மீண்டும் பாக்யா வீட்டுக்கு வந்த ஈஸ்வரி.. சண்டைக்கு நிற்கும் எழில்.. ராமமூர்த்தி சொன்ன பிளாஷ்பேக்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஜூன் 24ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் கோபி வீட்டை விட்டு துரத்தியதால் பாக்கியா வீட்டிற்கு மீண்டும் ஈஸ்வரி வந்திருக்கும் நிலையில் மொத்த குடும்பமும் ஈஸ்வரிக்கு ஆறுதல் கூறுகின்றனர். என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் வீட்டு வாசலில் ஈஸ்வரி நின்று கொண்டிருப்பதை பார்த்து பதறிப்போன பாக்யா என்னாச்சு அத்தை என்று கேட்க, ஈஸ்வரி கோபி வீட்டில் நடந்த விஷயங்கள் எல்லாவற்றையும் சொல்ல, பாக்யா வாங்க வீட்டுக்குள்ள போகலாம் என்று சமாதானப்படுத்தி கூட்டிட்டு வருகிறார்.

வீட்டுக்கு வந்ததும் ஈஸ்வரி தரையில் உட்கார்ந்து அழுது புலம்ப எல்லோரும் ஓடிவந்து பாட்டிக்கு என்ன ஆச்சு என்று கேட்கின்றனர். அதற்கு ஈஸ்வரி நான் அழுவதையே உங்களை யாராலையும் தாங்கிக்க முடியல. ஆனா நான் பெத்த பையன் என்னை வீட்டைவிட்டு வெளியே துரத்திட்டான் என்று புலம்புகிறார். அதற்கு ராமமூர்த்தி என்ன ஆச்சு அதை சொன்னாதானே தெரியும் என்று கேட்க ஈஸ்வரி நான் தான் ராதிகாவை பிடித்து தள்ளி குழந்தையை கொன்னுட்டேன்னு சொல்றாங்க.
அந்த வீட்டுல நான் இருக்கிறது கமலாவுக்கும், ராதிகாவுக்கும் பிடிக்கல. ஆனால் அவங்க இப்படி சொல்லுவாங்கன்னு நான் எதிர்பார்க்கல. அவங்க தான் அப்படி சொல்றாங்கன்னா கோபியும் அவங்கள போலவே சொல்லி என்ன வெளியே போனு சொல்லிட்டான். எனக்கு அந்த குழந்தை
பிறக்கிறது விருப்பம் இல்லதான். ஆனா அதுக்காக நான் இரக்கமில்லாமல் அந்த குழந்தையை சாகடிப்பேனா? நான் அப்படி பண்ணுவேன்னா? என்று அழுது புலம்புகிறார்.
கோபியை தானே என்னுடைய உலகமா நினைச்சுட்டு இருந்தேன். ஆனா அவனே இப்படி ஒரு வார்த்தை சொல்லுவான்னு கொஞ்சம் கூட நினைக்கல என்று ஈஸ்வரி அழுது துடிக்க, எல்லோரும் ஆறுதல் சொல்லி ஈஸ்வரியை ரூமிற்குள் உட்கார வைக்கின்றனர். அதற்கு எழில் அந்த ஆள் என்ன நினைச்சுட்டு இருக்காரு, அவருதானே பாட்டியை இங்கு இருந்து கூட்டிட்டு போனாரு. இப்போ இப்படி எல்லாம் சொல்லுவாரா? என்று சண்டைக்கு கிளம்புகிறார்.

அதற்கு பாக்கியா நீ அவரிடம் போய் பாட்டிக்காக சப்போர்ட் பண்ணுனா அவர் ஆமா பாட்டி அப்படித்தான் பண்ணுனாங்கன்னு சொல்லுவாரு. அவர் சுயநலவாதி அவருக்கு தேவைன்னா என்ன வேணாலும் பேசி மயக்கி கூட்டிட்டு போவாரு. தேவையில்லன்னா கருவேப்பிலை மாதிரி தூக்கி போட்டுட்டு போயிட்டே இருப்பாரு. நீ போய் சண்டை போடறதுனால எதுவும் ஆகப் போவதில்லை. இப்போ நாம பாட்டியை சரி பண்றது தான் நம்முடைய வேலை என்று எடுத்து சொல்கிறார்.
பிறகு பாக்யா ஈஸ்வரியை சாப்பிட சொல்ல ஈஸ்வரி எனக்கு வேண்டாம் என்று சொன்னதும், ராமமூர்த்தி பழைய கதை ஒன்றை சொல்லி ஈஸ்வரிக்கு ஆறுதல் சொல்கிறார். இத்துடன் இன்று எபிசோடு முடிவடைகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications