கோபியின் ஆட்டத்தை அடக்கிய ராதிகா.. ஈஸ்வரியின் திமிர் பேச்சுக்கு பழனிச்சாமியால் ஆப்பு வைத்த பாக்யா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் நவம்பர் 21 ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில் பாக்யாவிற்கு கைநழுவி போன கேட்டரிங் காண்ட்ராக்ட் மீண்டும் பழனி சாமியால் கிடைக்கிறது.

அதே நேரத்தில் பாக்யா விஷயத்தை கோபி கேள்வி கேட்பதை பார்த்து ராதிகா மிரட்டுகிறார் இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
இன்றைய எபிசோடில் ஆரம்பத்தில் பாக்கியா வீட்டிற்கு வந்திருக்கும் பழனிசாமி அவசரமாக வெளியே போகணும் வாங்க என்று கூப்பிட அதற்கு பாக்கியா என்னவென்று விசாரிக்கிறார். ஆனால் அதை சொல்லாமல் பழனிச்சாமி அவசரப்படுத்த ஒரு கட்டத்தில் ராமமூர்த்தி சரி அவரும் கூப்பிடுகிறாரே என்று போயிட்டு வா ஓகே சொல்ல பாக்யா கிளம்பி போகிறார்.
அதை பார்த்த கோபி அதிர்ச்சியாகி இவ எங்க போறா என்று கேட்க, அந்த நேரத்தில் கிச்சனில் நிற்கும் ராதிகா கரண்டியை எடுத்துக்காட்ட கோபி அமைதி ஆகிறார். அதைத்தொடர்ந்து பாக்கியாவும் பழனிச்சாமியும் போனதும் கோபி ராமமூர்த்தியிடம் நீங்க பண்றது எதுவும் சரி இல்லப்பா என்று சொல்ல, அங்கு வரும் ராதிகா அவங்க எங்க போனா உங்களுக்கு என்ன எதுக்கு இதெல்லாம் விசாரிச்சிட்டு இருக்கீங்க என்று திட்ட அதனால் கோபி வாயை மூடிகிட்டு அமைதியாக போய்விடுகிறார்.
மறுபக்கத்தில் பாக்கியாவை ஒரு இடத்திற்கு கூட்டிட்டு வரும் பழனிச்சாமி கவர்மெண்ட் காண்டாக்ட் எடுத்த நபர் அந்த காண்ட்ராக்ட் யாருக்கோ கொடுக்கப் போறாராம் அதை நம்ம வாங்கிக்கலாம் என்று தான் நான் இங்கு உங்களை கூட்டிட்டு வந்தேன் என்று சொல்ல பாக்கியா சந்தோஷப்படுகிறார். அதைத் தொடர்ந்து காண்ட்ராக்ட் எடுத்த நபர் இடம் பழனிச்சாமியும் பாக்கியாவும் பேசுகின்றனர். அப்போது அவர் தனக்கு ஒரு லட்சம் ரூபாய் இன்னும் அதிகமாக வேண்டும் என்று சொல்ல அதற்கு பாக்கியா ஒரு லட்சம் என்கிட்ட இல்லையே என்று சொல்கிறார்.
அப்போ பழனிச்சாமி ஐம்பதாயிரம் கொடுத்துடுவாங்க என்று சொல்ல சரி என்று அந்த நபரும் காண்ட்ராக்டை பாக்யாவுக்கு கொடுத்துடுங்க என்று சொல்கிறார். மறுபக்கத்தில் வீட்டில் ஈஸ்வரி இருக்கும்போது அங்கு வரும்போது கோபி சாப்டீங்களா என்று விசாரித்தபடியே பாக்யா பழனிசாமி உடன் போன விஷயத்தை சொல்கிறார். ஆனால் ஈஸ்வரி அதை பெரியதாக எடுத்துக் கொள்ளாமல் பேசிக் கொண்டிருக்கிறார்.
அப்போது அமிர்தா பாக்கியா எதற்காக வெளியே போயிருக்கிறார் என்று விஷயத்தை சொல்கிறார். அதைக் கேட்டு கோபி குழப்பத்தில் இருக்கிறார். மறுபக்கத்தில் பாக்யா காண்ட்ராக்ட் கொடுத்தவர்களுக்கு எப்படி பணம் கொடுக்கிறது என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது பழனிச்சாமி நானே தருகிறேன் என்று சொல்ல முதலில் பாக்யா வேண்டாம் என்று மறுப்பு தெரிவிக்கிறார். பிறகு சரி என்று சம்மதிக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகின்றது.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications