மாலினி பற்றி தெரிய போகும் உண்மை! மனம் மாறுவாரா ஜெனி? ஆனாலும் ஈஸ்வரி இப்படி செஞ்சிருக்க கூடாது

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் மார்ச் 21ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அந்த வகையில் செழியனுக்கு இன்னொரு கல்யாணம் செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்த ஈஸ்வரி அதற்காக புரோக்கரை வர சொல்லி பொண்ணு பார்த்துக் கொண்டிருக்கிறார்.

அதே நேரத்தில் மாலினி வீட்டுக்கு போன செழியன் மாலினியிடம் தகராறு செய்கிறார். அந்த நேரத்தில் அங்கு எழில் வந்து விடுகிறார். அது தெரியாத செழியன் மாலினியிடம் பழைய விஷயங்களை பேசுகிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

Baakiyalakshmi Serial march 21th promo and episode full update

அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் பாக்கியாவால் கிச்சனில் இருக்கும் போது ராதிகா உங்க கிட்ட ஒன்னு பேசணும் என்று சொல்கிறார். அதற்கு பாக்கியா என்னவென்று கேட்க அதற்கு உங்களுக்கு அன்னைக்கு என்ன நிலைமை வந்துச்சோ அதே நிலைமைதான் ஜெனிக்கு இன்னிக்கு வந்து இருக்கு. அன்னைக்கு நீங்க விவாகரத்து வாங்கின மாதிரி ஜெனி இன்னைக்கு செழியன் கிட்ட விவாகரத்து கேக்குறாங்க.

அதுல என்ன தப்பு இருக்கு? நீங்க ஜெனி பக்கம் தான் நிக்கணும் என்று சொல்கிறார். அதற்கு பாக்கியா என்னுடைய வாழ்க்கையில் ஜெனியோட வாழ்க்கையும் கம்பேர் பண்ணாதீங்க. ஜெனிக்கும் செழியனுக்கும் சந்தோஷமான விஷயம் நிறைய இருக்கு. ஆனால் என்னுடைய வாழ்க்கையில் அப்படி கிடையாது. செழியன் பண்ணுனது தப்பு ஆனா கோபி எனக்கு பண்ணுறது துரோகம் என்று சொல்லிவிட்டு பாக்கியா அங்கிருந்து கிளம்புகிறார்.

அடுத்ததாக எழில் பாக்கியாவிடம் செழியன் ஜெனி விஷயத்தில் ஏதாவது பண்ணனும்... நான் வேணா ஜெனி கிட்ட பேசவா ஒரு முறை செழியனோடு உட்கார்ந்து பேசி பாருங்கன்னு சொல்லுறேன் என்று சொல்கிறார். அதற்கு பாக்கியா ஏற்கனவே அவங்க கேஸ் கோர்ட்டில் இருக்கும் போது ரெண்டு பேரையும் கார்ல அனுப்பி வைத்தேன். ஆனால் எதுவும் பேசின மாதிரியே தெரியல என்று சொல்கிறார்.

Baakiyalakshmi Serial march 21th promo and episode full update

அடுத்த நாள் காலையில் ஈஸ்வரி புரோக்கரை கூட்டிட்டு வந்து செழியனுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணுவதற்காக பொண்ணு பார்க்க சொல்ல அதற்கு பாக்கியா வேண்டாம் என்று தடுக்க பார்க்கிறார். ஆனால் ஈஸ்வரி உன்னிடம் பிறகு பேசுகிறேன் என்று சொல்லி அனுப்பி வைக்கிறார். ஆனால் செழியன் இன்னொரு கல்யாணம் வேண்டாம் என்று மறுத்து பேச அதற்கு ஈஸ்வரி சமாதிக்காததால் கோபமாக காரை எடுத்துக் கண்டு கிளம்பி போகிறார்.

பிறகு செழியன் காரில் வேகமாக போவதை பார்த்து எழில் பாக்யாவுக்கு போன் போட்டு வீட்ல எதுவும் பிரச்சனையா? என்று கேட்க பாக்யா வீட்டில் நடந்த விஷயங்களை சொல்கிறார். உடனே செழியினை ஃபாலோ பண்ணி எழிலும் போக செழியன் மாலினி வீட்டில் கதவைத் தட்டி மாலினியிடம் உன்கிட்ட வந்து நான் எனக்கு கல்யாணம் ஆகல என்று சொன்னேனா?

Baakiyalakshmi Serial march 21th promo and episode full update

நான் தான் ஆரம்பத்திலேயே உன்கிட்ட எனக்கு கல்யாணம் ஆனதை சொல்லிட்டேன்ல.. நீதானே என் பின்னாடி தொந்தரவு பண்ணுன? நான் எத்தனை முறை சொன்னேன் இந்த ப்ராஜெக்ட் எனக்கு வேண்டாம் என்று நீ தான கேட்கல என்று கேள்வி மேல் கேள்வி கேட்க இதையெல்லாம் எழில் கேட்டுக்கொண்டு இருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+