கோபிக்கு அப்பா விட்ட சாபம் பலித்தது.. பாக்யா எடுத்த முடிவு.. கையில் பைலுடன் ராதிகா கொடுத்த அதிர்ச்சி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் ஜூன் 27ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் ஈஸ்வரியை வீட்டை விட்டு அனுப்பியதற்காக கோபியை பார்த்து ராமமூர்த்தி சாபம் போடுகிறார். அதுபோல ராதிகாவும் வீட்டில் இருந்து வெளியே கிளம்பி போகிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் கோபி குடித்துவிட்டு வந்ததால் ராதிகாவும் கமலாவும் அவரை கண்டபடி திட்டுகின்றனர். ராதிகா உங்களை நம்பி வந்ததற்கு எனக்கு இதுவும் வேணும் என்று சொல்லி நீங்க உங்க அம்மா கூடவே இருங்க நான் தனியாவே இருக்கிறேன் என்று சொல்லிவிட்டு சொல்கிறார்.

இதை தொடர்ந்து அடுத்த நாள் பாக்கியாவும் ராமமூர்த்தியும் வாக்கிங் போய்க் கொண்டிருக்கின்றனர். அப்போது ராமமூர்த்தி என்னால் ரொம்ப தூரம் நடக்க முடியவில்லை வீட்டுக்குப் போய்விடலாம் என்று கூப்பிடுகிறார். பாக்கியா என்னாச்சு உடம்புக்கு எதுவும் சரி இல்லையா என்று விசாரிக்க, இல்லம்மா எனக்கு மனசு சரியில்ல அதனால என்னால நடக்க முடியல ஈஸ்வரி எப்பவும் வீட்டில் எல்லாரையும் திட்டிட்டு தான் இருப்பா, அப்படியே அவளை பாத்துட்டு இப்போ அழுது புலம்பிட்டிருப்பதை பார்க்க முடியல.
அவளால் தன்னுடைய மகன் தன்னைப் பற்றி பேசியதை ஏற்றுக்கொள்ள முடியாமல் புலம்பிகிட்டே இருக்கா என்று வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார். அந்த நிலையில் கோபியும் அந்த பக்கமாக வாக்கிங் வர கோபியை பார்த்ததும் ராமமூர்த்தி ஈஸ்வரியை இப்படி பண்ணிட்டியேடா என்று கோபப்பட்டு திட்டுகிறார். எல்லாரையும் விடவும் எனக்கு என் பிள்ளை தான் முக்கியம்னு உன் பின்னாடி வந்துட்டா. அவளுக்கு நீ நல்ல பரிசு கொடுத்துட்டே. அவ உன் குழந்தையை கொல்லுற ஆளா? அதை கொஞ்சம் கூட நினைச்சு பார்க்க மாட்டியா?
யார் யார் பேச்சை கேட்டோ பெத்த அம்மாவை கொலைகாரின்னு சொல்லி வீட்டை விட்டு துரத்திட்டியே நீ நல்லா இருப்பியா.. எல்லா அப்பாவும் நம்மளோட பிள்ளைங்க நல்லா இருக்கணும்னு நினைப்பாங்க. ஆனா நான் சொல்றேன் நீ நல்லாவே இருக்க மாட்ட. யாரும் இல்லாமல் தனிமரமா நிப்ப அப்பதான் எங்களோட அருமை உனக்கு புரியும் என்று திட்டுகிறார். அப்போது வாக்கிங் வந்தவர்கள் எல்லோரும் சுற்றி நின்று வேடிக்கை பாக்கின்றனர்.

பாக்யா ராமமூர்த்தியை சமாதானம் செய்து வாங்க மாமா என்று கூட்டிக்கொண்டு போகிறார். கோபி அவமானப்பட்டு அந்த இடத்தில் நிற்கிறார். அதை தொடர்ந்து பாக்கியா ஈஸ்வரியை கும்பகோணம் போவதற்கு கூப்பிட அவர் வரவில்லை என்று சொல்கிறார். ஆனாலும் அதற்கு பிறகும் பாக்யா அவரை சமாதானம் செய்து கூட்டிக்கொண்டு இனியா ராமமூர்த்தி உடன் கும்பகோணத்திற்கு கிளம்பி போகிறார்.
இதை பார்த்த கோபி அம்மா எங்க போறாங்க என்று வீட்டு வாசலில் நிற்கும் செழியனிடமும் எழிலிடமும் கேட்க, அதற்கு எழில் கோபியை கோபப்பட்டு திட்டுகிறார். ஆனால் செழியன் எழிலை உள்ளே போக சொல்லிவிட்டு பாட்டி கும்பகோணம் போகிறார் என்று கோபத்தில் சொல்லிவிட்டு கிளம்பி போய்விடுகிறார்.

இதை தொடர்ந்து கோபி வீட்டிற்கு வந்து ஈஸ்வரியை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருக்க, ராதிகா ஃபைலுடன் எங்கேயோ அவசரமாக கிளம்பி கொண்டிருக்கிறார். அதை பார்த்த கோபி ஆபீசுக்கு போறா இன்னும் ரெண்டு நாள் ரெஸ்ட் எடுத்துட்டு போ என்று சொல்ல, ராதிகா பதில் எதுவும் சொல்லாமல் காருக்கு புக் பண்ணுகிறார். அவருக்கு பின்னாடியே மயூவும் கமலாவும் ரெடி ஆகி வர மூன்று பேரும் எங்க போறீங்க என்று கோபி கேட்டுக்கொண்டிருக்க நீங்க போற இடம் சொல்லிட்டு போறீங்களா? செய்றதெல்லாம் சொல்றீங்களா? என்று ராதிகா கோபமாக கேட்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications