கோட்டை எல்லாம் அழிங்க.. மீண்டும் முதலில் இருந்து தொடங்கிய ஈஸ்வரி.. இனி சண்டைக்கு பஞ்சமே இல்ல..!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் அக்டோபர் 20ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது .

இதில் கோபிநாத்தை மீண்டும் ஈஸ்வரி பாக்யாவின் வீட்டிற்கு கூட்டிட்டு வர அதை பார்த்து மொத்த குடும்பமும் அதிர்ச்சி அடைகின்றனர்.

Baakiyalakshmi Serial October 20th 2023 promo and episode full update

இந்த நிலையில் பாக்யா இனி என்ன முடிவு எடுக்கப் போகிறார்? என்ற எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில், ராதிகா என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது.

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் பிரச்சனைகளுக்கு பஞ்சமே இல்லாமல் ஒவ்வொரு வாரமும் ஒரு பிரச்சனை என்று சொல்லும் விதமாக புதியது புதியதாக முளைத்துக் கொண்டே வருகிறது. பாக்யாவுக்கு மட்டும் பிரச்சனை டிசைன் எங்கிருந்து வருகிறது என்று பார்க்கும் ரசிகர்களே பீல் பண்ணி கடவுளிடம் தயவு செய்து இவர் பிரச்சனைக்கு ஒரு எண்டு கார்டு கொடுங்க என்று கதறி விடுவார்கள் போல.

அந்த அளவிற்கு தான் விதவிதமாக எங்கேயும் இல்லாத அளவிற்கு பிரச்சனைகள் வருகிறது. சில வாரங்களுக்கு முன்பு அமிர்தாவின் இறந்து போன முன்னாள் கணவர் மீண்டும் உயிரோடு வந்து அமிர்தாவுக்கு மட்டுமல்லாமல் சீரியல் பார்க்கும் மொத்த ரசிகர்களுக்கும் பெரிய அதிர்ச்சியை கொடுத்திருந்தார். நிஜத்தில் நடக்காததெல்லாம் இந்த சீரியலில் தான் நடந்து கொண்டிருக்கிறது.

ஏற்கனவே பாக்கியா குடும்பத்தில் அனைவருக்கும் இரண்டு பொண்டாட்டி, இரண்டு கணவர்கள் கான்செப்ட் போய்க் கொண்டிருக்கும் நிலையில் இப்போது பாக்கியாவை விட்டுவிட்டு ராதிகாவோடு சென்றிருந்த கோபி அங்கு பணம் எல்லாம் மொத்தமாக இழந்து திவால் ஆகி இருக்கும் நிலையில் நெஞ்சுவலி நாடகம் போட்டு இருக்கிறார். அதையும் உண்மை என்று நம்பி இப்போது ஈஸ்வரிமீண்டும் கோபியை தன்னோடு கூட்டிட்டு வருவேன் என்று சபதம் போட்டுவிட்டு கிளம்பி போயிருந்தார்.

Baakiyalakshmi Serial October 20th 2023 promo and episode full update

இந்த நிலையில் ஈஸ்வரி பேச்சுக்கலாம் கோபி கிளம்பி வரமாட்டான் என்று தைரியமாக வீட்டில் பேசிக் கொண்டிருந்த ராமமூர்த்திக்கு மட்டுமல்லாமல் அவருக்கு ஆமாம் சாமி போட்டுக் கொண்டிருந்த பாக்யாவுக்கும் அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ஈஸ்வரி இன்று வெளியான ப்ரோமோவில் கோபியை கையோடு வீட்டிற்கு கூட்டிட்டு வந்திருக்கிறார். கோபி வீட்டிற்கு வந்ததும் போதாது என்று இனியா நீ கோபியை அவர் ரூமுக்கு கூட்டிட்டு போ என்று வேற ஈஸ்வரி சொல்கிறார்.

கோபியை ஈஸ்வரி கூட்டிட்டு வந்ததால் இனி பாக்யா என்ன செய்யப் போகிறார் என்று எதிர்பார்ப்பு ஒரு பக்கம் இருக்கிறது. ஏற்கனவே வீடு பெரும் போராட்டத்திற்கு பிறகு பாக்யா பெயரில் கோபிக்கு பணத்தை பத்திரப்பதிவு செய்தாச்சு. ஆனாலும் கோபி இந்த வீட்டில் தான் இருப்பான் என்று பிரச்சனை செய்வது எந்த ஊரிலும் இல்லாத நியாயமாக இந்த சீரியலில் நடக்கிறது.

எப்போதும் போல தியாக சுடராகவே பாக்கியா, உங்க மகனை வீட்டுக்கு கூட்டிட்டு வந்தா நான் வீட்டை விட்டு போய் விடுவேன் என்று சொல்லி இருப்பது தான் விந்தையிலும் விந்தை. தன் பெயரில் இருக்கும் வீட்டிற்குள் பிடிக்காதவர் வீட்டை விட்டு கோபத்தில் கிளம்புவது பாக்கியாவாக மட்டும்தான் இருக்கும். சரி அதுவெல்லாம் இருக்கட்டும் இப்போ ஈஸ்வரியோடு கோபி வந்ததால் இனி ராதிகா ஆட போட ஆட்டம் எப்படியாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

எப்படியோ கோபி பிரச்சனையில் அமிர்தாவை சுற்றி சுற்றி வரும் கணேசன் பிரச்சனை இன்னும் ஒரு சில வாரங்களுக்கு இருக்காது. அதே நேரத்தில் மாலினியால் செழியனுக்கு வரும் பிரச்சனை அதைத் தொடர்ந்து அடுத்த வாரம் வரும் என்று எதிர்பார்க்கலாம். ஏற்கனவே ஒருமுறை கோபியை பாவம் பார்த்து வீட்டுக்கு கூட்டிட்டு வந்ததால் தான் ராதிகா ஈஸ்வரியையே வீட்டை விட்டு வெளியே போக சொன்னார். ஆனால் அதை எல்லாம் மறந்து மீண்டும் சூரி பட காமெடி போலத்தான் பழைய கோட்டை எல்லாம் அழிங்க நான் முதலில் இருந்தே வருகிறேன் என்று இப்போது ஈஸ்வரி இறங்கி இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+