பாக்யாவுக்காக ஈஸ்வரியை கதறவிட்ட ராதிகா.. கோபிக்கு அதிர்ச்சி கொடுத்த பழனிச்சாமி.. ஆட்டம் ஆரம்பம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் நவம்பர் 20ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
இதில் பாக்யாவுக்கு சப்போட்டாக ராதிகா கோபி மற்றும் ஈஸ்வரி இடம் கேள்வி கேட்கிறார்.

அதே நேரத்தில் வீட்டிற்கு வந்த பழனிச்சாமி பாக்கியாவை அவசரமாக வெளியே கூட்டிட்டு போக அதை பார்த்து கோபி அதிர்ச்சியடைகிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் ஒரே கட்டிலில் ஈஸ்வரியும், கோபியும் படுத்துக்கொண்டு பாக்கியா பற்றிய பேசிக் கொண்டிருக்க அதனால் கோபமான ராதிகா இப்படி பேசிக்கிட்டே இருந்தா எப்படி தூங்குவது? பாக்கியா பிரச்சனையை அவங்க பார்த்துப்பாங்க. நீங்க பேசாம தூங்குங்க. உங்க பிசினஸ்ல்ல எவ்வளவு பிரச்சனை இருக்கு.
அதெல்லாம் பாக்காம பாக்கியா விஷயம்தான் உங்களுக்கு பெருசா தோணுதா? பேசாம தூங்குறிங்களா இல்லையா என்று திட்ட அதைத்தொடர்ந்து ஈஸ்வரியும் கோபியும் அமைதியாக தூங்குகின்றனர். மறுபக்கத்தில் பாக்கியா இனியா கிட்ட நீ காலேஜ் முடிகிறதுக்குள்ள நான் பெரிய தொழிலதிபராகி நிறைய கார் வாங்கி, நானே அந்த காரை ஓட்டி உன்னை காலேஜ்ல கொண்டு வந்து விடுவேன் என்று சொல்ல இதெல்லாம் நடக்கும்மா என்று இனியா சொல்லிக் கொண்டிருக்கிறார்.

அடுத்தநாள் காலையில் பாக்கியா செழியனுக்கு காபி போட்டு கொண்டு போய் கொடுக்கிறார். அப்போது செழியன் நான் பண்ணினது தப்புதான் அதை நியாயப்படுத்த விரும்பலான இப்ப ஜெனி இல்லாதது எனக்கு ரொம்பவே கஷ்டமா இருக்கு. நான் இனிமே எந்த தப்பும் பண்ண மாட்டேன். அவ கிட்ட எவ்வளவோ பேசுவதற்கு ட்ரை பண்றேன் ஆனா அவ பேச மாட்டேங்குற. என்கிட்ட நீயும் பேசல என்று பீல் பண்ணி பேசிக் கொண்டிருக்கிறார்.
அதற்கு பாக்யா நீ பண்ணுன தப்பால்ல ஜெனிதான் கஷ்டப்படுறா கொஞ்ச நாள் அவளை தொந்தரவு பண்ணாம இரு, ஒரு நாள் உன்னை புரிஞ்சுகிட்டு வருவா என்று ஆறுதல் கூறுகிறார். மறுபக்கத்தில் ஈஸ்வரி பாக்யாவிடம் தனக்கு காபி போட சொல்கிறார். அப்போது பக்கத்தில் இருக்கும் கோபிக்கும் சேர்த்து காபி போடு என்று சொல்ல அதற்கு பாக்கியா அவர பார்த்துக்க ராதிகா இருக்காங்கல்ல என்று கேட்க, அதற்கு ஈஸ்வரி அவா காலையிலேயே எழுந்து வாக்கிங் போறேன்னு போனா இன்னும் வரல.
உன்னை மாதிரியே அவளும் கோபியை பற்றி கொஞ்சம் கூட யோசிக்கவே மாட்டேங்குற. நீ டீ போட்டு குடு என்று சொல்கிறார். அதைத்தொடர்ந்து பாக்யா ஈஸ்வரி, ராமமூர்த்தி, கோபி மூன்று பேருக்கும் காபி கொண்டு வந்து கொடுக்க அப்போது ராதிகாவும் உள்ளே வருகிறார். அதனால் கோபமான ஈஸ்வரி என் பையன் காலையில் எழுந்த உடனே காபி குடிப்பான்.

நீதான் எங்கேயோ போயிட்ட நீ அவனுக்கு காபி போட்டு கொடுக்கல அதனால் தான் நான் பாக்கியா கிட்ட போட சொன்னேன் என்று சொல்கிறார். அதற்கு ராதிகா எனக்கும்தான் காலையில் எழுந்த உடனே காபி குடிக்கனும்னு தோணும் என்று சொல்ல, அப்போது பாக்கியா நான் எழிலுக்காக காபி போட்டேன் அவன் வீட்டில் இல்ல நீங்க வேணும்னா குடிக்கலாம் என்று காபியை நீட்டுகிறார். அந்த காபியை ராதிகாவும் வாங்கி குடிக்கிறார்.
இதை பார்த்ததும் ஈஸ்வரியும், கோபியும் ஷாக் ஆகின்றனர். அதைத்தொடர்ந்து பழனிச்சாமி வீட்டிற்கு வந்து பாக்யாவிடம் ஒரு இடத்திற்கு போகணும் சீக்கிரமா வாங்க என்று கூப்பிட பாக்யா எங்கே என்று கேட்கிறார். ஆனால் பழனிச்சாமி அதை சொல்லாமல் எனக்கு நேரம் இல்ல வாங்க என்று சொல்லி கொண்டு இருக்க அதற்கு ராமமூர்த்தியும் போயிட்டு வாமா என்று சொல்கிறார். இதை பார்த்ததும் கோபி என்ன அவன் கூப்பிட்டதும் இவ போறா என்று மைண்ட் வாய்ஸில் பேசிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications