திமிரா பேசிய கோபிக்கு பாக்யா கொடுத்த அதிர்ச்சி.. மன்னிப்பு கேட்ட ஈஸ்வரி.. ஜெனி அம்மா சொன்ன விஷயம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் அக்டோபர் 16ஆம் தேதிக்கான எபிசோடில் பாக்யாவின் ரெஸ்டாரண்ட் சீல் வைக்கப்பட்டதால் கோபி தலையில் துண்டை போட்டு பாக்கியாவை கிண்டல் செய்ய பாக்யா கோபிக்கு பதிலடி கொடுக்கிறார்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் பாக்கியா கணக்கு பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்போது இனியா நான் வேணும்னா ஏதாவது ஹெல்ப் பண்ணவா என்று கேட்க வேண்டாம் நீ தூங்கு என்று பாக்கியா சொல்லிவிட்டு தன்னுடைய வேலைகளை பார்த்துக் கொண்டே இருக்க இனியா தூங்காமல் இருக்கிறார். கொஞ்ச நேரம் போனதும் இன்னும் தூங்கலயா அம்மா என்று இனியா கேட்க, இனியாவை தூங்க சொல்லிவிட்டு பாக்கியா மாடியில் இருந்து கீழே இறங்கி வர அங்கு ஈஸ்வரி தூங்காமல் முழித்திருக்கிறார்.

ஈஸ்வரி இடம் பாக்கியா தூங்கலையா அத்தை ஏன் இப்படி இருக்கீங்க என்று கேட்க, அதற்கு ஈஸ்வரி என்ன மன்னிச்சிடு பாக்கியா. என்னால தான் உனக்கு இவ்வளவு பெரிய நஷ்டம் ஆகிடுச்சு. நான் ராசி இல்லாதவளா ஆயிட்டேன். நான் வந்து வேலையை தொடங்கி வைத்திருக்கக் கூடாது என்று சொல்லி அழுது கொண்டு இருக்க, பாக்யா இத்தனை நாளா நீங்கதானே எனக்கு எல்லா உதவிகளையும் செஞ்சீங்க. நீங்கதானே எல்லா பிசினஸிலும் முதலில் விளக்கேற்றி வைத்தீங்க என்று சொல்கிறார்.
அதற்கு உங்க மாமா எல்லா நல்லதையும் எடுத்துட்டு போயிட்டாரு இப்போ எனக்குன்னு எதுவும் இல்லை என்று சொல்லிக் கொண்டிருக்க பாக்கியா ஈஸ்வரியை சமாதானப்படுத்தி அவரை தூங்க வைக்கிறார். பிறகு இனியாவோடு பாக்கியாவும் தூங்கி விடுகிறார். அடுத்த நாள் காலையில் செல்வி பால் பாக்கெட்டை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்து கதவை தட்ட பாக்கியா வந்து கதவை திறக்கிறார்.

என்னாச்சு அக்கா இவ்வளவு நேரம் தூங்கினியா? ஏன் நைட்டெல்லாம் தூங்கலையா? என்று ஈஸ்வரி கேட்க ஆமாம் நைட் கணக்கு பார்த்துட்டு இருந்தேன் அதனால் லேட்டாயிடுச்சு என்று சொல்லிவிட்டு வா செல்வி வாக்கிங் போயிட்டு வரலாம் என்று பாக்யா சொல்ல இப்போ வேண்டாம் அக்கா ஏற்கனவே தெருவில் அத்தனை பேரும் நம்மிடம் வந்து கேள்வி கேட்பாங்க இப்போ விஷயம் தெரிஞ்சு எல்லாரும் கேப்பாங்க நாம மாடியிலே நடக்கலாம் என்று சொல்ல, வேண்டாம் எனக்கு வீட்டுக்குள்ளே இருந்தா ரொம்ப கஷ்டமா இருக்கு வெளியே போகலாம் என்று பாக்கியா செல்வியை கூட்டிக்கொண்டு பார்க்குக்கு வருகிறார்.
அங்கு வாக்கிங் வந்தவர்கள் எல்லாம் பாக்கியாவிடம் ஹோட்டல் பற்றி விசாரிக்கின்றனர். அந்த நேரத்தில் கோபி பாக்கியாவை பார்த்ததும் தலையில் துண்டை போட்டு கிண்டல் செய்கிறார். ஹோட்டல் திறக்க எல்லாராலும் நடக்க முடியாது நீ வீட்டுக்குள்ளேயே சாப்பாடு செஞ்சிட்டு இருக்க தான் சரிப்பட்டு வருவ என்று பேச, கோபமான பாக்யா எனக்கு எதிரா நடந்த சதிக்கு காரணம் யாருன்னு நான் கண்டிப்பா கண்டுபிடிப்பேன்.

என்னால் முடியாதுன்னு நீங்க சொல்லும்போது தான் நான் ஒவ்வொரு இடத்திலும் மீண்டும் மேல வந்துட்டு இருக்கேன்... இப்போதும் வருவேன் என்று சபதம் செய்து விட்டு வருகிறார். அந்த நேரத்தில் வீட்டிற்கு ஜெனியின் அம்மாவும் வருகிறார். அவர் ஈஸ்வரியை எங்கே என்று கேட்க ஈஸ்வரியை வரவைத்ததும் எல்லோரிடமும் நான் ஜெனியை வீட்டிற்கு கூட்டிட்டு போறேன். இங்கே வீட்டில் நிலைமை சரியில்லாமல் இருக்கு அடுத்தடுத்து உங்களுக்கு பிரச்சனை வந்துட்டு இருக்கு, அவ கர்ப்பமாக இருக்கும் போது அவளை கவனிக்க மாட்டா என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications