சம்பவம் இருக்கு! ஞாயிற்றுக்கிழமை 2 மணி நேரம்.. மணப்பெண்ணாகும் பாக்யா.. கோபிக்கு தேவையில்லாத வேலை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் வரும் 16ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 2 மணி நேர எபிசோடு ஒளிபரப்பாக போகிறது. அது குறித்த ப்ரோமோ இப்போது வெளியாகி இருக்கிறது.
பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யா வீட்டில் இருந்து கோபியோடு ஈஸ்வரியும் கோபி வீட்டிற்கு சென்றிருந்த நிலையில் அதனால் ராதிகா மற்றும் கோபிக்கு இடையே பிரச்சனைகள் வெடித்துக் கொண்டிருக்கிறது. அதுபோல வீட்டில் நடந்த பிரச்சனையில் ஈஸ்வரி சாப்பிடாமல் இருந்ததால் உடல்நிலை சரியில்லாமல் போக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

ஆனாலும் ஈஸ்வரி நான் என்னுடைய மகனோடு தான் இருப்பேன். நான் இல்லை என்றால் என்னுடைய மகன் வருத்தப்படுவான் என்று கோபி வீட்டில் இருந்து பாக்கியா வீட்டிற்கு வருவதற்கு மறுத்துவிட்டார். கோபியும் நானும் எங்க அம்மாவை வீட்டுவிட்டு அனுப்ப மாட்டேன் என்னோடுதான் வைத்துக் கொள்வேன் என்று சொல்லி இருக்கிறார். ஆனாலும் ரெஸ்டாரண்டையும் கவனித்துக் கொண்டு ஈஸ்வரியும் கவனிக்க முடியாமல் கோபி திணறிக் கொண்டிருக்கிறார்.
அதனால் பாக்கியாவிடம் நீ மட்டும் எப்படி எல்லா வேலைகளையும் சமாளித்து கொள்கிறாய் என்று டிப்ஸ் கேட்க அதற்கு பாக்கியா நீங்கதான் பெரிய அறிவாளி ஆச்சே, என்கிட்ட எதுக்கு கேக்குறீங்க? என்று நோஸ்கட் கொடுத்திருக்கிறார். இப்படியான நிலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை இனியாவின் பிறந்தநாள் பங்க்ஷன் நடைபெறுவது போன்று இரண்டு மணி நேரம் எபிசோடு ஒளிபரப்பாக இருக்கிறது.
அதோடு இனியாவின் பிறந்தநாளுக்கு பழனிசாமியின் அம்மா மற்றும் அக்காவும் வந்திருந்த நிலையில் அவர்கள் இருவரும் பூ, பழம் வாங்கிட்டு வந்திருக்கலாம் என்று சொல்ல அதைக் கேட்டு கோபி எதற்காக பூ பழம் எல்லாம் வாங்கிட்டு வர போறீங்க? என்று கேட்க, பாக்யாவை பழனிச்சாமிக்கு பொண்ணு கேட்கிறதுக்காகத்தான் நாங்க பூ பழத்தோடு வரணும்னு சொல்லிட்டு இருந்தோம் என்று சொல்ல,
அதைக் கேட்டு கோபமான கோபி பாக்கியாவிடம் இந்த வயசுல உனக்கு கல்யாணம் தேவையா? உனக்கு அசிங்கமா இல்லையா? நீ அந்த பழனிச்சாமியை கல்யாணம் பண்ண போறியா? என்று கேள்வி கேட்க ஒரு கட்டத்தில் கோபமான பாக்கியா நிறுத்துங்க என்று கத்துகிறார். அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று எதிர்பார்ப்போடு ப்ரோமோவை முடித்து வைத்திருக்கும் நிலையில் இந்த வாரம் இது குறித்த பஞ்சாயத்து இருக்கப் போகிறது என்பது தெளிவாகிறது.
அதே நேரத்தில் ஈஸ்வரி இனியாவின் பிறந்தநாள் பங்க்ஷனில் கலந்து கொண்டது போல தெரியவில்லை. அதனால் ஈஸ்வரியிடம் கோபி பாக்யாவிற்கும் பழனிச்சாமிக்கும் கல்யாணம் பண்ண போவதாக பழனிச்சாமியின் குடும்பத்தினர் பேசுவதை பற்றி கொளுத்தி போட்டால் அதை வைத்து ஈஸ்வரி பெரிய பிரச்சனை திறப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாக்யாவிற்கு பழனிச்சாமியை திருமணம் செய்ய வேண்டும் என்று ஆசை இல்லாமல் இருந்தாலும் கோபி செய்யும் வேலையால் பாக்கியாவும் திருமணத்திற்கு சம்மதம் சொல்லி விடுவாரா? என்ற எதிர்பார்ப்பும் வருகிறது. என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
சிறகடிக்க ஆசையில் ரசிகர்கள் நினைத்தது நடந்தது.. இனியாவது விஜயா திருந்துவாரா? முத்து கொடுத்த செம ட்விஸ்ட் -
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications