பாக்யாவை நிற்கதியாக விட்ட குடும்பம்.. குற்றசாட்டுகளுக்கு மத்தியில் ஜெனி சொன்ன வார்த்தை..செம முடிவு
அதில் மாலினி எல்லா பிரச்சனையும் பாக்யாவிற்கு தெரியும் அவர் எனக்கும் செழியனுக்கும் திருமணம் செய்து வைக்கிறேன் என்று சொன்னார் என்று மொத்த குடும்பத்தையும் நம்ப வைக்கிறார்.

அதைத்தொடர்ந்து தப்பு செய்த மாலினி, செழியனை விட்டு விட்டு குடும்பத்தினர் எல்லோரும் பாக்யாவை திட்டுகின்றனர். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
அந்த வகையில் இன்றைய எபிசோடில் ஆரம்பத்தில் மாலினி செழியன் தன்னை ஏமாற்றி விட்டதாக அடுத்தடுத்து பல குற்றச்சாட்டுகளை சொல்லிக் கொண்டே இருக்கிறார். அதை எல்லாம் கேட்டு மொத்த குடும்பத்தினரும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். செழியன் தன் பக்கத்து நியாயத்தை சொல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்.
அப்போது யாழினி மேலும் குடும்பத்திற்கு ஒரு அதிர்ச்சியை கொடுக்கிறார். அதாவது எங்களுடைய விஷயம் பாக்கியாவிற்கும் தெரியும் அவர் கொஞ்ச நாள் போகட்டும் எனக்கும் செழியனுக்கும் கல்யாணம் பண்ணி வைக்கிறேன் என்று சொல்லி இருக்காங்க என்று கோர்த்து விட இதை கேட்டு எல்லாரும் மேலும் அதிர்ச்சி ஆகின்றனர். ஆனாலும் ராமமூர்த்தி செழியன் பண்ணுனது தப்புதான் என்றால் நீ பண்ணுனதும் தப்பு முதலில் இங்கிருந்து வெளியே போ என்று விரட்டுகிறார்.
அதற்கு மாலினி எனக்கு ஒரு நியாயம் கிடைக்காமல் நான் விடமாட்டேன் என்று சொல்லிவிட்டு கோபமாக கிளம்பி போகிறார். அதைத் தொடர்ந்து மாலினி போனதும் எல்லோரும் பாக்கியாவை திட்டுகின்றனர். அப்போது இதை முதலில் எங்க கிட்ட சொல்லி இருக்கலாம் தானே என்று கோபி கேட்க, அதற்கு பாக்கியா உங்ககிட்ட சொல்ல முயற்சி செய்தேன் ஆனால் முடியல என்று ஏற்கனவே பாக்கியா கோபியிடம் பேசப்போனபோது ராதிகா தடுத்ததை பற்றி நினைவுபடுத்துகிறார்.
அதற்கு ஈஸ்வரி அப்போ எங்க கிட்ட சொல்லி இருக்கலாமே என்று கேட்க அதற்கு உங்க கிட்ட எப்படி அத்தை சொல்றது என்று
சொல்லிக் கொண்டிருக்கும்போது ஜெனி அப்போ என்கிட்ட சொல்லி இருக்கலாம் தானே என்று சண்டை பிடிக்கிறார். அதோடு என்கிட்ட எதுக்கு மறைச்சீங்க இவன் என்ன தப்பு பண்ணினாலும் அதை மறைத்து அவன் கூட நான் வாழனும்னு நீங்க ஆசைப்படுறீங்களா? என்று கேட்க,
அந்த நேரத்தில் செழியன் ஜெனி என்று பேச வர அதற்கு ஜெனி செழியன் கன்னத்தில் ஓங்கி அறைந்து என்னடா ஜெனி என்று கோபப்படுகிறார். அதை பார்த்து மொத்த குடும்பமும் பதில் பேச முடியாமல் நிற்கின்றனர். அப்போது செழியனிடம் ஜெனி நான் என்ன குறை வைத்தேன்? எதுக்காக அவகிட்ட போனா? அப்போ நீ அவள போய் பார்த்துவிட்டு தான் நான் எங்க அம்மா வீட்டில் இருக்கும்போது என்னை பார்க்க வந்தியா? என்று பல கேள்விகளை கேட்கிறார்.
அதோடு இனிமேல் நான் இந்த வீட்டில் இருக்க மாட்டேன் என் குழந்தைக்கு இந்த வீட்டில் இருக்கிறவங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று வீட்டை விட்டு கிளம்புகிறார். அப்போது பாக்கியா நான் கொண்டு போய் விடுகிறேன் என்று சொல்ல, அதற்கு ஜெனி உங்க பையனுக்கு தானே நீங்க சப்போர்ட் பண்ணுனீங்க அவன் இன்னும் எத்தனை பொண்ணுங்க கூட பேசிட்டு இருக்கான்னு கண்டுபிடிங்க என்று சொல்லிவிட்டு வேகமாக வீட்டை விட்டு கிளம்பி போகிறார். எல்லோரும் ஜெனியை தடுக்க முயற்சி செய்கின்றனர். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications