ஜெயிலுக்கு போகிறாரா ஈஸ்வரி? கோபிக்கு ராதிகா கொடுத்த அதிர்ச்சி.. கமலா எடுத்த முக்கிய முடிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஜூன் 21 ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் ஹாஸ்பிடலில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகிய ராதிகா இனி உங்க அம்மா நம்ம வீட்டில் இருக்கக் கூடாது என்று மிரட்டுகிறார். அதோடு கமலா ஈஸ்வரி மீது போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுக்கப் போவதாகவும் கூறுகிறார். என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் வீட்டுக்கு வந்த ஈஸ்வரி ஹாஸ்பிடலில் நடந்த விஷயங்களை நினைத்து பார்த்து அழுது கொண்டிருக்கிறார். மறுபக்கத்தில் கோபி ராதிகாவுக்கு ஒரு ஜூஸ், காபி ஏதாவது வாங்கிட்டு வரட்டுமா? என்று கேட்க கமலா உங்களுக்கு எதுக்கு அந்த கஷ்டம் நானே என் பொண்ணை பாத்துக்கிறேன் என்று கோபத்தில் சொல்கிறார்.

அப்போது மயூ கோபியுடன் கடைக்கு கிளம்ப அதை தடுத்து நிறுத்தும் கமலா மயூவை கூட்டிக்கொண்டு வெளியே போனதும் ராதிகா உங்கம்மா நம்ம குழந்தையை கொன்னுட்டாங்க. அவங்க இந்த அளவுக்கு போவாங்கன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல என்று கதறி அழ, கோபியும் கண்கலங்கி ஆறுதல் சொல்கிறார். மறுநாள் காலையில் பாக்யா ஈஸ்வரியை வந்து பார்க்க ஈஸ்வரி உண்மை எதுவும் சொல்லாமல் மறைத்து விடுகிறார்.
பாக்கியாவை அனுப்பி வைத்துவிட்டு மீண்டும் கண்கலங்கி அழுது கொண்டு இருக்கிறார். அப்போது ராதிகாவை டிஸ்சார்ஜ் செய்து கோபி வீட்டிற்கு அழைத்து வர தயாராக, ராதிகா நான் அம்மாவோட ஊருக்கு போய் ரெஸ்ட் எடுக்க போறேன் என்று அதிர்ச்சி கொடுக்கிறார். கோபி நான் உன்னை அனுப்ப மாட்டேன் என்று சொல்ல, ராதிகா என்னால இனி அந்த வீட்டுக்கு வர முடியாது என்று சொல்லிவிடுகிறார்.
அதற்கு கமலா என் பொண்ணை நான் எங்க ஊருக்கே கூட்டிட்டு போய் பார்த்துகிறேன். மயூவை அங்கேயே ஒரு ஸ்கூல்ல சேர்த்துக்கிறேன் உங்க அம்மா இருக்கிற வீட்டில் என் பொண்ணை இனி இருக்க விடமாட்டேன் என்று சொல்கிறார். கோபி எங்க அம்மா அப்படி எதுவும் பண்ணிருக்க மாட்டாங்க என்று ஈஸ்வரிக்கு சப்போர்ட் செய்து பேச, அதனால் கோபமான ராதிகா என்னால் அந்த வீட்டுக்கு வர முடியாது என்று உறுதியாக சொல்லிவிடுகிறார்.
அதற்கு கமலா ராதிகா அந்த வீட்ல இருக்கணும்னா உங்க அம்மாவை வீட்டை விட்டு வெளியே அனுப்புங்க. இல்லனா நான் போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் கொடுத்து அவங்களை உள்ளே தள்ளிடுவேன் என்று மிரட்டுகிறார். அதற்கு கோபி அம்மாவை எப்படி வெளியே அனுப்ப முடியும்? அவர்களிடம் பேசி இதுக்கு ஒரு சொல்யூஷன் தரேன் என்று சொல்ல, ராதிகா அந்த சொல்யூஷன் நான் எதிர்பார்க்கிற மாதிரி இருக்குமா? என்று கேள்வி கேட்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications