பாக்கியலட்சுமி: கோபிக்கு வில்லி பாக்யா மட்டும் அல்ல ராதிகாவும் தான்! இன்று உடைக்கப்பட்ட ரகசியங்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் நவம்பர் 18ம் தேதிக்கான எபிசோடில் கோபியை போலீஸ் அரெஸ்ட் செய்து கூட்டிட்டு போகும்போது ராதிகா அதிர்ச்சி கொடுக்கிறார். அதே நேரத்தில் கோபி பற்றிய மொத்த உண்மைகளும் கோபியின் பிள்ளைகளுக்கு தெரிய வருகிறது.

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் கோபியை விசாரிக்க போலீஸ் ஸ்டேஷனுக்கு கூப்பிடுகின்றனர். ஆனால் கோபி நான் வரமாட்டேன் என்று சொல்ல, ராதிகாவின் அம்மாவும் அனுப்ப முடியாது நாங்க எங்க தெரிஞ்ச இன்ஸ்பெக்டர் கிட்ட பேசுறோம், என்னுடைய மகன் வந்து பேசுவான் என்று பல காரணங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

baakiyalakshmi serial vijay tv

அதற்கு போலீஸ் நீங்க யாரை வேணாலும் ஸ்டேஷனுக்கு வர சொல்லுங்க. இப்ப நாங்க கூட்டிட்டு போறோம் என்று கோபியை வெளியே கூட்டிட்டு வர தெருவில் உள்ள எல்லோரும் அதை வேடிக்கை பார்க்கின்றனர். அப்போது பாக்கியா மற்றும் செல்வி இருவரும் ராதிகா வீட்டில் நடப்பதை பார்த்து ரசித்துக் கொண்டிருக்கின்றனர்.

அப்போது ராதிகா கோபிக்கு சப்போர்ட் எதுவும் செய்யாமல் கோபி போலீஸிடம் பேசுவதை பார்த்துக்கொண்டே இருக்கிறார். அந்த நேரத்தில் செழியன் வந்து என்ன வெளியே நிக்கிறீங்க என்று பாக்கியாவிடம் பேசியபடியே கோபி வீட்டை பார்க்க அங்கு கோபியை போலீஸ் அரெஸ்ட் செய்வதை பார்க்கிறார்.

உடனே ஓடி சென்று என்னாச்சு என்று செழியன் கேட்டதும் கோபி பாக்கியா கறி விஷயத்துல என் மேல கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்கா என்று சொன்னதும் செழியன் ஓடி வந்து பாக்கியாவிடம் ஏன் இப்படி பண்ணுனீங்க என்று கேட்க, பாக்யா எதுவும் சொல்லாமல் இருக்கிறார். பிறகு ஓடி சென்று ஈஸ்வரி இடம் சொல்லி ஈஸ்வரியை வெளியே கூட்டிக்கொண்டு வருகிறார்.

baakiyalakshmi serial vijay tv

அப்போது ஈஸ்வரியும் ஜெனியும் வெளியே வந்து பார்க்க மீண்டும் கோபி இடம் வந்து செழியன் அப்பாவை விட்டுடுங்க என்று சொன்னதும் போலீஸ் எதுவாயிருந்தாலும் ஸ்டேஷனில் வந்து பேசிக்கோங்க என்று ஜீப்பில் கோபியை ஏற்றிக்கொண்டு செல்கின்றனர்.

அப்போது பக்கத்து வீட்டுக்காரர்கள் பாக்கியாவிடம் உங்க வீட்டில் மட்டும் டெய்லி ஒரு பிரச்சனை நடந்துக்கிட்டே இருக்கு உங்க வீட்டுக்கு அடிக்கடி போலீஸ் வருது. உங்களுக்காகவே ஒரு ஸ்டேஷனை பக்கத்தில் கட்டிடுவாங்க போல என்று கிண்டல் செய்ய அதற்கு பாக்கியா அவர்களுக்கு பதிலடி கொடுத்து அனுப்பி வைக்கிறார்.

baakiyalakshmi serial vijay tv

அப்போது ராதிகாவின் அம்மா நீங்க நல்லாவே இருக்க மாட்டீங்க என்று சாபம் கொடுக்க, அதற்கு பாக்கியா சரி என்பது போல தலையாட்டி விட்டு வீட்டுக்குள் சென்று விடுகிறார்கள். செல்வியிடம் ரெஸ்டாரண்டுக்கு லேட்டா தான் வருவேன் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது செழியன் எதற்காகமா இப்படி பண்றீங்க? எங்க கிட்ட கூட எதுவுமே சொல்லல என்று கோபப்பட அதற்கு பாக்கியா உங்ககிட்ட சொல்லி இருந்தா என்ன நடந்திருக்கும் என்று கேட்கிறார்.

அதோடு இத்தனை நாளா நான் இவர் மிரட்டறாரு சாபம் விடுவாரு போனா போகட்டும் என்று இருந்தேன் ஆனால் பிரியாணியில் கெட்டுப் போன கறியை போட்டு இருக்காரு. அன்னைக்கு யாராவது இறந்து போயிருந்தா என்ன ஆகிருக்கும்? நான் ஜெயில்ல போய் இருந்திருப்பேன். அப்போ அது நடந்தா உங்களுக்கு சந்தோஷமா? ரெஸ்டாரண்ட் அடிச்சு ஒடச்சிருப்பாங்க என்று பேசிக் கொண்டிருக்கும் போது எழிலும் அமிர்தாவும் வருகின்றனர்.

baakiyalakshmi serial vijay tv

அப்போது செல்வி உன்னை அன்னைக்கு ரோட்டில் பேசும்போது கம்ப்ளைன்ட் கொடுத்து இருந்தா இவ்வளவு தூரம் போய் இருக்காது என்று சொன்னதும், ஈஸ்வரி கோபமாகி வாய மூடிட்டு இருடி என்று கத்துகிறார். அதோடு பாக்கியா விடம் நீ கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கக் கூடாது பாக்கியா என்று சொன்னதும் பாக்கியா அதிர்ச்சி அடைகிறார்.

இருந்தாலும் நீ அவனை மிரட்டி இருக்கலாம். அல்லது புத்தி சொல்லி இருக்கலாம் என்று சொன்னதும் செழியன் எங்க கிட்டயும் ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம் என்று சொல்கிறார். அதற்கு இனியா உனக்கு வேற என்ன டாடி தேவையில்லாம இருக்கலாம். ஆனா எங்களுக்கு முக்கியம் என்று கோபிக்கு சப்போர்ட் செய்கிறார்.

அப்போது எழில் ஈஸ்வரி இடம் நீங்க ஜெயிலுக்கு போகும்போது உங்க பையன் மேல கோபம் இருந்துச்சி இன்னைக்கு அவர் போகும் போது கோபம் போயிடுச்சா என்று கேட்கிறார். அவர் ஜெயிலுக்கு போறதுதான் கரெக்ட் வெளியே இருந்தால் இருக்கிறவங்களுக்கு தான் ஆபத்து என்று எழில் சொல்ல செழியன் உனக்கு உன்னுடைய அபிஷனுக்காக எவ்வளவு கஷ்டப்பட்டு உனக்காக அவர் வாங்கிக் கொடுத்தார்?

baakiyalakshmi serial vijay tv

நீ இப்படிபேசிட்டு இருக்க என்று கேட்டதும், நீ வேணா அவருக்கு சிலை வைத்து கொண்டாடு என்று சொல்ல, செழியன் நான் கண்டிப்பா வைப்பேன் என்று சொல்கிறார். இதை கேட்டு பாக்கியா அதிர்ச்சி அடைகிறார். அதற்கு எனில் நீ கம்ப்ளைன்ட் கொடுத்தது தான் சரிமா என்று பாக்யாவுக்கு சப்போர்ட் செய்ய செழியன் என்னடா அம்மா மேல ரொம்ப பாசம்?

அன்னைக்கு பட பூஜைக்கு வரக்கூடாதுன்னு சொன்னவன் என்று கேட்க, அதற்கு எழில் என்ன நடந்தது என்று தெரியாமல் பேசிட்டு இருக்காத, அந்த தியாகி கோபிநாத் தான் அம்மாவை பட பூஜைக்கு வரக்கூடாதுன்னு சொன்னதுக்கு காரணம் என்று சொல்ல, குடும்பத்தினர் எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+