பாக்கியலட்சுமி: கோபி மீது கம்ப்ளைன்ட் கொடுத்த பாக்யா.. போலீஸ் வந்தாச்சு! செழியன் செய்த செயல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் நவம்பர் 14ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. இதில் கோபி மீது பாக்கியா போலீசில் கம்பளைண்ட் கொடுத்திருக்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

பாக்கியலட்சுமி சீரியலில் எல்லோரும் எதிர்பார்த்த தருணம் வந்துவிட்டது. கோபி தன்னுடைய அப்பாவின் இறுதி சடங்கில் தன்னை கலந்து கொள்ள விடாமல் செய்த காரணத்திற்காக பாக்கியாவை பழிவாங்க வேண்டும் என்று முழு வில்லனாக மாறியிருந்தார். பாக்கியா பிசினஸில் தோற்றுப் போக வேண்டும், அதோடு குழந்தைகளையும் தன் பக்கம் இழுத்துக் கொள்ள வேண்டும் என்று கோபி ப்ளான் போட்டு பாக்யாவை சிக்க வைத்திருந்தார்.

baakiyalakshmi serial vijay tv

பாக்கியா ரெஸ்டாரண்டில் பிரியாணி ஆர்டர் எடுத்து சமையல் செய்தபோது தன்னுடைய செஃப் ஒருவரை அங்கு அனுப்பி வைத்து அந்த ஆர்டரை கெடுக்க சொல்லியிருந்தார். அந்த செஃப் பிரியாணியில் கெட்டுப்போன இறைச்சியை கலந்துவிட்டார். அந்த பிரியாணியை சாப்பிட்டு பலருக்கு உடல்நிலை சரியில்லாமல் போக எல்லோரும் பாக்யா ரெஸ்டாரண்டில் பிரச்சனை செய்திருந்தனர்.

கடைசியில் பாக்யாவிற்கு பைன் மட்டும் போட்டுவிட்டு அவருக்கு வார்னிங் கொடுத்து விட்டனர். ஆனால் கெட்டுப் போன சாப்பாட்டை அந்த செஃப் குழந்தையும் சாப்பிட்டு அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போயிருக்கிறது. பிறகு செஃப் வேலைக்கு வரவில்லை என்று பார்ப்பதற்காக அவருடைய வீட்டிற்கு பாக்யா போன பிறகுதான் கோபி சொல்லித்தான் செஃப் தன்னுடைய ரெஸ்டாரண்டில் வந்து சேர்ந்தார், அவரால் தான் பிரியாணி ஆர்டர் பிரச்சனை வந்தது என்ற முழு உண்மையையும் தெரிந்து கொண்டார்.

அதே செஃப்பை வைத்து அடுத்ததாக ஸ்வீட் ஆர்டர் எடுத்து அதை நேற்று சிறப்பாக செய்து முடித்து இருந்தார். அதோடு கோபி தான் செஃப்பை அனுப்பி வைத்து தன்னுடைய வேலையை கெடுத்தது என்ற மொத்த உண்மையையும் வேலை பார்ப்பவர்கள் மற்றும் ஈஸ்வரிக்கும் பாக்கியா தெரியப்படுத்தி இருக்கிறார்.

இப்படியான நிலையில் செழியன் மற்றும் இனியா இருவரையும் மனதை மாற்றி கோபி தன் பக்கம் இழுத்து இருக்கிறார். எழிலுக்கு புதியதாக படம் பண்ண வாய்ப்பு கொடுப்பது போன்று செய்து அதில் பாக்கியாவை அவமானப்படுத்த வேண்டும் என்று பிளான் போட்டு இருந்தார். இதில் தெரியாமல் சிக்கிய எழில் வேறு வழி இல்லாமல் பாக்யாவை தன்னுடைய ஃபங்ஷனில் கலந்து கொள்ள வேண்டாம் என்று சொல்லி இருந்தார்.

ஆனால் அவர் எடுத்திருக்கும் படத்திற்கு பாக்கியலட்சுமி என்று பெயர் வைத்திருக்கிறார். இந்த நிலையில் இன்றைய எபிசோடில் கோபியின் வீட்டிற்கே சென்று நீங்கதான் என்னுடைய பிசினஸை கெடுக்க வேண்டும் என்பதற்காக பிரியாணி ஆர்டரில் பிரச்சனை வர வைத்தது என்று எனக்கு தெரிந்து விட்டது. ஆனால் உங்களை நான் சும்மா விடமாட்டேன் என்று சொல்லிவிட்டு வந்து இருந்தார்.

baakiyalakshmi serial vijay tv

அதைத்தொடர்ந்து தற்போது வெளியான ப்ரோமோவில் கோபி மீது பாக்கியா போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுக்கிறார். என் வளர்ச்சி பிடிக்காத கோபிநாத் தான் நடந்த எல்லாத்துக்கும் காரணம் என்று செஃப் வைத்து கம்ப்ளைன்ட் கொடுக்குறார். அதைத் தொடர்ந்து போலீஸ் கோபியை கைது செய்து வண்டியில் ஏற்றுகின்றனர்.

இதை பார்த்த செழியன் ஈஸ்வரி இடம் அப்பாவ போலீஸ் அரெஸ்ட் செய்கிறது என்று சொல்லிவிட்டு போலீசிடம் ஓடி வந்து கெஞ்சுகிறார். எங்க அப்பாவை விட்டுருங்க என்று செழியன் கெஞ்சி கொண்டிருக்கும்போது வண்டிக்குள் இருந்து கோபி பாக்யாவை முறைத்துக் கொண்டிருக்கிறார்.

கோபி பற்றி செழியனுக்கு உண்மைகள் தெரிய வரும்போது சப்போர்ட் செய்வாரா? அல்லது அப்பா இப்படி எல்லாம் செஞ்சு இருக்க மாட்டாரு என்று கோபிக்காக சப்போர்ட் செய்ய போகிறாரா? என்ற கேள்விகள் எழும்பி வருகிறது. இப்பொழுதுதான் பாக்கியா நல்ல முடிவு எடுத்திருக்கிறார். நாளை என்ன நடக்க போகிறது என்று பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+