கமலாவால் சுயநினைவை இழக்கும் ஈஸ்வரி.. பாக்கியா கேட்ட கேள்வி.. அதிர்ச்சி கொடுத்த கோபி.. பாவம் ராதிகா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஜூன் 7ஆம் தேதி மற்றும் எட்டாம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் ஈஸ்வரி சரியாக சாப்பிடாமல் மயக்கம் போட்டதால் மருத்துவமனையில் ஆபத்தான நிலைமையில் இருக்கிறார்.
பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா வீட்டிலிருந்த ஈஸ்வரி தன்னுடைய மகனுக்காக கோபி வீட்டில் வந்து படாத பாடு படுகிறார். எத்தனை நாட்களும் பாக்யாவிடம் அதட்டி அதை செய், இதை செய் என்று வேலை வாங்கிய ஈஸ்வரியால் கோபி வீட்டில் ராதிகாவிடம் அப்படி செய்ய முடியவில்லை. அங்கு ராதிகாவின் அம்மா கமலா இருந்து கொண்டு ஈஸ்வரி இடம் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்.

ஈஸ்வரி, கமலாவை எப்படியாவது வீட்டை விட்டு துரத்தி விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டு இருக்க கமலா ஈஸ்வரியை துரத்த வேண்டும் என்று பிளான் போட்டு கொண்டிருக்கிறார். இப்படியாக வீட்டிற்குள் பிரச்சனை நடந்து கொண்டிருக்கும்போது ராதிகா மற்றும் கோபியுடைய நிம்மதியும் போய்க்கொண்டிருக்கிறது. அதனாலேயே கோபி பாக்யாவிடம் ஈஸ்வரியை அந்த வீட்டிற்கு கூட்டிட்டு போகும் படி கேட்க, அதற்கு பாக்கியா கோபியிடம் முடியாது என்று சொல்லிவிட்டு, ஈஸ்வரி இடம் வீட்டிற்கு வந்து விடுங்க என்று வேண்டுகோள் வைத்திருந்தார்.
ஆனால் ஈஸ்வரி என்னுடைய மகன் நான் வந்தால் ரொம்பவே வருத்தப்படுவான். அதனால் வரவில்லை அவனோடு தான் நான் இருப்பேன் என்று சொல்லிவிட்டார். அதே நேரத்தில் இன்றைய எபிசோடில் மயூவிடம் ஈஸ்வரி பேசியதற்காக கமலா ஈஸ்வரியை திட்டியதை ஈஸ்வரி கோபி இடம் போட்டுக் கொடுத்திருக்கிறார். இதனால் கோபி கமலாவை திட்டி இருக்கிறார். இந்த நிலையில் நாளைக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

அதில் பெட்டில் ஈஸ்வரி எழுந்திருக்காமல் படுத்திருக்க, அங்கு வரும் கோபி ஈஸ்வரியை எழுப்பி பார்க்கிறார். பிறகு ஈஸ்வரி மயக்கத்தில் இருப்பதை கோபி தெரிந்து கொண்டு ஹாஸ்பிடலுக்கு ஆம்புலன்ஸில் ஈஸ்வரியை அனுப்பி வைக்க, அதை பார்த்த செல்வி வீட்டில் வந்து தகவல் சொன்னதும் பாக்கியா ராமமூர்த்தியோடு ஹாஸ்பிடலுக்கு ஓடி போகிறார்.
அங்கு போய் கோபியிடம் என்ன ஆச்சு என்று கேட்க, அதற்கு கோபி அம்மா இங்கே சரியா சாப்பிடல. அதனால மயக்கம் போட்டுட்டாங்க என்று சொல்கிறார். அதைத் தொடர்ந்து அங்கு வரும் ராதிகாவிடம் கோபி எங்க அம்மாவுக்கு மட்டும் ஏதாவது ஆச்சின்னா நடக்கிறதே வேற என்று மிரட்டுகிறார்.

அடுத்ததாக பாக்யாவும் ராமமூர்த்தியும் ஈஸ்வரியை வீட்டிற்கு கூட்டிட்டு போய்விடலாம் என்று சொல்லிக் கொண்டிருக்க, அதற்கு கோபி முடியாது எங்க அம்மா என்கூட தான் இருப்பாங்க. நான் அங்க அனுப்ப மாட்டேன் என்று மீண்டும் விதண்டாவாதம் செய்து கொண்டிருக்கிறார். இனி என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications