ஈஸ்வரியை கதிகலங்க விட்ட ராதிகா.. பாக்யாவும் இப்படி பேசிட்டாங்களே.. செல்வி கொடுத்த ஐடியா! பாவம் கோபி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் மே எட்டாம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் ராதிகா கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை தெரிந்து ஈஸ்வரி ராதிகாவின் கர்ப்பத்தை கலைக்க சொல்ல அதற்கு ராதிகா முடியாது என்று அவமானப்படுத்தி அனுப்புகிறார். இது பற்றி பாக்கியாவும் தன்னுடைய கருத்தை தெரிவித்து இருக்கிறார். என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் ஈஸ்வரி ராதிகாவிடம் இந்த குழந்தை வேண்டாம் கோபிக்கும் பிள்ளைகள் இருக்கு, உனக்கும் பிள்ளை இருக்கு என்று சொல்ல அதற்கு ராதிகா எனக்கு இந்த குழந்தை வேணும். நான் குழந்தையை பெத்துக்கத்தான் போறேன் என்று ஈஸ்வரியை எதிர்த்து பேச அதற்கு ஈஸ்வரி நீங்க இந்த வீட்ல தானே இருக்கீங்க? ஜெனி அமிர்தா ரெண்டு பேரும் எங்க வீட்ல தான் இருக்காங்க.

நாளைக்கு இனியாவிற்கு மாப்பிள்ளை வீட்டிலிருந்து வந்தா உன்னை பார்த்து என்ன நினைப்பாங்க? இதை பற்றி எல்லாம் நீ யோசிக்க மாட்டீங்களா? என்று கேட்க அதற்கு ராதிகா நான் எதற்கு யோசிக்கணும் என்று ஈஸ்வரிக்கு அதிர்ச்சி கொடுக்கிறார். மேலும் அன்னைக்கு அமிர்தா கிட்ட என்ன சொன்னீங்க? எழிலுக்கு உனக்கும் ஒரு பிடிப்பு வேண்டும் அதுக்காக குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள் என்று சொன்னிங்க.
அதுபோல எனக்கும் கோபிக்கும் ஒரு பிடிப்பு வேண்டும். அதனால் இந்த குழந்தையை நான் பெற்றுக்க போறேன் என்று உறுதியாக சொல்ல கோபி ராதிகா பக்கம் பேசவா? அம்மா பக்கம் பேசவா என்று தெரியாமல் நின்று கொண்டிருக்க ஈஸ்வரி உடைந்து போய் கீழே வருகிறார். ராதிகா கோபியை முறைப்பதை பார்த்ததும் கோபி ஈஸ்வரி பின்னாடியே ஓடிவர, ஈஸ்வரி கோபியிடம் போய் உன் பொண்டாட்டி முந்தானையை பிடிச்சுக்கிட்டு சுத்து என்று திட்டிவிட்டு கீழே வருகிறார்.
கீழே வந்தும் ஈஸ்வரி சோகமாக இருப்பதை பார்த்து பாக்கியா ராதிகா கர்ப்பமாக இருப்பது தெரிஞ்சுட்டா அதனால நீங்க வருத்தமா இருக்கீங்களா? என்று கேட்க உனக்கு இது எப்படி தெரியும் என்று கேட்க அதற்கு பாக்கியா நாம் மூன்று குழந்தை பெற்று இருக்கிறேன். ஒருத்தங்க நடவடிக்கையை பார்த்து அவங்க கர்ப்பமாக இருக்காங்களா? இல்லையா? என்று தெரியாதா என்று கேட்கிறார்.
அதோடு இதை பற்றி எல்லாம் நீங்க யோசிக்காதீங்க. உங்க உடம்பு ரொம்ப முக்கியம் என்று சொல்லிவிட்டு எழுந்து வருகிறார். பாக்யாவும் ஈஸ்வரியும் பேசிய விசயத்தை கேட்டு செல்வி அதிர்ச்சி அடைகிறார்கள். மறுபக்கத்தில் எனக்கு இந்த குழந்தை வேண்டும் யார் என்ன சொன்னாலும் நான் இந்த குழந்தைய பெற்று வளர்க்க தான் போறேன். எனக்கு என்ன வயசு ஆயிடுச்சு? நான் குழந்தை பெத்துக்க கூடாதா?

நாளைக்கு நீங்க எல்லாரையும் கூப்பிட்டு நான் கர்ப்பமாக இருக்கிற விஷயத்தை சொல்றீங்க. நாம இந்த வீட்டில இருக்கிறதாலதான இவங்களுக்கு பிரச்சனை. நாம வீட்டை விட்டு வெளியே போயிடலாம் என்று சொல்ல கோபி நாளைக்கு சொல்லிட்டுறேன் என்று வாக்கு கொடுக்கிறார். பிறகு பாக்யா மொட்ட மாடியில் துணி மடித்துக் கொண்டிருக்கும் போது செல்வி உண்மையாகவே ராதிகா கர்ப்பமாக இருக்கா என்று கேட்க,
அதற்கு பாக்கியா ஆமாம் என்று சொன்னதும் எப்படிக்கா இதையெல்லாம் தாங்கிக்கிட்டு இருக்க என்று ஈஸ்வரி கேட்க, அதற்கு பாக்கியா என் வாழ்க்கையில் யாரோ என்று ஆகிவிட்டார். அப்படி இருக்கும்போது எதுக்கு நான் கவலைப்பட வேண்டும் என்று கேட்க, அதற்கு செல்வி இதையே என் புருஷன் பண்ணி இருந்தா நான் அவனுக்கு விஷத்தை வச்சிருப்பேன் என்று சொல்ல, அதற்கு பாக்கியா நான் எப்போ அவங்க ரெண்டு பேரையும் ஹாஸ்பிடலில் ஒண்ணா பார்த்தேனே அப்பவே எல்லாம் முடிஞ்சு போச்சு. இப்ப என் வாழ்க்கையில் அவர் யாரோ என்று ஆகிவிட்டார் என்று சொல்கிறார். இப்படியாக இந்த எபிசோடு முடிவடைகிறது.
-
2026 தேர்தல் யார் ஜெயிப்பார்கள்? ‘நீயா நானா’வில் ஜோதிடர்கள் உடைத்த ரகசியம்! பெண்கள் ஓட்டு, மறு எலக்சன் இருக்காமே! -
சிறகடிக்க ஆசை அப்டேட்: நிஜ கேரக்டரை காட்டிய சைக்கோ அருண்.. முத்துவால் உடைந்த உண்மை.. விஜயாவுக்கு ஆப்பு -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க












Click it and Unblock the Notifications