பாக்கியலட்சுமி: ஜெனியால் வெடித்த பிரச்சனை.. ராதிகாவுக்கு வந்த சிக்கல்.. கோபி இப்படி மாறிட்டாரே?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் மே 23ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் ராதிகா வீட்டில் இருந்து கொண்டு ஈஸ்வரி நாடகம் போட்டு கோபியை நம்ப வைத்துக் கொண்டிருக்கிறார். இதனால் ராதிகா கோபத்தில் இருக்கிறார். மறுபக்கத்தில் அமிர்தா ஜெனி இடம் கோபப்படுகிறார். என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
இந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் ஈஸ்வரி மயக்கம் போட்டது போல நடிக்க அதை பார்த்து பதறிப்போன கோபி சாப்பாடு கொண்டு வந்து கொடுத்துவிட்டு ரெஸ்டாரண்டுக்கு போயிட்டு வருகிறேன் என்று சொல்ல, அதற்கு ஈஸ்வரி வேண்டாம் இன்னைக்கு ஒரு நாள் நீ என்கிட்ட இரு எனக்கு இவங்க ஏதாவது பண்ணிடுவாங்கன்னு பயமா இருக்கு என்று சொல்ல கோபி அப்படியெல்லாம் எதுவும் நடக்காதுமா நான் சீக்கிரமா வந்துடுறேன் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார்.

கோபி கிளம்பியதும் ஈஸ்வரி கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து இருக்க இது டிராமா என்பதை தெரிந்து ராதிகாவும் அவருடைய அம்மா கமலாவும் அதிர்ச்சி அடைகின்றனர். அடுத்ததாக ஜெனி தாத்தாவுக்கு சாப்பாடு போட்டு ரூமுக்கு எடுத்துட்டு வர அங்கு ஏற்கனவே அமிர்தா சாப்பாடு கொடுத்து இருப்பதை பார்த்து ஜெனி அப்படியே நிற்கிறார். அப்போது தாத்தா என்னம்மா என்று கேட்க ஜெனி சும்மா வந்தேன் என்று சமாளிக்கிறார்.
பிறகு அமிர்தாவிடம் தாத்தாக்கு சாப்பாடு கொடுத்துட்டா சொல்ல மாட்டீங்களா? என்று ஜெனி கேட்க, அமிர்தா தாத்தாக்கு சாப்பாடு கொடுக்க உங்க கிட்ட கேட்டு தான் கொடுக்கணுமா என்று கேட்க ஜெனி கோபப்படுகிறார். அடுத்ததாக கமலா ராதிகாவுக்காக ஆப்பிள் கட் பண்ணி வைத்துக் கொண்டு கிச்சனுக்கு போக ஈஸ்வரி அதை எடுத்து வந்து சாப்பிட அதை பார்த்த கமலா கோவப்படுகிறார்.
அப்போது ராதிகாவும் உங்களுக்கு சுகர் இருக்கு அப்புறம் சுகர் அதிகமாகி திரும்பவும் மயக்கம் போட்டு விழுந்தா, கோபி எங்களை தான் ஏதாவது சொல்லுவாரு என்று தட்டை பிடித்துக் கொள்ள உடனே ஈஸ்வரி கோபிக்கு போன் போட்டு சாப்பிடும் போது தட்டை கூட பிடுங்கிக்கிறாங்க, ராதிகா தான் இப்படி எல்லாம் பண்ணுறா என்று சொன்னதும் கோபி ராதிகாவுக்கு போன் போட்டு சத்தம் போட, ராதிகா சொல்ல வருவதை கூட கேட்காமல் போனை கட் பண்ணி விடுகிறார்.

பிறகு கோபமான ராதிகா, இதை நீங்களே சாப்பிடுங்க என்று ஈஸ்வரியிடம் தட்டை கொடுக்க ஈஸ்வரி எனக்கு வேண்டாம் எனக்கு சுகர் இருக்கு என்று பல்டி அடிக்கிறார். பிறகு ஜெனி தாத்தாவிடம் பேசிக் கொண்டிருக்கும்போது பாக்யாவும் எழிலும் வீட்டிற்கு வருகின்றனர். அப்போது எழில் புரொடியூசர் கதையை கேட்டு ஓகே சொல்லிட்டதாக சொல்ல எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர்.
பிறகு பாட்டி இடமும் எந்த சந்தோஷமான செய்தியை சொல்ல வேண்டும் என்று ஈஸ்வரிக்கு போன் போட ஈஸ்வரி எழில் போனிலிருந்து கால் வருவதால் போனை எடுக்க வில்லை. பிறகு தாத்தா போனிலிருந்து போன் அடிக்க அதை ஈஸ்வரி எடுக்கிறார். அப்போது எழில் தான் ப்ரொடியூசரிடம் கதை சொல்லி ஓகே சொன்னதை சொல்ல சந்தோஷப்படும் ஈஸ்வரி அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் சரி ஓகே என்று சொல்கிறார்.
அதற்கு எழில் இவ்வளவுதான் உங்க சந்தோஷமா என்று கேட்க ஆமா நீ குழந்தை பெற்றுக்கொள்கிறேன் என்று சொல்லு நான் ரொம்ப சந்தோஷப்படுவேன் என்று சொல்கிறார். இதைக் கேட்ட கமலா யாரிடமோ குழந்தை பெத்துக்க சொல்றாங்க. பெத்த பையன் குழந்தை பெத்துக்கிட்டா கஷ்டப்படுறாங்க என்று சொல்ல அதற்கு ஈஸ்வரி அது யாரோ இல்லை என்னுடைய பேரன் என்று பதிலடி கொடுக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications