கோபியிடம் பேசிய கணேஷ்.. பாக்கியாவிற்கு உதவ வந்த பழனிச்சாமி.. இனி ராதிகா நிலைமை அவ்வளவுதானா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் அக்டோபர் 31ஆம் தேதிக்கான எபிசோட் வெளியாகி இருக்கிறது.
அதில் கணேஷ் வீட்டிற்கே வந்து கோபியிடம் நிலாவின் அப்பா என்று சொல்ல அதைக் கேட்டு பாக்கியா அதிர்ச்சியடைகிறார்.

அதே நேரத்தில் செழியன் பற்றிய உண்மைகளை பாக்யா பழனிச்சாமியிடம் சொல்லி உதவி கேட்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் கோவிலில் அன்னதானம் நல்லபடியாக முடிந்ததும் நிர்வாகிகள் பாக்கியாவை அவரிடம் பாராட்டிக் கொண்டிருக்கின்றனர். அப்போது அங்கு பழனிச்சாமி வர அவர் நான் தான் பாக்கியாவிற்க்கு ரெக்கமண்ட் செய்தேன் என்பதை சொல்ல வேண்டாமென்று சைகை காட்ட அதை புரிந்து கொள்ளாத நிர்வாகிகள் உண்மையை உளறி விடுகிறார்கள்.
அதைத் தொடர்ந்து பாக்கியா பழனிச்சாமிக்கு நன்றி சொல்லிவிட்டு டல்லாகவே இருப்பதை பார்த்து என்ன ஆச்சு என்று பழனிச்சாமி விசாரிக்கிறார். அப்போது செழியன் பிரச்சனை பற்றி பாக்கியா பேசுகிறார். அந்த பொண்ணு மாலினி கிட்ட செழியன் மாட்டிகிட்டு இருக்கிறதா சொல்லுறான். ஆனா எந்த தப்புமே நான் பண்ணல என்று சொல்லுறான் என்று பாக்யா பீல் பண்ண அதற்கு பழனிச்சாமி நீங்க செழியன் கிட்ட ஒரு முறை பேசுங்க என்று அட்வைஸ் பண்ணி அனுப்புகிறார்.
அதை தொடர்ந்து கோபி தனியாக இருக்கும்போது ராதிகா அந்த பக்கமாக வர கோபி எதுக்காக என்கூட இப்போ பேச மாட்டேங்குற என்று ரொமான்ஸாக பேச, அதற்கு ராதிகா போன முறை இந்த வீட்டில் இருந்து அவமானப்பட்டு தான் போனேன். இந்த முறை உங்க அம்மா என்னை எப்படி எல்லாம் பேசுனாங்க அதுக்காகத்தான் நான் வந்து இருக்கிறேன் என்று சொல்லி பேசிக் கொண்டிருக்கிறார்.
அந்த நேரத்தில் இனியா நிலா பாப்பாவை தூக்கிக் கொண்டு வர கோபி நிலாவே வைத்துக் கொண்டு கொஞ்சிக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு எதார்த்தமாக பாக்கியா வருகிறார். பாக்யாவை பார்த்ததும் கோபி இனியா அப்படியே அப்பா மாதிரி. அவாகிட்ட எல்லா திறமையும் இருக்கு என்று ராதிகாவிடம் பெருமையாக சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அதற்கு பாக்கியா எதுவுமே சொல்லாமல் அந்த இடத்தை விட்டு போய்விடுகிறார். அதைத் தொடர்ந்து கோபி வீட்டு வாசலில் நின்று கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் கணேஷ் வீட்டுக்குள் வருகிறார் அதை பார்த்ததும் யார் என்று கோபி கேட்க அதற்கு நிலா பாப்பா அப்பா என்று சொல்ல, அதற்கு கோபி எழிலா அவன் வெளியே போய் இருக்கான். வாங்க வீட்டுக்குள்ள போகலாம் என்று கணேசை வீட்டுக்குள் கூட்டிட்டு வர அந்த நேரத்தில் வீட்டுக்குள் இருந்து வெளியே வரும் பாக்கியா கணேசனை கண்டதும் அதிர்ச்சி ஆகிறார்.
கூடவே எழில் இப்போ வீட்டில் இல்ல. அவன் வர லேட் ஆகும். நீ கிளம்பு என்று அனுப்பிவிட்டு வாசலில் சென்று தயவு செய்து இங்கே இருந்து போயிரு. நான் உங்க அம்மா அப்பா கிட்ட பேசுகிறேன். உனக்கு போன் பண்ணுறேன் என்று சொல்லி அனுப்புகிறார். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் கோபி என்ன ஆச்சு என்று கேட்க, அதற்கு நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் பசங்க விஷயமா நாளைக்கு வாக்கிங் போவீங்க தானே அப்போ சொல்லவா? என்று கேட்க, அதற்கு கோபியும் சரி என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது பின்பக்கத்தில் ராதிகா வந்து இவர்கள் பேசுவதை கேட்டு முறைத்த வண்ணமாக நிற்கிறார்.
ராதிகாவை பார்த்ததும் பாக்கியா அங்கிருந்து கிளம்பி போய்விட அப்போது ராதிகா என்ன அவங்க பேச வந்தாங்க என்று கேட்க, அதற்கு கோபி தனக்கு தெரியாது ஏதோ பசங்க விஷயமா பேசணும்னு சொன்னா என்று சொல்கிறார். அதைத்தொடர்ந்து பாக்யா கணேஷ் அம்மாவிற்கு ஃபோன் செய்து நலம் விசாரித்தபடி பேசிக் கொண்டிருக்கிறார்.

அப்போது அவர்கள் நாங்க எங்க பையனுடைய வாழ்க்கையை தான் இனி பார்க்க முடியும். எவ்வளவோ சொல்லிட்டேன் ஆனா அவன் மனசு மாற மாட்டேன் என்கிறான். கணேஷ் அமிர்தாவோட வாழ்வது தப்பில்லையே என்று அவர்கள் கேட்க, அதை கேட்டு பாக்கியா அதிர்ச்சியாகி உங்ககிட்ட நான் நேரில் வந்து பேசுகிறேன் என்று போனை வைக்கிறார்.
அதை தொடர்ந்து பாக்கியா கிச்சனில் வேலை செய்து கொண்டிருக்கிறார். அப்போது ராதிகா வந்து கோபி கிட்ட என்ன பேசினீங்க என்று சண்டைக்கு நிற்கிறார். அப்போது பாக்கியா அது பசங்க விஷயம் உங்க கிட்ட சொல்ல முடியாது என்று சொல்ல, அந்த நேரத்தில் ராதிகா பாக்கியாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். எப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
வீடியோ எடுத்து மிரட்டுகிறார்.. நாஞ்சில் விஜயன் மீது புகார் கொடுத்த டிக் டாக் பிரபலம்.. அடுத்த பஞ்சாயத்து -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு












Click it and Unblock the Notifications