ஈஸ்வரி நீங்க பண்றது உங்களுக்கே ஓவரா தெரியலையா? கடைசியில் செழியன் நிலைமை இப்படி ஆகிவிட்டதே!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் மார்ச் 23ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் செழியனுக்கு பெண் பார்ப்பதற்காக ஈஸ்வரி ஏற்பாடுகள் செய்திருக்கும் நிலையில் அதை பார்த்து செழியனும் பாக்கியாவும் அதிர்ச்சி அடைகின்றனர்.
அதே நேரத்தில் பின்பக்க வந்த இடத்தில் ராதிகா மற்றும் பாக்யா பற்றி அறிமுகப்படுத்துவதற்கே கோபி திணறிக் கொண்டிருக்கிறார் நிலையில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் ஈஸ்வரியும் ராமமூர்த்தியும் செழியனை மாப்பிள்ளை பார்க்க வருபவர்களிடம் எப்படி பேசலாம் என்பது பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். அந்த நேரத்திலேயே பெண் வீட்டார் வந்துவிட எல்லோரும் அதிர்ச்சியில் நிற்கிறார். பிறகு எல்லோரும் பேசிக் கொண்டிருக்கும்போது ஈஸ்வரி ராதிகாவை உட்கார வைத்து இதுதான் என்னுடைய மருமகள் என்று என்று அறிமுகப்படுத்துகிறார்.
அப்போது மாப்பிள்ளையை பார்க்க வேண்டும் என்று கேட்க அதற்கு ஈஸ்வரி செழியனை கூப்பிட்டு வருகிறார். அதோடு பெண்ணின் போட்டோவை ஃபோனில் வாங்கி செழியனுக்கு காட்ட செழியன் எதுவும் பேசாமல் வைத்துவிட்டு ரூமுக்கு போய் விடுகிறார். அதே நேரத்தில் பாக்யாவும் இனியாவும் காலேஜிலிருந்து வர அங்கு செழியனுக்கு பெண் பார்ப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர்.
அப்போது பெண் வீட்டினர் இவர் யார் என்று பாக்யாவை பற்றி கேட்டு அதற்கு ராமமூர்த்தி அது என் மருமகள் என்று சொல்கின்றார். அதற்கு அந்திருந்தவர்கள் அப்போ ராதிகா யாரு அவங்க சிஸ்டரா என்று கேட்க அதற்கு ஒன்றும் பேச முடியாமல் முழித்துக் கொண்டிருக்கின்றனர். அப்போது கோபி அவங்க என்னோட எக்ஸ் ஒய்ஃப். ராதிகா கூட தான் நான் இருக்கேன் எனக்கு மூன்று பிள்ளைகள் இருக்காங்க என்று தன்னுடைய குடும்ப நிலைமையை சொல்கிறார்.
பிறகு பாக்யாக்கும் போனில் பெண்ணின் போட்டோவை ஈஸ்வரி காட்ட அவர் பாக்காமல் கோபமாக போய்விடுகிறார். அதோடு நேராக செழியன் ரூமுக்கு போன பாக்கியா, இங்கு என்ன நடக்குது? நீ என்ன முடிவுல இருக்க? இப்பவும் வாயை திறந்து பேச மாட்டியா? என்று திட்டிக்கொண்டு அப்படியே செழியனை கீழே கூட்டிட்டு வந்து எல்லோர் முன்பும் உன் மனசுல என்ன இருக்கோ அதை சொல்லு என்று சொல்ல, ஒரு செழியன் எதுவும் பேச முடியாமல் நிற்கிறார்.
அதற்கு பாக்யா இவனுக்கு இன்னும் டைவர்ஸ் கூட ஆகல... அவனுக்கு ஜெனி, பிள்ளை கூட தான் வாழ்வது பிடிச்சிருக்கு. அவங்க மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்ல பிரிஞ்சு இருக்காங்க. நான் அவங்கள சேர்த்து வைக்க தான் போராடிக்கிட்டு இருக்கேன். அவனுக்கு வேற கல்யாணம் பண்றதுல இஷ்டம் இல்லை என்று கோபமாக சொல்கிறார். இதை கேட்டு பெண் வீட்டார் அதிர்ச்சி அடைகின்றனர்.
அவர்கள், செழியனுக்கு டைவர்ஸ் ஆகிவிட்டதாக தரகர் சொன்னதாக சொல்கின்றனர். இதைக் கேட்டு ஈஸ்வரியும் கோபியும் பாக்யாவால் அவமானப்பட்டு கோபத்தில் நிற்கின்றனர். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது. ஏற்கனவே ஜெனிக்கு கல்யாண ஏற்பாடுகளை ஜோசப் செய்து கொண்டிருக்கும் நேரத்தில் இப்போது ஈஸ்வரி தன்னுடைய பேரனுக்காக செய்து கொண்டிருக்கும் திருமண ஏற்பாடால் பாக்யா கொந்தளித்து இருக்கிறார். இனி பாக்யாவை எதிர்த்து மொத்த குடும்பமும் நிற்கும் போது தன்னுடைய மகனை மருமகளோடு எப்படி சேர்த்து வைக்கப் போகிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications