பாக்கியலட்சுமி: இனியாவை ட்ரோல் செய்தது சீரியலையே ஃபீலிங்கா மாத்திடுச்சு.. திடீர் முடிவுக்கு? - ராஜலட்சுமி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இனியாவின் டான்ஸ் குறித்து சில நாட்களுக்கு முன்பு அதிகமான நெகட்டிவ் கமெண்டுகளும் ட்ரோல்களும் வந்தது. அது குறித்து இந்த சீரியலில் ஈஸ்வரியாக நடித்துக் கொண்டிருக்கும் ராஜலக்ஷ்மி பல தகவல்களை பகிர்ந்து இருக்கிறார்கள்.

விஜய் டிவியில் டிஆர்பியில் முன்னணி இடத்தில் இருக்கும் பாக்கியலட்சுமி சீரியல் அதிகமான ரசிகர்களுக்கு பிரபலமானது தான். இந்த சீரியலை சேனலில் பார்க்கும் ரசிகர்களை விடவும் சமூக வலைதளத்தில் இந்த சீரியல் பற்றி பேசுபவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். அதுபோல அடிக்கடி இந்த சீரியல் ட்ரோல்களில் சிக்கி விடுகிறது.

Baakiyalakshmi Serial vijay TV

ராஜலட்சுமி பேட்டி

கடந்த மாதத்தில் இனியா டான்ஸ் ஆடிய வீடியோஸ் இணையத்தில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்த சீரியல் முடிவுக்கு வர இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இது குறித்து ராஜலட்சுமி பேட்டி ஒன்றில் பேசுகையில் இனியா கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் நேகா அந்த காட்சியில் பெரிதாக டான்ஸ் ஆடவில்லை. அதற்கு காரணம் சீரியலில் எழுதப்பட்ட கதைதான்.

இனியா டான்ஸ் ட்ரோல்

குடும்பத்தினர் பிரச்சனையால் இனியாவால் டான்ஸ் ஆட முடியவில்லை. அதனால் அவருக்கு முதல் பரிசு கொடுக்கவில்லை என்பதற்காக அவள் வருத்தப்படுகிறார். அவளுக்கு கொடுக்கப்பட்ட கேரக்டர்படி தான் அந்த இடத்தில் நேகா நடித்திருந்தா. ஆனால் நேகாவையும் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அவருடைய கேரக்டர் குறித்து அதிகமாக விமர்சனங்கள் எழுந்தது.

இனியா வருத்தம்

அதுகுறித்து நேகா ரொம்பவும் வருத்தப்பட்டா. நான் என்னுடைய கேரக்டர்படி தானே நடித்தேன் எதற்காக என்னை இப்படி ட்ரோல் செய்றாங்க என்று நேகா கேட்டாள். அதற்கு நாங்க எல்லோருமே அவளுக்கு ஆறுதல் சொல்லி இதையெல்லாம் நீ பெருசாக கொள்ளாதே என்று அட்வைஸ் செய்தோம் என்று கூறியிருக்கிறார்.

அடிக்கடி வரும் கேள்வி

அதைத்தொடர்ந்து அவரிடம் பாக்கியலட்சுமி சீரியல் முடிவடைய போகிறதா என்று கேட்ட கேள்விக்கு பாக்கியலட்சுமி சீரியல் விரைவில் முடிவடைய போகிறது. ஆனால் எப்போது முடிக்க போகிறார்கள் என்பது எங்களுக்கு தெரியாது. ஏனென்றால் இந்த சீரியலில் நாங்க கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக நடித்துக் கொண்டிருக்கிறோம்.

Baakiyalakshmi Serial vijay TV

பாக்கியலட்சுமி முடிவு எப்போது

எல்லாவற்றிற்கும் முடிவு என்ற ஒன்று உண்டல்லவா? ஆனால் அது எப்போ நடக்கும் என்பது எங்களுக்கே தெரியாது. இன்னும் சிலர் பாக்கியலட்சுமி சீரியல் இப்போது முடிக்கிறீர்களே என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள் எப்போது முடிப்பார்கள் என்பது போகிற போக்கில் தான் தெரியும்.

விமர்சனங்கள்

இனியாவிற்கு மட்டுமல்ல எங்களுக்கும் அதிகமான ட்ரோல் வரும். என்னைப் பற்றி கூட பார்க்கும் ரசிகர்கள் நீங்க என்ன உங்க மகன் கோபிக்காக மட்டும் சப்போர்ட் பண்றீங்களே என்று கேள்வி கேட்பாங்க. அதற்கு நான் என்னுடைய மகனுக்காக சப்போர்ட் பண்ணவில்லை கேரக்டர்படி நடிக்கிறேன் அவ்வளவுதான் என்று சொல்லி விடுவேன் என அந்த பேட்டியில் ராஜலட்சுமி பேசியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+