பாக்கியலட்சுமி: கோபிக்கு எதிராக நேருக்கு நேர் பேசிய இனியா! ஈஸ்வரிக்கு இந்த அவமானம் தேவையா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் நவம்பர் 26 ஆம் தேதிக்கான எபிசோடில் கோபியிடம் இனியா நீங்க எதற்காக அம்மாவை நிம்மதியாக இருக்க விடாமல் பண்ணுறீங்க? என்று இதுவரைக்கும் கோபி செய்த செயல்களை எல்லாம் பட்டியல் போட்டு கேள்வி கேட்கிறார்.

பாக்கியலட்சுமி சீரியலில் எத்தனை முறை அவமானப்பட்டாலும், பிரச்சனையில் சிக்கினாலும் திருந்தாமல் இருந்த இனியா முதல் முறையாக கோபியிடம் தன்னுடைய அம்மாவுக்காக வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். இது இனியாவா என்று சொல்ல வைத்தது. ஆனால் கடைசியில் வழக்கம்போல கட்சி மாறி இருக்கிறார் சரி என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

television baakiyalakshmi serial vijay tv

இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் இனியாவும் கோபியும் கடற்கரைக்கு செல்கின்றனர். அப்போது இனியா கோபி இடம் மனம் விட்டு பேசுகிறார். அதாவது எதற்காக எங்க அம்மாவை இப்படி கஷ்டப்படுத்துறீங்க? நீங்க வீட்ல இருந்த வரைக்கும் நல்லா இருந்தீங்க... ஆனா இப்ப எவ்வளவோ மாறிட்டீங்க.. நீங்க எங்களை விட்டுட்டு வேற கல்யாணம் பண்ணிட்டு போன பிறகும் அம்மா எங்களுக்காக ஓடி ஓடிஉழைச்சுட்டு இருக்காங்க.

அவங்க அவங்க வழியில் போறாங்க ஆனா நீங்க அம்மாவை நிம்மதியாக இருக்க விடுறீங்க இல்ல.. நீங்க வீட்டை விட்டு போன பிறகு நான் எத்தனை நாள் அழுது இருப்பேன் தெரியுமா? நான் மட்டுமல்ல செழியன், எழில் எல்லாரும் எவ்வளவு வருத்தப்பட்டு இருக்கிறோம் தெரியுமா? எழில் பட பூஜைக்கு எதுக்காக அம்மாவை வரவிடாமல் தடுத்தீங்க என்று இனியா கேள்வி கேட்டுக் கொண்டே இருக்க கோபி தன் தரப்பு கருத்தை சொல்ல போகிறார் ஆனால் இனியா பேசவிடாமல் தடுத்து விடுகிறார்.

television baakiyalakshmi serial vijay tv

முதல் முறையாக அம்மாவுக்கு சப்போர்ட் பண்ணி கோபியை எதிர்த்து இனியா பேசுவதை கேட்டு கோபி அதிர்ச்சியாகி நிற்கிறார். இதனால் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் இனியாவை சமாதானம் செய்ய முயற்சி செய்து கொண்டிருக்கிறார். அப்போது நீங்களும் எனக்கு வேணும், அம்மாவும் வேணும் என்று இனியா சொல்லிக் கொண்டிருக்கிறார்.

அந்த நேரத்தில் பாக்யா போன் செய்ய கோபி போனை வாங்கி, இனியா விளையாடிக் கொண்டிருக்கிறா என்று சொல்கிறார். மறுபக்கத்தில் பாக்கியா ஈஸ்வரி கோபி மீது கொடுத்த கம்ப்ளைன்ட் வாபஸ் வாங்க சொல்கிறார். (போன வாரம் முழுக்க கோபி மீது கொடுத்த கம்ப்ளைன்ட்டை வாபஸ் வாங்குவதற்காக தான் ஈஸ்வரி, செழியன், இனியா எல்லோரும் மாறி மாறி சொல்லிக் கொண்டிருக்கின்றனர், அதே தான் இன்றும் நடந்தது.) ஆனால் பாக்யா வழக்கம் போல நான் கேஸை வாபஸ் வாங்க மாட்டேன்என்று மறுத்து விடுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+