பாக்கியலட்சுமி சீரியலில் புதிய அத்தியாயம்.. ஆரம்பமே இணையத்தில் அமோகம்! மாஸ் காட்டிய ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் நேற்று ஏப்ரல் 9ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகி இருந்தது. அதில் பாக்கியா மீது பழனிச்சாமிக்கு காதல் வருவது போன்று காட்சிகள் இருந்தது. இதை பார்த்த ரசிகர்கள் இதற்கு அதிகமாக பாராட்டி கருத்து வெளியிட்டு வருகிறார்கள்.

பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்தடுத்த டுவிஸ்ட்கள் என்கிற பெயரில் இரண்டு மனைவி கான்செப்ட் தான் அதிகமாக இருந்து வருகிறது. கோபிக்கு இரண்டு மனைவி, ராதிகாவுக்கு இரண்டு கணவர், அமிர்தாவுக்கு இரண்டு கணவர், அதுவும் இறந்து போன கணவர் மீண்டும் உயிரோடு வந்து இருந்தார். அதுபோல செழியன் மனைவி இருக்கும் போது இன்னொரு பெண்ணோடு தொடர்பில் இருந்தார்.

Baakiyalakshmi serial Palaniswami feeling in love with Baakiya promo YouTube trending

இப்படி இந்த சீரியலில் பல கதைகள் இருக்கிறது. இதனாலேயே ரசிகர்கள் இந்த கதையை குறிப்பிட்டு திட்டியும் கலாய்த்தும் வருகின்றனர். இந்த நிலையில் இப்போது சீரியலில் பாக்கியா எல்லா பிரச்சனையும் அடுத்தடுத்து முடித்துக் கொண்டே வர அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்தாலும் ஆரம்பத்தில் இருந்தே பழனிச்சாமி அறிமுகமான நாளிலிருந்து பழனிச்சாமி மற்றும் பாக்யாவிற்கு இடையே இனி காதல் ஏற்படுமா? இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வார்களா? என்று எதிர்பார்ப்பும் கேள்விகளும் இருந்தது.

ஆனால் அப்படி ஒரு கதை வந்தால் தமிழ் ரசிகர்கள் அதை ஏற்றுக் கொள்வார்களா? என்றும் ஒரு கேள்வி எல்லோருடைய மனதிலும் இருந்தது. இந்த நிலையில் இதற்கு முன்னோட்டமாக நேற்று வெளியான ப்ரோமோவில் பாக்கியா மீது பழனிசாமிக்கு காதல் வருவது போன்ற காட்சிகள் வைத்திருக்கின்றனர். இந்த ப்ரோமோ வெளியானதும் இதற்கு கீழே ஆயிரத்திற்கும் மேற்பட்ட கமெண்ட்கள் வந்து இருக்கிறது.

அதிலும் அதிகமாக பாசிட்டிவ் கமெண்ட் ஆகவே இருக்கிறது. இதை பார்க்கும் போது மக்கள் இவ்வளவுக்கு பரந்த மனப்பான்மையோடு இருக்கிறார்களா? என்ற சிந்தனை தான் எல்லோருக்கும் வருகிறது. இது பாராட்டக்கூடியதாக இருந்தாலும் ஒரு சிலர் பாக்யாவுக்கு இன்னொரு கல்யாணம் தேவையா? இந்த சீரியலை இத்தோடு முடித்து விடுங்கள் என்றும் கூறியிருக்கிறார்கள்.

கோபி பாக்யாவை விட்டுவிட்டு ராதிகாவை திருமணம் செய்து கொண்ட பிறகு பாக்கியா கோபியின் குடும்பத்தோடு வசித்து வரும் நிலையில் இப்போது பழனிச்சாமி புதியதாக வாழ்க்கையில் வந்திருக்கும் நிலையில் இவர்கள் இருவரும் சேர்ந்தால் நன்றாக இருக்கும் என்பது பாக்யாவின் மகன் மற்றும் மருமகள்களின் நினைப்பாக இருந்தாலும் இதை ஈஸ்வரி மற்றும் ராமமூர்த்தி எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்ற கேள்விகளும் வருகிறது.

ஏற்கனவே ஈஸ்வரி பெண்கள் என்றால் வீட்டில் அடங்கியிருக்க வேண்டும் ஆண் என்றால் என்ன தப்பு என்றாலும் செய்யலாம் என்ற மனநிலையில் இருக்கிறவர். இவர் இனி பாக்கியாவிற்க்கு கல்யாணம் பேச்சு வரும்போது என்ன பஞ்சாயத்து வைக்க போகிறார் என்ற கேள்விகளும் இப்போது கமெண்ட்களில் குவிந்து வருகிறது. இப்படியான நிலையில் நேற்று வெளியான இந்த ப்ரோமோ ட்ரெண்ட்ங்கில் ஐந்தாவது இடத்தை பிடித்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+