பாக்கியலட்சுமியில் நாளை: இனியாவை வைத்து ரெஸ்டாரண்ட்க்கு செக் வைத்த சுதாகர்.. கோபி சொன்ன வார்த்தை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஏப்ரல் எட்டாம் தேதி முதல் 11ஆம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இதில் பாக்யாவின் ரெஸ்டாரண்டை வாங்குவதற்கு சுதாகர் இனியாவை வைத்து பேரம் பேசுகிறார். இதற்கு கோபி எதிர்பார்க்காத வார்த்தையை சொல்ல பாக்கியா அதிர்ச்சியில் இருக்கிறார்.
பாக்கியலட்சுமி சீரியலில் ரசிகர்கள் எதிர்பார்த்த அந்த தருணம் இப்போது வந்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். ஏற்கனவே பாக்கியலட்சுமி சீரியல் முடிவுக்கு வரப்போகிறது என்று கடந்த மாதத்திலேயே தகவல்கள் வெளியாகி இருந்தது. ஆனால் பாக்கியலட்சுமி சீரியலில் புது குடும்பத்தின் வருகையால் சீரியலில் அடுத்த திருப்பம் வந்திருந்தது. இந்த நிலையில் இப்போது வில்லனாக வந்த சுதாகரின் உண்மை முகம் குடும்பத்தினருக்கு தெரிய வருகிறது.

ஏமாறும் கோபி
அதாவது பாக்யாவின் ரெஸ்டாரண்டை வாங்க வேண்டும் என்பதற்காக இனியாவை திருமணம் செய்து வைக்க சுதாகர் முடிவெடுத்து இருக்கிறார். சுதாகர் மகன் போதை பொருள் வழக்கில் ஜெயிலுக்கு போயிட்டு வந்திருக்கிறார் என்ற உண்மை சொந்த பந்தங்களுக்கு தெரிய வந்ததால் யாரும் பொண்ணு கொடுக்காமல் இருக்கிறார்கள்.
சுதாகரின் சூழ்ச்சி
அதே நேரத்தில் பாக்யாவின் குடும்பத்தினர் சுதாகரின் குடும்பம் அளவிற்கு வசதி இல்லை என்றாலும் பாக்கியாவின் ரெஸ்டாரண்டை வாங்க வேண்டும் என்பதற்காக சுதாகர் புது பிளான் போட்டு திருமண நாடகத்தை நடத்தி இருக்கிறார். இதை தெரிந்து கொள்ளாத கோபி மற்றும் ஈஸ்வரி இருவரும் இனியாவை சுதாகர் மகனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று மொத்த குடும்பத்தையும் எதிர்த்து நிற்கிறார்கள்.
மனம் மாறும் இனியா
இனியா ஆரம்பத்தில் இந்த திருமணம் வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருந்தாலும் இப்போது ஆகாஷ் வாயாலயே இனியாவை இன்னொரு திருமணம் செய்து கொள்ளும்படி கோபி சொல்ல வைத்து இருக்கிறார். இதனால் இனியாவும் திருமணத்திற்கு சம்மதமும் சொல்லி இருக்கிறார். இப்படியான நிலையில் நாளைக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
மிரட்டும் சுதாகர்
அதில், பாக்யாவின் ரெஸ்டாரண்டுக்கு வந்த சுதாகர் பாக்கியாவிடம் சம்பந்தி உங்ககிட்ட வரதட்சணையாக இதுவரைக்கும் எதுவும் கேட்கவில்லை. இதனால் இந்த ரெஸ்டாரண்ட்ட நீங்க உங்க மகள் இனியா பெயருக்கு அன்பளிப்பாக எழுதிக் கொடுத்துருங்க என்று சொல்ல பாக்கியா அதிர்ச்சியில் இருக்கிறார். அதோடு முடியாது சார் என்று சொல்கிறார். அதற்கு சுதாகர் என் பையனும் உங்க பொண்ணும் சேர்ந்து வாழணும்னா நான் ஆசைப்படுகிற மாதிரி நடக்கணும்.
நாளைக்கான ப்ரோமோ
நாளைக்கு ரிசப்ஷன் நடக்கணுமா வேண்டாமான்னு நீங்க தான் முடிவெடுக்கணும் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார். அதைத்தொடர்ந்து பாக்கியா இந்த விஷயத்தை வீட்டில் எல்லோரிடமும் சொல்ல அதற்கு கோபி ரெஸ்டாரன்ட் விஷயத்தை பற்றி யோசிக்கிறதை விட்டுட்டு உன் பொண்ணு பியூச்சரை பத்தி யோசி என்று சொல்கிறார். இதில் பாக்கியா எடுக்கப் போகும் அதிரடி முடிவு என்ன என்பது பற்றிய கேள்வியோடு ப்ரோமோ முடிவுக்கு வந்து இருக்கிறது.
அடுத்து நடப்பது
எப்படியும் பாக்கியா இந்த திருமணத்தை நடத்த விட மாட்டார் என்பது தெரிந்த கதைதான். கடைசி நேரத்தில் இனியா தைரியமாக முடிவெடுத்து இந்த திருமணத்தை நிறுத்துவதற்கு வாய்ப்பு இருக்கிறது. தன்னுடைய மகளுக்காக பாக்கியா ரெஸ்டாரண்டை விட்டுக் கொடுக்கலாம் என்று முடிவெடுத்தாலும் ஏதோ ஒரு விதத்தில் திருமணம் நின்று போக போகிறது. ஆனால் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல்












Click it and Unblock the Notifications