ஜெனி வீட்டிற்கு வந்து மாலினி கொடுத்த அதிர்ச்சி.. ஆனால் பாக்யா இப்படி சொல்லிட்டாங்களே! கோர்ட்டில் குழப்பம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் மார்ச் ஐந்தாம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப் போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். ஜெனியின் வீட்டிற்கு வந்து மீண்டும் மாலினி செழியன் பற்றி பேச அதனால் ஜெனி குழப்பம் அடைந்து தான் செழியனை பிரியும் முடிவில் உறுதியாக இருப்பதாக கோர்ட்டில் கூறுகிறார்.
அதே நேரத்தில் பாக்கியா ஜெனிக்கு சில வாய்ஸ் மெசேஜை whatsapp ல் அனுப்புகிறார். இதனால் ஜெனி பாக்யாவிடம் சில விஷயங்களை பேச அதை கேட்டு செழியன் அதிர்ச்சி அடைகிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

இந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் பாக்யா சில வாட்ஸப் மெசேஜ்களை அனுப்பி கொண்டிருக்கிறார். அதில் விவாகரத்து விஷயத்தில் யார் என்ன சொன்னாலும் நீ யோசித்து பொறுமையா முடிவெடு. கோர்ட்டில் இன்னும் கொஞ்சம் நேரம் வேணும்னு சொல்லு என அட்வைஸ் செய்கிறார். அதோடு நீயும் நானும் அம்மா பொண்ணு மாதிரி இருந்தோம். ஃப்ரெண்ட்ஸ் மாதிரி இருந்தோம்.
ஆனா இன்னைக்கு பேசலாமா வேண்டாமானு யோசிக்கிற மாதிரி ஆகிடுச்சு என்று தன்னுடைய வருத்தத்தை ரெக்கார்ட் செய்து அனுப்பி கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் ஜெனியின் வீட்டிற்கு வர அதனால் ஜெனியின் அப்பா ஜோசப் ஜெனியை வந்து பார்க்கும்படி கூப்பிடுகிறார். முதலில் யாரென்று தெரியாமல் வர மறுக்கும் ஜெனி பிறகு அப்பாவின் கட்டாயத்தினால் வெளியே வந்து பார்க்க அங்கு மாலினி நிற்பதை பார்த்ததும் கோபத்தில் ரூமுக்குள் போகிறார்.

ஆனால் மாலினி நான் சொல்ல வந்ததை சொல்லிட்டு போகிறேன் என்று தன் மீது தப்பில்லை என்பது போல செழியன் தான் தன்னை ஏமாற்றிவிட்டார். எனக்கு ஆரம்பத்திலேயே செழியனுக்கு திருமணம் முடிந்தது தெரியாது தெரிந்திருந்தால் விலகி இருப்பேன் இப்போ உங்க வாழ்க்கையும் போயிடுச்சு என் வாழ்க்கையும் போயிடுச்சு என்று நடிக்கிறார். இந்த நாள் கோபமான ஜெனி மீண்டும் தன்னுடைய ரூமிற்கு வந்து விடுகிறார்.

அடுத்த கட்டத்தில் கோர்ட்டில் இந்த முறையும் கவுன்சிலிங் போட்டு இருக்கிறது என்று வக்கீல் சொல்ல அதனால் ஜெனியின் அப்பா ஜோசப் கோபப்படுகிறார். பிறகு ஜெனி கவுன்சிலிங்கில் நான் இவரை பிரிவதில் உறுதியாக இருக்கிறேன் என்று சொல்லிவிடுகிறார். ஆனால் செழியன் நான் தெரியாம தப்பு பண்ணிட்டேன். இனி அப்படி பண்ண மாட்டேன் என்று மன்னிப்பு கேட்டு நான் ஜெனியோடு வாழ வேண்டும் என்று பேசிக் கொண்டிருக்கிறார்.

இதனால் கோர்ட்டில் இன்னும் இரண்டு வாரம் டைம் எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி அனுப்புகிறார்கள். வெளியே வந்ததும் பாக்யா ஜெனி இடம் பேசுகிறார். அப்போது ஜெனி நீங்க அனுப்பின மெசேஜை நான் கேட்டேன். எனக்கு உங்களை எப்போதும் பிடிக்கும் ஆன்ட்டி. ஆனால் செழியன் பண்ண தப்பை என்னால மன்னிக்க முடியாது என்று சொல்ல ஜோசப் ஜெனியை அங்கிருந்து கூட்டிக்கொண்டு போய்விடுகிறார்.

பிறகு பாக்கியாவும் செழியனும் காரில் வரும்போது நானும் இந்த பிரச்சனையை தீர்த்து வைத்து விடலாம் என எவ்வளவோ முயற்சி பண்ணுனேன். ஆனால் ஆரம்பிச்ச இடத்திலேயே நிற்கிறது என்று பாக்யா வருத்தப்படுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications