கோபியை வீட்டை விட்டு போக சொன்ன எழில்.. ராதிகா இப்படி பேசிட்டாங்களே? கண்கலங்கிய பாக்யா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் மே 14 ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் கோபி அப்பாவாக போகும் விஷயத்தை தெரிந்ததும் எழில் மற்றும் செழியன் இருவரும் கோபியை வீட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று சொல்ல கோபி எங்க அம்மா சொல்லாமல் நான் இந்த வீட்டை விட்டு வரமாட்டேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் பாக்கியா கோபி அப்பாவாக போகிறார் என்று சொன்னதை கேட்டு பிள்ளைகள் கொடுத்த ரியாக்ஷனை கோபி நினைத்து பார்த்து டென்ஷனாக இருக்க அங்கு ராதிகா என்ன ஆச்சு என்ன பிரச்சனை என்று கேட்கிறார். அப்போது என் பிள்ளைகளுடைய ரியாக்ஷனை நினைத்து பார்க்கிறேன். இனிமே அவங்க முகத்துல நான் எப்படி முழிப்பேன்.

இனியா ச்சீ என்று சொல்லும்போது எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா? என்று புலம்ப ராதிகா இதெல்லாம் இப்போதைக்கு ரியாக்ஷன் தான். போக போக அவங்களே புரிஞ்சுகிட்டு இதையெல்லாம் ஏத்துப்பாங்க என்று சொல்கிறார். அதோடு உங்க அம்மா இந்த குழந்தையே வேண்டான்னு சொன்னாங்க. ஆனா உங்க பிள்ளைங்க அப்படி யாரும் சொல்லல. அவங்க மெச்சூரிட்டியா தான் இருக்காங்க என்று சொல்கிறார்.
அதற்கு கோபி நீ உன்னை பற்றியும் உன் பக்கத்துல இருந்தும் மட்டும் தான் யோசிக்கிற, என்னை பற்றி யோசிக்கவே மாட்டேங்குற என்று புலம்புகிறார். அதோடு நாம ஒன்னும் வெளிநாட்டில் இல்ல நாம இந்தியாவுல சென்னையில இருக்கிறோம். இங்க கலாச்சாரமே வேற. என் பிள்ளைகளுக்கு குழந்தை இருக்கும்போது நான் அப்பாவாக போறேன் என்று தெரிஞ்சா எல்லோரும் என்னை பத்தி என்ன பேசுவாங்க என்று புலம்பிக் கொண்டிருக்க,
ராதிகா இதைப்பற்றி தன்னுடைய கருத்தை சொல்ல வரும்போது கோபி அதை தடுத்து நிறுத்தி நான் இன்னும் கொஞ்சம் புலம்புகிறேன் என்று புலம்பி கொண்டே இருக்கிறார். அந்த நேரத்தில் பாக்கியா தூக்கம் வராமல் நடந்த விஷயங்களை எல்லாம் நினைத்து கண்கலங்கி கொண்டிருக்கும் போது எழில் வந்து கதவை திறந்ததும் பாக்கியா தூங்கியது போல கண்ணை மூடி கொள்கிறார்.
அப்போது எழில் பாக்யாவின் தலையை கோரி கொஞ்ச நேரம் பக்கத்தில் இருந்து விட்டு பிறகு போக அடுத்ததாக செழியன் வந்து அதேபோல செய்கிறார். செழியன் போனதும் இனியா தூக்கத்தில் அம்மா அம்மா என்று புலம்பிக் கொண்டிருக்கிறார். அப்போது பாக்கியா இனியாவை தட்டி கொடுத்து தூங்க வைத்து கண்கலங்குகிறார்.
அடுத்த நாள் காலையில் எழில் ஜாக்கிங் போகும்போது கோபியை பார்த்ததும் உங்க கிட்ட நான் பேசணும் என்று சொல்ல, இந்த வீட்டில் இனி நீங்க இருக்கிறது எங்களுக்கு பிடிக்கல. எங்களோட வாழ்க்கையை நாங்க வாழ்ந்துகிறோம். உங்களுடைய பிரச்சனையெல்லாம் நாங்கள் தூக்கிக்கொண்டு சுமக்க வேண்டும் என்று அவசியம் கிடையாது. நீங்களும் உங்க பேமிலியும் வீட்டை விட்டு வெளியே போயிடுங்க என்று சொல்ல,
அதற்கு கோபி இது நான் கட்டுன வீடு என்று டயலாக் பேச அதற்கு எழில் இது எங்க அம்மாவுடைய வீடு. இனி மேலும் உங்களை நான் இந்த வீட்டில் இருக்க விட மாட்டேன் என்று சொல்ல அதற்கு கோபி நான் எங்க அம்மாவுடைய சந்தோஷத்துக்காக தான் இந்த வீட்டில் இருக்கிறேன். எங்க அம்மாவா சொல்லாம நான் இந்த வீட்டை விட்டு வெளியே போக மாட்டேன் என்று சொல்ல எழில் உங்களை எப்படி இந்த வீட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று எனக்கு தெரியும் என்று சவால் விடுகிறார்.
பிறகு கோபி வீட்டிற்கு வந்து ராதிகாவிடம் எழில் பேசியதை சொல்ல அதற்கு ராதிகா ஆமா நானும் அதை தான் சொல்றேன் என்று சொல்ல கோபி அவன் சொன்னா நாம போயிடனுமா அதெல்லாம் போக முடியாது. இது நான் கட்டுன வீடு என்று சொல்ல அதற்கு கோபமான ராதிகா இடியட் மாதிரி பேசாதீங்க கோபி... இது இப்போ பாக்கியா வீடு. அவங்க சொன்னா நாம போய் தான் ஆகணும் என்று சொல்ல அதற்கு கோபி நான் எங்க அம்மா சொல்லாம இந்த வீட்டை விட்டு வரமாட்டேன் என்று சொல்ல,
அதற்கு ராதிகா அவங்களும் வீட்டை விட்டுப் போக சொல்லிடுவாங்க என்று சொல்கிறார். மறுபக்கத்தில் எழில் வீட்டிற்கு வரும்போது செழியன் ஜாக்கிங் போக வெளியே கிளம்பி வர அவரிடம் நான் அந்த ஆளு வீட்ல இருக்க கூடாதுன்னு சொல்லி அனுப்பி இருக்கேன். அவர் அவர் பொண்டாட்டி கிட்ட அதை பத்தி பேசி பிரச்சனை பண்ணுவாரு. நீ சீக்கிரமா வந்துரு என்று சொல்ல செழியனும் சீக்கிரம் வருகிறேன் என்று சொல்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல்












Click it and Unblock the Notifications