கிச்சன் பிசினஸ் தொடங்கும் கோபி.. ராதிகா கேட்ட நறுக் கேள்வி.. ஈஸ்வரி அவ்வளவுதானா? பாக்யாவா இப்படி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் மார்ச் 13ஆம் தேதிக்கான எபிசோடில் ராதிகா கோபியோடு சண்டையிட்டதை தட்டி கேட்க ஈஸ்வரிக்கு ராதிகா அதிர்ச்சி கொடுக்கிறார். அதே நேரத்தில் பாக்யா பிசினஸில் சரிவடைய தொடங்கி இருக்கிறார்.

ஆனால் கோபி தான் புதியதாக பிசினஸ் தொடங்கப் போவதாக கூறி இருக்கும் நிலையில் அதற்கு ராதிகா எதிர்பார்க்காத பதிலை சொல்லி இருக்கிறார். இப்படியான நிலையில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

Baakiyalakshmi Serial march 15th promo and episode full update

அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் கை உடைந்து போன செல்வி கிச்சனில் வேலை செய்ய போக அதற்கு எந்த வேலையும் செய்ய வேண்டாம் என்று பாக்கியா திட்டுகிறார். பிறகு கோபி மாடியில் இருந்து கீழே இறங்கி வர அந்த நேரத்தில் ராதிகா மயூவை பார்த்துவிட்டு வீட்டிற்கு வருகிறார். அப்போது கோபியை பார்த்ததும் முகத்தை திருப்பிக் கொண்டு போக அதை பார்த்து ஈஸ்வரி என்ன ஆச்சு என்று விசாரிக்கிறார்.

அதற்கு இனியா நேத்து நைட்டு இவங்க ரெண்டு பேருக்கும் சண்டை என்று சொல்கிறார். அதைத் தொடர்ந்து ராதிகா கிச்சனுக்கு வரும்போது ஈஸ்வரி நீ எதுக்கு அவனிடம் சண்டை போட்டுட்டே இருக்க, அவனே உடம்பு முடியாதவன் என்று சொல்ல அதற்கு ராதிகா நான் மட்டும்தான் சண்டை போடுறனா அத்த? என்று கேட்க, அதற்கு ஈஸ்வரி வேற யாரு சண்டை போடுறாங்க என்று கேட்க, அதற்கு நீங்கதான் சண்டை போடுறீங்க.

நீங்க மாமாவோட போடாத சண்டையா நான் போடுறேன். எப்ப பாத்தாலும் எதையாச்சும் திட்டிட்டு தானே நீங்க இருக்கீங்க என்று பதிலடி கொடுக்கிறார். அதோடு உங்க புள்ள கிட்ட ஒன்னும் நான் சும்மா சண்டை போடல, அவர் அவ்வளவு பொய் சொல்றாரு என்று ராதிகா கோவப்படுகிறார். அதோடு நீங்க புள்ளையை நல்லா வளர்த்து வச்சிருக்கீங்க என்று ஈஸ்வரியை திட்ட அதற்கு ஈஸ்வரி கடுப்பாகிறார்.

அதோடு ராதிகா நீங்க ஒன்னும் அவரை நினைச்சு கவலைப்படாதீங்க நான் அவரை மாற்றுகிறேன் என்று சொல்லிவிட்டு போகிறார். அடுத்ததாக பாக்யாவின் ஹோட்டலில் சாப்பிட ஆள் இல்லாமல் சாப்பாடு எல்லாம் அப்படியே இருக்க அதை பார்த்து எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர். அதற்கு பாக்யா இப்பதான ரெஸ்டாரண்ட் திறந்திருக்கிறோம் போகப்போக எல்லாம் சரியாகிவிடும் என்று பேசுகிறார்.

அடுத்ததாக பாக்கியா வீட்டிற்கு வந்து ஈஸ்வரி ராமமூர்த்தியை சாப்பிட கூப்பிட அவர்கள் நாங்க இப்பதான் மாத்திரை போட்டோம் அப்புறம் சாப்பிடலாம் என்று சொல்கின்றனர். பிறகு செழியன் சாப்பிடாமல் பீல் பண்ணிக் கொண்டிருக்க அவரை ஆறுதல் சொல்லி கூட்டிட்டு வந்து சாப்பிட வைக்கிறார்.

பக்கத்தில் கோபி ராதிகாவிடம் கிளவுட் கிச்சன் டிசைன் தொடங்க போவதாக சொல்ல அதற்கு பணத்தை நான் கொடுக்கிறேன் என்று ராதிகா சொல்ல அதைக் கேட்டு கோபி ரொம்பவே சந்தோஷப்பட்டு எனக்கு கிடைச்ச மாதிரி பொண்டாட்டி வேற யாருக்கும் கிடைக்க மாட்டாங்க என்று பெருமையாக பேசுகிறார்.

பிறகு பாக்யா கிச்சனில் தோசை ஊத்தி கொண்டிருக்கும் நேரத்தில் கோபி வீட்டில் இருக்கும் எல்லாரிடமும் நான் கிளவுட் கிச்சன் தொடங்கப் போகிறேன் என்று சொல்ல எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+