மயூவை வீட்டிற்கு கூட்டிட்டு வந்த பாக்கியா.. வாக்குவாதம் செய்யும் ஈஸ்வரி.. பழனிச்சாமி கொடுத்த ஷாக்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் மார்ச் 15ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை விரிவாக பார்க்கலாம். அதில் சில நாட்களாக பாக்கியலட்சுமி சீரியலில் அதிகமாக காணப்படாமல் இருந்த மயூ மீண்டும் இன்று என்ட்ரி கொடுத்திருக்கிறார். அதே நேரத்தில் மயூவை பாக்யா வீட்டிற்கு கூட்டிட்டு போக, அந்த நேரத்தில் ராமமூர்த்தியும் ஈஸ்வரியும் சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றனர்.
அதே நேரத்தில் பாக்கியா ரெஸ்டாரண்டுக்கு பெரிய அளவில் கூட்டம் வராததால் எல்லோரும் கவலையில் இருக்கின்றனர். அந்த நேரத்தில் பழனிச்சாமி பாக்யாவின் ரெஸ்டாரண்டுக்கு வந்திருக்க, அங்கிருந்த எல்லோரும் பாக்யா மற்றும் பழனிசாமியை சேர்த்து வைத்து பேசுகின்றனர். இந்த நிலையில் என்ன நடந்தது என்பது விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் பாக்கியாவின் ரெஸ்டாரண்ட் கலெக்ஷன் நஷ்டத்தில் போக அதை பார்த்து அமிர்தாவும், செல்வியும் என்ன செய்வது என்று கேட்க அதற்கு பாக்கியா இன்னும் இரண்டு மூன்று நாட்கள் பார்த்து ஏதாவது செய்வோம் என்று நம்பிக்கை கொடுக்கிறார். அதைத் தொடர்ந்து வீட்டிற்கு பாக்கியா போன் பண்ணி பார்த்துக் கொண்டே இருக்க யாரும் போனை எடுக்கவில்லை.
இதை பார்த்த ராதிகா ஃபோனை எடுத்து மாமா குளிக்கிறார் என்ன விஷயம் என்று கேட்க, அதற்கு பாக்யா அத்தை மாமாவுக்கு மாத்திரை கொடுக்க வேண்டும் என்று சொல்ல அதற்கு ராதிகா நான் பார்த்துக்கிறேன் என்று சொல்கிறார். அதைத்தொடர்ந்து ராதிகா ஈஸ்வரியையும், ராமமூர்த்தியும் கூப்பிட்டு அவர்களுக்கு சாப்பாடு பரிமாறுகிறார். அப்போது ஈஸ்வரி ராதிகாவிடம் மயூ என்ன செய்கிறா? இப்போ உங்க அண்ணன் வீட்டிலதான் இருக்காளா? என்று பாசமாக விசாரிக்கிறார்.
மறுபக்கத்தில் செல்வி பாக்யாவிடம் ஈஸ்வரி அம்மா முன்னாடி மாதிரி இப்போ இல்ல. ரொம்ப மாறிட்டாங்க. அவங்க இப்போ ராதிகாவுக்கு தான் அதிகமா சப்போர்ட் பண்றாங்க. கோபி சார் கிச்சன் ஆரம்பிக்கிறது சம்பந்தமா எதுவுமே கேட்கல... ஆனால் நீ ஆரம்பிக்கும்போது எத்தனை கேள்வி கேட்டாங்க என்று சொல்ல அதற்கு பாக்கியா நம்மளோட பிரச்சனையை நாம பார்த்துக் கொள்ளலாம். அவங்க நல்லா இருந்தா போதும் என்று கூறுகிறார்.
அதைத் தொடர்ந்து பாக்யாவின் ரெஸ்டாரண்டுக்கு பழனிச்சாமி வருகிறார். பழனிசாமியை திடீரென்று பார்த்ததும் பாக்கியா இன்ப அதிர்ச்சி அடைகிறார் .பிறகு பழனிச்சாமி ஹோட்டலில் சுற்றிப் பார்த்து பாக்யாவோடு பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது பாக்கியாவின் ரெஸ்டாரண்டில் வேலை செய்பவர்கள் பாக்கியா மற்றும் பழனிச்சாமி ஜோடி சூப்பர் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த நேரத்தில் செல்வி பாக்கியா அக்கா புதியதாக செய்த ஸ்வீட் என்று இனிப்பை கொடுக்க அதை பழனிச்சாமி சாப்பிட்டு பார்த்து பாராட்டுகிறார். பிறகு பாக்யா வீட்டிற்கு செல்ல அங்கு வாசலில் மயூ நிற்கிறார். அதை பார்த்த பாக்கியா ஏன் இங்க நிக்கிற என்று கேட்க, அதற்கு மாயூ அம்மாவுக்கு போன் பண்ணுனேன். அவங்க போனை எடுக்கல கடைக்கு போக வந்தேன் என்று சொல்கிறார்.
அதற்கு பாக்யா வா வீட்டுக்குள்ளே போகலாம் என்று மயூவை வீட்டிற்கு கூட்டிட்டு வர அந்த நேரத்தில் ராமமூர்த்தியும் ஈஸ்வரியும் வீட்டிற்குள் வாக்குவாதம் செய்து கொண்டிருக்கின்றனர். அதை பார்த்த மயூ பயந்து போய் நான் வீட்டிற்கு போகிறேன் என்று சொல்கிறார். அந்த நேரத்தில் ஈஸ்வரி மயூவை பார்த்து விடுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications