Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாக்கியலட்சுமி: முதல் நாளே ராதிகா வீட்டில் ஈஸ்வரிக்கு கிடைத்த அவமானம்! கோபி போடும் பிளான் நடக்குமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 18 ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் கோபிக்காக பாக்கியா வீட்டில் இருந்து ராதிகா வீட்டிற்கு வந்திருக்கும் ஈஸ்வரிக்கு அடுத்தடுத்த பிரச்சனைகள் வருகிறது. என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் கோபி ஈஸ்வரியையும் வீட்டிற்குள் கூட்டிட்டு வருவதை பார்த்ததும் கமலா அதிர்ச்சியடைகிறார். பிறகு கமலாவும் ஈஸ்வரியும் ஒருவரை ஒருவர் பார்த்து முறைத்துக் கொள்கிறார்கள். அதற்கு பிறகு ஈஸ்வரி உட்கார வைத்து கமலா நான் போய் காபி கொண்டுட்டு வரேன் என்று கிச்சனுக்கு போய் ராதிகாவிடம் நீ வந்த சரி, மாப்பிள்ளையும் வந்தாரு ஓகே... ஆனா அந்த அம்மா எதுக்கு இங்க வந்துச்சு? உங்களை விட்டுட்டு போக வந்து இருக்கா என்று கேட்க,

Baakiyalakshmi Serial May 18th promo and episode full update

அதற்கு ராதிகா இல்ல அம்மா அவங்களும் இனி இங்கே தான் இருக்க போறாங்க என்று வீட்டில் நடந்த விஷயங்களை எல்லாம் சொல்கிறார். அதோடு நான் வேண்டாம் என்று சொன்னாலும் கோபி கேட்காமல் கூட்டிட்டு வந்துட்டாரு என்று ராதிகாவும் சலித்துக் கொள்கிறார். அதை தொடர்ந்து கமலா அந்த அம்மா வீட்டில் மகாராணி மாதிரி இருக்கும் இங்க அதுக்கு என்னால சேவை செய்ய முடியாது.

அதை ரெண்டு நாளில் நீயே வீட்டை விட்டு போக சொல்லு இல்லன்னா நானே அதை எப்படி ஓட விடுவேன் மட்டும் பாரு என்று சொல்கிறார். மறுபக்கத்தில் கோபி ஈஸ்வரியிடம் இதுவும் உன் வீடுதாமா நீங்க இங்க மகாராணி மாதிரி இருக்கலாம். உங்களுக்கு ஒரு பிரச்சனை வராமல் நான் பார்த்துக்கிறேன் என்று பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது ஈஸ்வரி ராதிகாவோட அம்மாவுக்கு நான் இங்க வந்தது புடிக்கல.

புது திரைப்படத்தில் கதாநாயகியாக மாறும் "சிறகடிக்க ஆசை சீரியல்" நடிகை.. தலைப்பு என்னன்னு தெரியுமா?
என்னை பார்த்ததுமே அவங்க மூஞ்சி காத்து போன பலூன் மாதிரி ஆகிட்டு என்று சொல்ல, கோபி அப்படியெல்லாம் இல்லம்மா உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராது என்று சொல்கிறார். மறுபக்கத்தில் பாக்கியா வீட்டில் எல்லோரும் சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது ஈஸ்வரி பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். அதற்கு இனியா அவங்களால அந்த வீட்டில ஒரு நாள் கூட இருக்க முடியாது.

Baakiyalakshmi Serial May 18th promo and episode full update

அங்கே தனியா ரூம் கிடையாது. அவங்க சமைக்கிற சாப்பாடு நல்லா இருக்காது. கண்டிப்பா பாட்டி கிளம்பி வந்துடுவாங்க என்று சொல்ல ராமமூர்த்தி அங்க அவ பட்டாதான் அவளுக்கு புத்தி வரும். ஈஸ்வரி அங்க இருக்கிற வரைக்கும் நான் சந்தோசமா இருக்கிறேன் என்று சொல்கிறார். அடுத்ததாக கோபி ராதிகாவின் அம்மாவுக்காக எல்லாம் ஏற்பாடுகளையும் செய்து தர வேண்டும் என்று சொல்ல ராதிகா மொட்டை மாடியில் ஒரு ரூம் போட்டு விடலாமா என்று கேட்க,

அதற்கு கோபி அம்மாவுக்கு மூட்டு வலி இருக்கு. அம்மாவால மாடி எல்லாம் ஏற முடியாது என்று சொல்ல அதற்கு ராதிகா லிப்ட் கூட வச்சுக்கலாம் என்று சொன்னதும் இது நல்ல ஐடியாவா இருக்கு என்று கோபி சொல்ல அதற்கு ராதிகா நாம இருக்கிறது வாடகை வீடு என்று ஞாபகப்படுத்துகிறார். பிறகு ஈஸ்வரி ஹாலில் உட்கார்ந்திருக்கும் போது கமலா கிச்சனில் இருக்க, ஈஸ்வரி எனக்கு தண்ணி வேண்டும் என்று கேட்க கமலா கண்டுகொள்ளாமல் இருக்கிறார்.

ஈஸ்வரி திரும்பத் திரும்ப கேட்டு ஒரு கட்டத்தில் அவரே கிச்சனுக்கு எழுந்து வந்து ராதிகா எங்கே என்று கேட்க, அதற்கு அவ ரூமில் இருக்கிறார் என்று கமலா சொல்ல, நான் தண்ணி வேணும்னு கேட்டுட்டே இருக்கேன் காதுல விழலையா என்று கேட்க அதற்கு கமலா கேட்கவில்லை என்று சொல்கிறார். பிறகு ஈஸ்வரி ராதிகாவை கூப்பிட அதற்கு கமலா அவா ரெஸ்ட் எடுக்குறா ரெஸ்ட் எடுக்கட்டும் என்று தடுக்கிறார்.

Baakiyalakshmi Serial May 18th promo and episode full update

உங்களுக்கு வேணும்னா நீங்க தான் வந்து எடுத்துக்கணும் இது ஒன்னும் ஹோட்டல் இல்ல என்று சொல்கிறார். அதைத் தொடர்ந்து ஈஸ்வரி பால் இல்லையா என்று கேட்க, கமலா அமைதியாகவே இருக்க, ஈஸ்வரி பாலை தேடும் போது கிண்ணத்தில் இருந்த பால் கொட்டி விடுகிறது. அதனால் வேற பால் இல்லையா என்று ஈஸ்வரி கேட்க கமலா இல்லை என்று சொல்கிறார். அதனால் ஈஸ்வரி கோபமாக வெளியே கிளம்ப அதற்கு கமலா இதை யார் கிளீன் பண்ணுவா என்று கேட்கிறார்.

Baakiyalakshmi Serial May 18th promo and episode full update

அதற்கு ஈஸ்வரி நீ கிளீன் பண்ணு இல்ல உன் பொண்ணை கூப்பிட்டு பண்ண சொல்லு என்று சொல்லியபடி வெளியே கிளம்ப கமலா நீங்க இங்க வந்தது எனக்கு சுத்தமா பிடிக்கல என்று சொல்ல, அதற்கு ஈஸ்வரி நான் கொஞ்ச நாள் இருந்துட்டு போலாம்னு தான் வந்தேன். ஆனா நீ எப்போ நான் வந்தது பிடிக்கலன்னு சொன்னியோ அதனால நான் இனி இங்கேதான் இருக்கப் போறேன் என்று ஷாக் கொடுத்து வெளியே வருகிறார்.

மறுபக்கத்தில் செழியன் ஜெனியிடம் சாக்லேட்டை கிப்ட் ஆக கொடுத்து இனி மாலினி பற்றி தயவு செய்து பேச வேண்டாம். நான் கஷ்டப்பட்டாலும் பரவால நீ அதை நினைச்சு கஷ்டப்படக்கூடாது. இனிமே நான் உன்னை சந்தோசமா வச்சிக்குவேன் என்று ஜெனியிடம் மன்னிப்பு கேட்க, ஜெனி செழியனுக்கு ஆறுதல் சொல்லி சாரி கேட்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+