ராதிகா கர்ப்பத்தை பிள்ளைகளிடம் உடைத்த பாக்யா.. ஈஸ்வரி இப்படி பேசிட்டாங்க! கடைசியில் தான் டுவிஸ்ட்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் மே 14ம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் ராதிகா கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை பாக்கியா தன்னுடைய பிள்ளைகளிடம் வீட்டில் எல்லோரும் முன்பும் சொல்லி இருக்கிறார். அதோடு என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில், ஈஸ்வரி ஏதோ யோசித்துக் கொண்டே இருக்க அப்போது ராமமூர்த்தி என்ன ஆச்சு? என்ன யோசிச்சிட்டு இருக்கிற? என்று கேட்க அதற்கு ஒன்றும் இல்லை என்று ஈஸ்வரி தண்ணி குடிக்க போகும்போது அங்கு ராதிகா வர ஈஸ்வரியும் ராதிகாவும் ஒருவருக்கொருவர் முறைத்துக் கொள்கின்றனர். இதை பார்த்த ராமமூர்த்தி குழப்பம் அடைகிறார்.

பிறகு ராதிகா தன்னுடைய அம்மா வீட்டிற்கு வந்து கோபி அவங்க அம்மா கிட்ட விஷயத்தை சொல்லிட்டாரு. ஆனா அவங்க குழந்தை இப்போ வேண்டாம் கலைத்துவிடுவோம் என்று சொல்றாங்க என்று சொன்னதும் ராதிகாவின் அம்மா கமலா கோவப்பட்டு அந்த பொம்பளை என்ன நெனச்சிட்டு இருக்கு என்று அங்கிருந்து கிளம்ப, அதற்கு ராதிகா இப்ப வேண்டாம் என்று தடுத்து நிறுத்துகிறார்.
அதோடு கோபி இன்னமும் வீட்டில் சொல்லாமல் ஏமாற்றிக் கொண்டிருப்பது குறித்து ராதிகா வருத்தப்பட அதற்கு கமலா நீதானே இப்படி ஒரு ஆளை தேடி கல்யாணம் பண்ணி இருக்க என்று திட்டுகிறார் . பிறகு யார் என்ன சொன்னாலும் சரி இந்த குழந்தை விஷயத்துல நீதான் உறுதியா இருக்கணும். அந்த குழந்தையை நீ பெத்துக்கிட்டா தான் உனக்கும் கோபிக்கும் ஒரு பிடிப்பு ஏற்படும் என்று கமலா ஏற்றி விடுகிறார்.
அடுத்ததாக வெளியே போயிட்டு வீட்டுக்கு வந்த கோபி ஈஸ்வரி பக்கத்தில் அமர ஈஸ்வரி எதுவும் பேசாமல் உம்மென்று இருப்பதை பார்த்து ரூமுக்கு போய் விடுவோம் என்று கிளம்பி போகிறார். பிறகு படிக்கட்டு பக்கத்தில் வந்ததும் ராதிகா பேசியது நினைவு வர அங்கேயே நின்று புலம்பி கொண்டிருக்கிறார். அப்போது பாக்யா ஈஸ்வரி கிட்ட சப்பாத்திக்கு தொட்டுக்க என்ன பண்ணலாம் என்று கேட்க, அதைக் கேட்டு கோபி இங்க இருக்கிற பிரச்சனையில் இவளுக்கு இதுதான் தேவையா? என்று புலம்பி கொண்டிருக்கிறார்.
பிறகு ரூமுக்கு போவதை விட அம்மா பக்கத்தில் இருக்கிறது தான் சேஃப் என்று திரும்பவும் சோபாவில் வந்து உட்கார்ந்து கொள்கிறார். அப்போது ராதிகா அங்கு வந்து கோபிக்கு தண்ணீர் கொடுத்தபடியே உங்க குழந்தைகளிடம் எப்ப சொல்ல போறீங்க என்று கேட்க அதற்கு ஈஸ்வரி அதெல்லாம் ஒன்னும் சொல்ல மாட்டான் என்று பேசிக் கொண்டிருக்கிறார். இவர்கள் மூவரும் ரகசியமாக பேசுவதை கேட்ட ராமமூர்த்தி உங்களுக்குள்ள அப்படி என்னதான் போகுது என்று கேட்கிறார்.
பிறகு ராதிகா இனியாவை கூப்பிட்டு உங்க அப்பா உங்க எல்லார்கிட்டயும் ஏதோ முக்கியமான விஷயம் பேசணுமாம் எல்லாரையும் கூட்டிட்டு வா என்று சொல்ல ஈஸ்வரி வேண்டாம் என்று சொல்கிறார். ஆனாலும் இனியா எல்லாரையும் கூட்டிக்கொண்டு வந்து விடுகிறார். அப்போது கோபி சொல்லுவதற்கு பயந்து தயங்கி கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் பாக்யா பாப்கான் ரெடி பண்ணி ஹாயாக வந்து உட்கார்ந்து பாப்கான் சாப்பிட்டபடியே கோபியை பார்த்துக் கொண்டிருக்கிறார்.
கோபி தொடர்ந்து சொல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருக்க ஒரு கட்டத்தில் பாக்யாவே எழுத்து உங்க அப்பா சொல்ல முடியாமல் தயங்குற அந்த விஷயத்தை நானே சொல்லுறேன் என்று சொல்கிறார். உங்க அப்பா திரும்பவும் அப்பாவாக போறாரு. அதாவது உங்க அப்பாவோட வைஃப் பிரக்னண்டா இருக்காங்க என்று உண்மையை உடைக்க எல்லோரும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். கோபி எதுவும் பேச முடியாமல் மிரண்டு போய் நிற்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
சிறகடிக்க ஆசை: அண்ணாமலை சொன்ன வார்த்தை! ஜெயிலுக்கு போகும் விஜயா.. மீனா செய்த உருப்படியான முடிவு -
குக் வித் கோமாளியில் பஞ்சாயத்து மேல் பஞ்சாயத்து! மணிமேகலை இடத்தில் ஜோயா! புதிதாக வந்த ரோஜா! காரணம் இருக்கு! -
சிறகடிக்க ஆசை: ரோகிணியால் ஜெயிலுக்கு போகும் விஜயா.. மாஸ் காட்டிய முத்து மீனா! மனோஜின் நல்ல மாற்றம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு?












Click it and Unblock the Notifications