கோபியை வீட்டை விட்டு போக சொன்ன எழில்.. ஆனால் ஜெனி இப்படி கேட்டுட்டாங்க? இனியா கேட்ட கேள்வி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் மே 13ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் ராதிகா கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை பாக்கியா வீட்டில் சொல்ல மொத்த குடும்பத்தினரும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். அதோடு கோபியை வீட்டை விட்டு வெளியே துரத்த வேண்டும் என்று எழில் மற்றும் செழியன் முடிவெடுத்து இருக்கின்றனர்.
அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் கோபி தயங்கி தயங்கி நிற்கும்போது பாக்கியா எல்லோரிடமும் உங்க அப்பா திரும்பவும் அப்பாவாக போறாரு. அவருடைய மனைவி கர்ப்பமாக இருக்காங்க. இந்த சின்ன விஷயத்தை சொல்ல எதுக்கு இவ்வளவு யோசிக்கணும் என்று உண்மையை சொல்ல எல்லோரும் அதை கேட்டு அதிர்ச்சி அடைகின்றனர்.

ஈஸ்வரி தலையில் அடித்துக் கொண்டு சோபாவில் உட்கார கோபி உன்னை யாராவது இங்க வந்து இதை சொல்ல சொல்லி கூப்பிட்டாங்களா? என்று கோபப்பட, அதற்கு பாக்கியா நீங்கதான் சொல்ல முடியாம தயங்கிக்கிட்டு இருக்கீங்க. இன்னும் எவ்வளவு நேரம் என் பிள்ளைங்க காத்துகிட்டு இருப்பாங்க? இவங்க எல்லாருக்கும் வேலை இருக்கு என்று பேசுகிறார்.
இதைக் கேட்டு கோபமான ராம மூர்த்தி உனக்கு உண்மை தெரிஞ்சிட்டு தான் நீ இத்தன நாளா என்கிட்ட சொல்லாம மறைச்சிட்டு இருந்தியா? என்று ஈஸ்வரியை திட்டுகிறார். அதோடு கோபியை பார்த்து காரி துப்பி விட்டு கோபப்பட்டு போகிறார். அடுத்து ஜெனி, அமிர்தா இருவரும் மேலே சென்று விட எழில், செழியன், இனியா முகத்தை பார்க்க முடியாமல் கோபி தலைகுனிந்து நிற்கிறார். முதலில் இனியாவிடம் கோபி பேச போக அதற்கு இனியா இதுக்குத்தான் உங்க காலேஜ்ல படிக்கிறவங்களுக்கு தம்பி தங்கச்சி இருக்காங்களான்னு கேட்டீங்களா என்று கோபப்பட்டு திட்டி விட்டுப் போகிறார்.
அடுத்து செழியனிடம் பேச செழியன் அன்னைக்கு உங்க சீனியருக்கு குழந்தை பிறந்து இருக்கிறது என்று ஒரு கதை விட்டீங்களே அது இதுக்காகத்தானா? என்று திட்டிவிட்டு அவரும் கிளம்பி போக எழில் கோபியை பார்த்து முறைத்து விட்டு எதுவும் பேசாமல் போய்விடுகிறார். இதையெல்லாம் பார்த்து ராதிகாவும் எதுவும் பேசாமல் ரூமுக்கு போய்விட ஈஸ்வரி கோபியை திட்டுகிறார்.
இப்போ உன் பிள்ளைகளோட முகத்தை பார்த்தியா? நான் சொல்றதை கேட்டு இருந்தா இப்படி உனக்கு இன்னைக்கு நடந்திருக்குமா? அது சரி நீ என்னைக்கு என் பேச்சை கேட்ட என்று அவரும் திட்டிக்கொண்டு ரூமுக்கு போய் விடுகிறார். பிறகு ஜெனி ரூமில் யோசித்துக் கொண்டிருக்கும் போது அங்கு வரும் செழியன் பேச்சு கொடுக்க அதற்கு ஜெனி மாலினி கர்ப்பமா இருக்காளா? ஒரு நாள் நீ வந்து மாலினி கர்ப்பமா இருக்கேன்னு சொல்ல மாட்டியே என்று அதிர்ச்சி கொடுக்கிறார்.
அதற்கு செழியன் அப்படி எல்லாம் நடக்கவே நடக்காது என்று சொல்ல, இல்லை எனக்கு பயமா இருக்கு என்று ஜெனி பேச செழியன் சத்தியமாக அதற்கு வாய்ப்பே கிடையாது என்று சொல்கிறார். பிறகு இனியா ரூமில் அழுது கொண்டிருக்கும் போது அங்கு வரும் பாக்கியா இனியாவிற்கு ஆறுதல் சொல்லி தூங்க வைக்கிறார். அடுத்த கட்டத்தில் எழில் மொட்டை மாடியில் யோசனையில் இருக்கும் போது அங்கு சரக்கு பாட்டிலோடு வந்த செழியன் குடிக்க சொல்ல அதற்கு எழில் அம்மா அன்னைக்கே குடிக்க கூடாதுன்னு சொல்லி இருக்காங்க.
இப்ப எதுக்கு இதை வாங்கிட்டு வந்த என்று திட்ட அதற்கு செழியன் ஜெனி மாலினி பற்றி பேசியது பற்றி சொல்லி வருத்தப்படுகிறார். நல்லா இருந்த என்னுடைய வாழ்க்கையை நானே நாசமாக்கிட்டேன் என்று பீல் பண்ணி பேசிக் கொண்டிருக்கும்போது கோபி பற்றி இருவரும் பேசுகின்றனர். அப்போது எழில் நான் நாளைக்கு அந்த ஆளை வீட்டை விட்டு வெளியே போக சொல்ல போறேன்.
இது அம்மாவோட வீடு அந்த ஆள் இங்க வந்து இருக்கிறது மட்டும் இல்லாம இப்ப குழந்தை குட்டினு வேற... அம்மாவுக்கு இதெல்லாம் ரொம்ப கஷ்டமா இருக்கும். அவர் இந்த வீட்டில் இனி இருக்கக் கூடாது என்று சொல்ல அதற்கு செழியன் நீ சொல்றது சரி தான். அம்மாவுக்கு ஒன்னுனா நாம தான் அவங்க கூட நிக்கணும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
சிறகடிக்க ஆசை அப்டேட்: நிஜ கேரக்டரை காட்டிய சைக்கோ அருண்.. முத்துவால் உடைந்த உண்மை.. விஜயாவுக்கு ஆப்பு -
2026 தேர்தல் யார் ஜெயிப்பார்கள்? ‘நீயா நானா’வில் ஜோதிடர்கள் உடைத்த ரகசியம்! பெண்கள் ஓட்டு, மறு எலக்சன் இருக்காமே! -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க












Click it and Unblock the Notifications