பாக்கியலட்சுமி: மீண்டும் அதே கதை? பாக்யா குடும்பத்தின் அடுத்த வீடியோ ரிலீஸ்.. திருந்தாத பிள்ளைகள்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் நவம்பர் 22 ஆம் தேதிக்கான எபிசோடில் கோபி, பாக்யா வீட்டிற்கு வந்து பாக்யாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார் அப்போது அங்கு இருக்கும் ஒரு நபர் வீடியோ எடுத்து அதை இணையத்தில் பதிவிட அந்த வீடியோவை பார்த்து ஈஸ்வரி கோபப்படுகிறார்.
பாக்கியலட்சுமி சீரியலில் ஒவ்வொரு முறையும் கோபி பாக்யாவிற்கு பிரச்சனை கொடுக்கும்போது பிள்ளைகள் பாக்கியாவை புரிந்து கொள்ளாமல் நடந்து கொள்கிறார்கள். பிறகு அவர்களுக்கு ஒரு பிரச்சனை வரும்போது நாங்கள் பாக்யாவை புரிந்து விட்டோம் இனி உனக்கு துணையாக இருப்போம் அம்மா என்று சீன் போடுகிறார்கள்.

ஆனால் சில நாட்களில் மீண்டும் கோபி பக்கம் மாறிவிடுகிறார்கள் இதுதான் வழக்கமாக நடந்து கொண்டிருக்கிறது. பிள்ளைகள் மட்டுமல்லாமல் ஈஸ்வரியும் கூட பலமுறை பட்டும் திருந்தாமல் பேசிக் கொண்டிருக்கும்போது பார்க்கும் ரசிகர்களை எரிச்சல் அடைய செய்கிறது.
இந்த சீரியலில் கதையே இல்லையா எதற்காக வைத்த கதையை மீண்டும் மீண்டும் உருட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பது பார்க்கும் ரசிகர்களின் மனதில் வரும் கேள்வி. இனியாவது சீரியலில் கதையை மாற்றினால் நன்றாக இருக்கும்.

சரி இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்று பார்க்கலாம். கோபி வீட்டிற்கு வெளியே வந்து நின்று கொண்டு பாக்கியாவை வெளியே வருமாறு கத்தி கூப்பிட இனியாவும் செழியனும் வெளியே வருகின்றனர். கோபியை பார்த்ததும் இனியா அழுது கொண்டிருக்கிறார். உடனே கோபி ஒன்னும் இல்லடா என்று ஆறுதல் சொல்லிவிட்டு பாக்கியாவை வெளியே கூப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.
அப்போது பாக்கியா வெளியே வந்ததும் கோபி வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். என்னுடைய பொண்டாட்டி மாமியாரை நீ டிவியில் வர்ற மாதிரி எப்படி பண்ணலாம் என்று கேட்க, அதற்கு பாக்கியா நீங்க என்னுடைய ரெஸ்டாரண்டை எப்படி அழிக்க நினைக்கலாம் என்று கேள்வி கேட்கிறார்.

இவர்கள் இருவரும் சண்டை போடுவது அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அதில் ஒருவர் வீடியோவும் எடுக்கிறார். அதோடு உன்னை நான் சும்மா விடமாட்டேன் என்று கோபி ஆவேசத்தில் பேசிக் கொண்டிருக்கிறார். பாக்யாவும் அதற்கு உங்களை ஜெயிலுக்கு அனுப்பாமல் விடமாட்டேன் என்று பதிலடி கொடுக்கிறார்.
அதற்கு உன்ன எனக்கு கொஞ்சம் கூட பிடிக்காது. உன்ன போய் எனக்கு கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க என்று கோபி சொன்னதும், உங்களால் நான் பட்ட கஷ்டம் போதும் உங்களை விவாகரத்து செய்த பிறகு தான் நான் பெருமூச்சு விட்டேன். அதுக்கு பிறகு தான் என்னைப் பற்றி நான் அறிந்து கொண்டேன் என்று பதிலடி கொடுக்கிறார்.
அப்போது ஈஸ்வரி வா உள்ளே போகலாம் என்று கூப்பிட்டு போகிறார். பிறகு வீட்டிற்குள் வந்ததும் ஈஸ்வரி, செழியன், இனியா எல்லோரும் கொடுத்த கம்ப்ளைன்ட்டை வாபஸ் வாங்குமாறு சொல்கின்றனர். ஆனாலும் இந்த முறை நான் பின்வாங்க போறது கிடையாது என்று பாக்கியா உறுதியாக இருப்பதாக சொல்கிறார்.
பிறகு ஈஸ்வரியை சாப்பிட சொல்ல எனக்கு இதுவே போதும் நான் இப்படியே சாப்பிடாமல் இருந்து மேலே போய் சேருறேன் என்று கோபமாக சொல்கிறார். கடைசியாக அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றனர். பாக்யாவும், கோபியும் சண்டை போட்ட வீடியோ ஃபோனில் வந்திருக்கிறது. இதை பார்த்து செழியன் ஜெனி இனியாவுக்கு காட்டுகின்றனர். அதைப் பார்த்த ஈஸ்வரி இதை எல்லாரும் பார்த்திருப்பாங்க குடும்ப கவுரவம் போயிடுச்சு என்று பேசிவிட்டு போகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications