இனியாவால் கோபத்தில் ராதிகா செய்த செயல்..கத்தியை கையில் எடுத்த கோபி.. என்ன கதையே இப்படி மாறிவிட்டது?
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் பல எதிர்பாராத திருப்பங்கள் நடைபெற்று இருக்கிறது. சொந்த அப்பாவையே கொல்ல கோபி துணிந்து விட்டார்.
ஸ்கூலில் அனைவரும் முன்பும் மயூ இனியாவை அக்கா என்று அழைப்பதால் கோபத்தில் இனியா மயூவை திட்டி அனுப்பி இருக்கிறார். அதனால் காண்டான ராதிகாவால் இனி குடும்பத்தில் பல பிரச்சனைகள் ஏற்படப்போகிறது.

கோபி தாத்தா
பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டின் ஆரம்பத்தில் கிச்சனில் ஜெனிக்கு செழியன் ஜூசை குடிக்க கொடுத்து ஆசையாக பேசிக் கொண்டிருக்கிறார். இதை ஈஸ்வரியும் பாக்கியாவும் பார்த்து சந்தோஷப்படுகின்றனர் .கடந்த முறை செழியன் நடந்து கொண்டதற்கும் இப்போது நடப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது என்று ராமமூர்த்தியிடம் கூறி இவர்கள் சந்தோஷப்பட்டு கொண்டிருக்கின்றனர். அப்போது வர்ஷினி வீட்டுக்கு வந்து ஜெனிக்கு வாழ்த்து கூறி பழங்களை கொடுக்கிறார். குடும்பத்தினரிடம் சிறிது நேரம் பேசிவிட்டு வர்ஷினி கிளம்புகிறார் .அதைத் தொடர்ந்து பாக்யாவும் அவருடைய மாமியார் மாமனாரும் வெளியில் காய்கறி வாங்கிக் கொண்டிருக்கும்போது ராதிகாவுடன் காரில் வந்து கோபி இறங்குகிறார் .அதை பார்த்த ராமமூர்த்தி நான் கொள்ளு காத்தா, ஆகிட்டேன் ஈஸ்வரி கொள்ளுப்பாட்டி ஆகிட்டா, அவ பையன் தாத்தா ஆகிட்டான். தாத்தா தாத்தா என அனைவர் முன்னிலையிலும் கிண்டல் செய்கிறார்.

அப்பாவையே கொல்ல துணிந்த கோபி
அப்பாவால் டென்ஷனான கோபி உங்களுக்கு என்ன பிரச்சனை, 25 வருஷத்துக்கு முன்னாடி நான் ஆசைப்பட்ட பொண்ணை எனக்கு கல்யாணம் பண்ணி வச்சிருந்தா இன்னைக்கு ஏன் இவ்வளவு பெரிய பிரச்சனை வருகிறது என திட்டுகிறார். இவர்கள் இருவரும் ரோட்டில் பேசிக் கொண்டிருப்பதை அக்கம்பக்கத்தினர் பார்ப்பதால் பாக்கியா ராமமூர்த்தியை வீட்டிற்குள் அழைத்துக் கொண்டு செல்கிறார். கோபியும் வீட்டிற்குள் வந்த பிறகும் கோபம் அடங்காமல் பாரு எனக்கு வர்ற கோவத்துல என மேசையின் மீது இருக்கும் கத்தியை எடுத்து என்னுடைய அப்பாவை இப்பவே கொன்னுருவேன் என்று கிளம்புகிறார் ராதிகா தடுத்து நிறுத்துகிறார்.

மயூவை தள்ளிய இனியா
அடுத்ததாக இனியா தன்னுடைய தோழிகளிடம் அப்பா திருமணம் செய்து கொண்டதைப் பற்றியும் அவர் வேறு பெண்ணோடு சென்றுவிட்டதை பற்றியும் கூறிக் கொண்டிருக்கிறார். இனியா தன்னுடைய தோழிகளிடம் மயூவை பற்றியும் பேசி கொண்டிருக்கிறார். அந்த குட்டி பொண்ணை எனக்கு ரொம்பவே பிடிக்கும், அவளுக்காக நான் நிறைய பொம்மைகளை கொடுத்து இருக்கிறேன். ஆனால் இப்போது என் அப்பாவை டாடி என்று கூப்பிடுவது எனக்கு சுத்தமா பிடிக்கல. நான் இருக்க வேண்டிய இடத்தில் காரில் உட்கார்ந்து அவா வாரா ? இந்த சமயத்தில் அவ என்னை அக்கான்னு கூப்பிடறது எனக்கு பிடிக்கல என்று பேசிக் கொண்டிருக்கும்போது, மயூவும் அங்கே வந்து இனியா அக்கா என்று கூப்பிடுகிறார். கோபமான இனியா இனி என்னை அப்படி கூப்பிட்டுக்கொண்டு என் பின்னாடி சுத்தாதே அப்படி சுத்தின அடிச்சிருவேன் என்று திட்டுகிறார். டாடி தான் இப்போ நீங்க இன்னும் க்ளோஸ் அக்காவா ஆகிட்டீங்கன்னு சொன்னாரு என்று சொன்னதும் யாருக்கு டாடி என்று கோபத்தில் மயூவை இனியா பிடித்து தள்ளி விடுகிறார்.

வில்லியாக மாறும் ராதிகா
வீட்டுக்கு வந்து போன் பார்த்துக் கொண்டிருக்கும் மயூ ராதிகாவிடம் ஸ்கூலில் நடந்ததை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருக்கிறார். என்னை ஏன் அந்த அக்காவுக்கு பிடிக்கலை, எதற்காக பாக்கியா ஆண்டியும் இப்போ என்கூட பேச மாட்டாங்க, நான் அவங்க அப்பாவை அப்பானு சொல்றதுக்கா என்று பல கேள்விகளை கேட்டு கேட்டு கொள்கிறார். அதனால் கோபமான ராதிகா உன்னை திட்டுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்று ஆறுதல் கூறிக் கொண்டிருக்கிறார். அப்போது கோபி வந்து என்ன ஆச்சு என்று கேட்க நடந்த விஷயத்தை சொல்கிறார். கோபிக்கு என்ன சொல்வது என்றே தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கும் போது, ராதிகா பயங்கரமாக யோசித்தபடி கடும் கோபத்தில் இருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைந்து இருக்கிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications