பட்டும் திருந்தாத கோபிக்கு இனியா வைத்த குட்டு.. பூமர் பாட்டிக்கு இது தேவைதான்.. எதிர்பாராத முடிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் நவம்பர் 29ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில் கோபிக்கு பழனிச்சாமியோடு பாக்யாவை சேர்த்து தப்பாக பேசுவதற்கு எழில், செழியன் என எல்லோரும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

அதே நேரத்தில் தனக்கு ஆதரவாக இருப்பார்கள் என்று நினைத்த இனியா மற்றும் ராதிகா சொன்ன வார்த்தையை கேட்டு கோபி அதிர்ச்சி அடைகிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் பாக்கியாவை வீட்டில் எல்லாரும் முன்னிலையிலும் கோபி பேசிக் கொண்டிருக்க, அந்த நேரத்தில் ராதிகாவும் இனியாவும் வீட்டிற்கு வருகின்றனர். அப்போது ராதிகாவை பார்த்ததும் கோபி வா ராதிகா நீயே வந்து நியாயத்தை கேளு. என்னை வீட்டை விட்டு போக சொல்லிட்டா. என்னை ஏமாற்றி தான் இந்த வீட்ட புடுங்கினாங்க. இந்த வீட்டை எவ்வளவு கஷ்டப்பட்டு கட்டுனேன் தெரியுமா?
அது மட்டுமல்ல நான் இந்த வீட்டுக்குள்ள வரும்போது பாக்யாவும் பழனிச்சாமியும் தனியா இருந்தாங்க என்று அவர்களைப் பற்றி தப்பாக பேச அதைக் கேட்டு இனியா கோபியை பார்த்து அப்பா நீங்க அம்மாவ பத்தி தப்பா சொன்னீங்கன்னா? நீங்க எப்படி அம்மாவை அப்படி சொல்லலாம் என்று கேட்க, அதற்கு ராமமூர்த்தி பாரு அந்த சின்ன பிள்ளைக்கு தெரிஞ்சது கூட உனக்கு தெரியலையே என்று கோபியை திட்டுகிறார்.
இதைத் தொடர்ந்து ஈஸ்வரி நான்தான் கோபியை வீட்டுக்கு கூட்டிட்டு வந்தேன். அதனால நீ எங்கேயும் போக வேண்டாம் என்று சொல்கிறார். அதோடு பழனிச்சாமி இங்கே இனி வர வேண்டாம் என்று பாக்கியாவிடம் சொல்ல, அதற்கு இனியா, செழியன், எழில், ராமமூர்த்தி என எல்லோரும் பாக்யாவுக்கு ஆதரவாக பேசுகின்றனர். இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ராதிகா எதுவுமே பேசாமல் ரூமிற்கு சென்று தனியாக அமர்ந்து கொள்கிறார்.
அதனால் அதிர்ச்சியான கோபி இவ என்ன என்னை தனியா விட்டுட்டு போயிட்டா என்று புலம்பிய படியே ரூமுக்கு போய் நீ ஏன் வந்துட்ட, வீட்டில் நடக்கிறதை பார்த்தாய் தானே? எனக்கு யாரு இருக்கா நீ தான் எனக்கு சப்போர்ட்டா வந்து பேசணும்? என்று சொல்கிறார். அதற்கு ராதிகா எனக்கு தலைவலி அதனால வந்துட்டேன் என்று சொல்ல விடாப்பிடியாக ராதிகாவை வெளியே கோபி கூட்டிட்டு வருகிறார்.
அதோடு எனக்காக பேசுவதற்கு ராதிகா இருக்கா என்று கோபி கெத்தா பேசிக் கொண்டிருக்க, அப்போது ராதிகா நான் பேசலாமா? நான் பேசறதால உங்களுக்கும் உங்க அம்மாவுக்கும் எந்த பிரச்சனையும் இல்லையா? என்று கேட்டபடி நீங்க என்னை என்ன சொல்லி கல்யாணம் பண்ணுனீங்க கோபி? நாம இந்த வீட்டில் இருக்கிறதே தப்பு. இதுல உங்களுக்கு நான் பஞ்சாயத்து பண்ணி கொடுக்கணுமா என்று திட்டுகிறார்.
இதை எதிர்பார்க்காத கோபி அதிர்ச்சி ஆகிறார். அதோடு ராதிகா நீங்க பிள்ளைங்க பிள்ளைங்க என்று சொல்றீங்க. ஆனா உங்க பிள்ளைங்க எல்லாரும் பாக்யா பக்கம் தான் இருக்காங்க. இப்ப நான் என்ன சொல்லணும் என்று எதிர்பார்க்கிறீங்க? என்று கேட்டு அத்தை நான் பேசினது சரியா என்று கேட்டுக்கொண்டு ரூமிற்கு செல்ல எல்லோரும் கோபியை பார்த்து சிரிக்கின்றனர். அதனால் கோபமான ஈஸ்வரி நல்ல ஆளா தான் நியாயம் கேட்க கூட்டிட்டு வந்திருக்க என்று சொல்ல கோபி எதுவும் சொல்ல முடியாமல் ரூமிற்கு போகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications