மீண்டும் வந்த ராதிகா.. மாலினி பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த செழியன்.. முடிவை நோக்கி சீரியல்?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் அக்டோபர் 28ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகியிருக்கிறது.
அதில் மீண்டும் கோபியை தேடி பாக்கியா வீட்டிற்கு ராதிகா பேக்கோடு வந்திருக்கிறார்.

அதே நேரத்தில் தன்னை மிரட்டி வந்த மாலினியிடம் செழியன் இனி நீ என்ன வேணும்னாலும் செய்துக்கோ என்று திமிராக பேசிக்கொண்டு வருகிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் ஈஸ்வரி கோபி ஃபோனை பிடுங்கி ராதிகாவை திட்டி போனை வைத்து விட்டு விடுகிறார். இதனால் ராதிகாவின் அம்மா கோபமாகி நீ இப்படியே இருந்தா, அடுத்த விவாகரத்து தான் நடக்கும் என்று ராதிகாவை ஏத்தி விடுகிறார். இதனால் ராதிகா யோசித்துக் கொண்டு இருக்கிறார்.
அடுத்து செழியன் மாலினியை பார்க்க வருகிறார். அவரிடம் எதற்காக என்னை இப்படி படுத்துறா என்று கோபத்தில் திட்ட, அதற்கு மாலினி நீ எனக்கு வேணும் செழியா என்று கொஞ்சுவது போன்று பேசுகிறார். அதற்கு செழியன் எல்லாத்தையும் முடிச்சிட்டுனு சொன்னேன்ல்ல என்று திட்ட, அதற்கு மாலினி எனக்கு ஒன்னு வேணும்னா நான் எந்த லெவலுக்கு வேணாலும் நான் போவேன் என்று மிரட்டுகிறார்.

அதைத் தொடர்ந்து செழியன் நீ என்ன வேணாலும் பண்ணு. யாருக்கு வேணா போட்டோ அனுப்பு. என் ஜெனி இந்த தப்புக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் நான் ஏத்துகிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார். அதைத்தொடர்ந்து வீட்டில் ஈஸ்வரி கோபிக்கு விழுந்து விழுந்து கவனித்துக் கொண்டிருக்க அப்போது திடீரென்று கதவு திறக்கிறது. எல்லோரும் என்னவென்று அந்த பக்கமாக பார்க்க, அங்கு ராதிகா பேக்கோடு மீண்டும் என்ட்ரி கொடுக்கிறார்.
அதை பார்த்ததும் ஈஸ்வரி போன் பண்ணாததுன்னு சொன்னதும் நீ இங்கேயே வந்துட்டியா என்று திட்டுகிறார். அதற்கு ராதிகா என் புருஷன் இருக்கிற இடத்தில தானே நான் இருக்க முடியும் என்று கேள்வி கேட்கிறார். அதெல்லாம் முடியாது என்று ஈஸ்வரி கூற அப்போ கோபியை என் கூட அனுப்புங்க என்று ராதிகா கேட்க அதற்கு ஈஸ்வரி முடியாது கோபி இங்கே தான் இருப்பான் என்று கூறுகிறார்.
அப்படின்னா என்னாலயும் போக முடியாது. உங்களுக்கு இரண்டே வழி தான் இருக்கு. ஒன்னு கோபியை என் கூட அனுப்பி வைங்க. இல்லன்னா நானும் இங்கேதான் இருப்பேன் என்று ராதிகா கறாராக பேச, அதற்கு ஈஸ்வரி கோபி உடம்பு சரியாகுற வரைக்கும் இங்கே தான் இருப்பான் என்று மீண்டும் சொல்கிறார். அதற்கு ராதிகா அப்படின்னா நானும் இங்கே தான் இருப்பேன் என்று சொல்லி மிரட்டியபடி வீட்டிற்குள் செல்ல அப்போது கோபி பேபி ரூம் கீழே என்று சொல்கிறார்.
அதை பார்த்து கடுப்பான ஈஸ்வரி இவளை போய் பேபின்னு கூப்பிடுற என்று திட்டுகிறார். அதற்கு பாக்யா நான் வீட்டை விட்டு கிளம்புகிறேன் என்று சொல்ல அப்போது ஈஸ்வரி நான் ஏற்கனவே கஷ்டத்துல இருக்கேன். நீயாவது என்னை புரிஞ்சுக்கோ. என்ன மீறி நீ இப்போ வெளியே போனா நீயும் என்னை புரிஞ்சுக்கலைன்னு தான் அர்த்தம்.

எனக்கு இருக்கிறது ஒரே பையன். அவனை இழந்திடுவனோனு எனக்கு பயமாக இருக்கிறது. இப்ப ராதிகாவை போக சொன்னா கோபியும் கூடவே போயிடுவான். அவன் இந்த வீட்டை விட்டு போயிட்டா நான் உடைந்து போயிடுவேன் என்று எமோஷனலாக பேச அங்கு ராமமூர்த்தியும் ஈஸ்வரிக்காக சப்போர்ட் செய்து பேசுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைந்தது.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்!












Click it and Unblock the Notifications