பாக்கியலட்சுமி: ஈஸ்வரியிடம் நேருக்கு நேராக ராதிகா கேட்ட கேள்வி.. இவங்கதான் சூப்பர்.. செம உள்குத்து
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் அக்டோபர் நான்காம் தேதிக்கான எபிசோடில் ராதிகா பாக்யா வீட்டிற்கு வந்து ஈஸ்வரியிடம் தன்னுடைய அம்மா பேசியதற்காக மன்னிப்பு கேட்டு விட்டு ஈஸ்வரி தன்னை பற்றி பேசியதை குத்தி காண்பித்து பதிலடி கொடுத்திருக்கிறார்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் ஈஸ்வரி பாக்யா வீட்டில் சோகமாக இருக்க ஜெனி அவருக்கு மாத்திரை கொடுத்துக் கொண்டிருக்கிறார். கிச்சனில் பாக்கியாவும், செல்வியும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ராதிகா பாக்யா வீட்டிற்கே வருகிறார். அவரைப் பார்த்ததும் எல்லோரும் அதிர்ச்சி அடைய ராதிகா ஈஸ்வரி இடம் எங்க அம்மா வயசானவங்க ஏதோ தெரியாம பேசி உங்கள கஷ்டப்படுத்திட்டாங்க. அதுக்கு மன்னிச்சுக்கோங்க என்று சொல்லிவிட்டு நீங்களும் தான் நான் கர்ப்பமாய் இருக்கிறேன் என்று சொன்னதும் அடுத்தவங்க என்ன சொல்லுவாங்க? நாலு பேரு என்ன நினைப்பாங்கன்னு அடுத்தவங்களை பத்தி தானே பேசினீங்க.

உங்க காலத்துக்கு தகுந்த மாதிரி தானே இப்ப கூட நீங்க யோசிச்சீங்க. அது போல தான் அவங்களும் நினைச்சு இருக்காங்க. அதை நான் சரின்னு சொல்லல. ஆனா உங்க மனநிலை பலருக்கு இருக்கு என்று குத்தலாக பேசிவிட்டு உடம்பை பாத்துக்கோங்க என்று சொல்லிவிட்டு வெளியே வருகிறார். உடனே வாசலுக்கு வந்த பாக்கியா ராதிகாவை நிற்க வைத்து என்ன இப்படி பேசுறீங்க நீங்க அவங்களை கஷ்டப்படுத்துறதுக்காக தான் வீட்டிற்கு வந்து பேசிவிட்டு போறீங்க என்று கேட்கிறார்.

அதற்கு ராதிகா நான் பேசியதில் எதுவும் தப்பு கிடையாது. அவங்க இப்பதான் முதல் முறையா வாழ்க்கையில் அடிபட்டு இருக்காங்க. அந்த நேரத்தில்தான் அடுத்தவர்களின் மனநிலை அவர்களுக்கு புரியும். ஆனா இன்று அவங்களுக்கு வலிக்கிறது போல தானே அன்னைக்கு எனக்கும் வலிச்சிருக்கும் என்று புரிய வைக்க வேண்டும் என்று தான் நான் யோசிச்சேன். அடுத்தவங்க என்ன எல்லாம் பேசுறாங்கன்னு தானே உங்க அத்தையும் யோசிச்சாங்க.

என்னைக்கு அடுத்தவங்களுக்காக நாம வாழறோமோ அப்போ நம்முடைய நிம்மதியும் போய்விடும். நம்மளோட சார்ந்தவங்களுடைய நிம்மதிக்கு போவதற்கு நாமலே காரணம் ஆகிறோம் என்பது அவங்களுக்கும் புரியனும் என்பதற்காக தான் நான் அப்படி பேசினேன் என்று சொல்ல, பாக்யா நீங்க இதுக்கு வீட்டிற்கு வந்து இருக்கவே வேண்டாம். நீங்க வந்து உங்க அம்மா பேசுனதுக்கு மன்னிப்பு கேட்கிறேன்னு சொல்லி அவங்கள மேலும் கஷ்டப்படுத்திட்டீங்க என்று சொல்கிறார்.

அதற்கு ராதிகா நான் பேசுனது அவங்களுக்கு புரியும் என்று சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறார். பிறகு எல்லோரும் சாப்பிடுவதற்கு தயாராகின்றனர். ஈஸ்வரி மட்டும் சாப்பிடுவதற்கு வரவில்லை என்று பிடிவாதமாக இருக்க எல்லோரும் சமாதானப்படுத்துகின்றனர். அப்போது ராதிகா சொன்னதில் எந்த தப்பும் இல்ல. நானும் ராதிகா சொன்னது போல தானே இருந்திருக்கிறேன் .ஊரு என்ன சொல்லும், தெருவில் உள்ளவங்க என்ன சொல்லுவாங்க என்பதை தான் நான் யோசிச்சேன்.
நான் ராதிகாவை பற்றி பேசியதை எல்லாம் சாகுற வரைக்கும் மறக்க மாட்டேன். என்று சொல்ல பாக்கியா உங்களுக்கு துணையா நாங்க இருக்கோம் என்று ஆறுதல் சொல்கிறார். அதற்கு ஈஸ்வரி இந்த ஊரு உலகம் என்ன சொல்லுது நான் வெளியே வரக்கூடாது என்று தானே சொல்லுது அதனால இனி நான் வீட்டுக்குள்ளே இருக்கிறேன் என்று சொல்ல பாக்கியா உங்களை நான் அப்படியே விடமாட்டேன் என்று சொன்னாலும் கேட்காமல் ஈஸ்வரி ரூமிற்கு சென்று விடுகிறார்.
மறுபக்கத்தில் கோபியை பார்ப்பதற்காக அவருடைய ரெஸ்டாரண்டுக்கு செழியன் வருகிறார். நான் இந்த கிச்சன் தொடங்கிய பிறகு எனக்கு நல்ல லாபம் கிடைச்சிருக்கு என்று கோபி சந்தோஷமாக சொல்லிக் கொண்டிருக்கும்போது அதற்கு செழியன் வாழ்த்துக்கள் சொல்கிறார். பிறகு எனக்கு ஆபீஸ் போவதற்கு ரொம்ப பயமா இருக்கு அப்பா.
எப்ப நம்ம வேலை போயிடும்னு சொல்லுவாங்களோனு பயந்துகிட்டே இருக்கிறேன் என்று சொல்ல, கோபி உனக்கு வேலை போகாது... அப்படியே போனாலும் அடுத்த இன்டர்வியூக்கு போகணும் என்கிற முடிவை விட்டுட்டியா? என்று சொல்லி செழியனுக்கு மோட்டிவேஷன் கொடுக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா படம் எப்போது ரிலீஸ்? ஜெயிப்பாரா இந்த ஜூனியர்? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications