை பார்க்க வர தான் செய்வா...

பாக்யா சாப்பாடு கொண்டு வந்து கொடுக்கிறது எனக்கு கொஞ்சம் உதவியா இருக்கு என்று சொல்ல ராதிகா இன்னும் கடுப்பாகிறார். அடுத்ததாக இனியாவிற்கு பிறந்தநாள் என்பதால் பாக்கியா தூங்காமல் காத்திருந்து பிறந்தநாள் வாழ்த்து சொல்ல செழியன், ஜெனி, அமிர்தா, எழில் என எல்லோரும் வந்து வாழ்த்து சொல்கின்றனர்.

அடுத்து எல்லோரும் தூங்க சென்றதும் பாக்கியா இனிமே உன் வாழ்க்கையில் நிறைய மனிதர்களை பார்ப்பா.. காதல், ரிலேஷன்ஷிப் என்று எல்லாம் வரும். எல்லாத்துக்கும் முன்னாடி நீ ஒரு பெரிய இடத்துக்கு போய் இருக்கணும். அம்மாவை மாதிரி இனி எந்த இடத்திலும் அவமானத்தை பார்க்காமல் நீ பெரிய இடத்துக்கு போகணும் என்று அட்வைஸ் கூறுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+