அடங்கப்பா.. பாக்கியலட்சுமி சீரியல் பார்த்து ட்ரோல் செய்யும் ரசிகர்கள்.. “நறுக்” கேள்வி
சென்னை: விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியலில் கடந்த வாரத்தில் நடந்த சில நிகழ்வுகள் குறித்து இணையத்தில் அதிகமாக ட்ரோல் செய்யப்படுகிறது. அதிலும் இனியாவின் டான்ஸ் குறித்து இணையத்தில் நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகிறார்கள்.
பாக்கியலட்சுமி சீரியல் கடந்த ஐந்து வருடங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் ஒரு குடும்ப தலைவி எவ்வளவு அவமானங்களையும், கஷ்டங்களையும் தாண்டி தன்னுடைய சுய கௌரவத்தை நிலை நிறுத்தி பிள்ளைகளின் நலனுக்காக பாடு படுகிறார் என்பதுதான் கதைக்களமாக இருக்கிறது.

ஆனாலும் தியாக சுடராக பாக்கியா செய்யும் செயல்கள் இப்படி எல்லாம் உலகத்தில் எங்கமா இருக்குறாங்க? என்பதுதான் பலருடைய மைண்ட் வாய்ஸ் ஆக இருக்கும். கதாநாயகி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஒரு முத்திரையை குத்தி விட்டார்கள். அதனால் பாக்கியலட்சுமி சீரியலில் மட்டுமல்ல பல சீரியல்களில் இந்த கூத்துதான் நடக்கிறது.
இதுவரைக்கும் இந்த சீரியலில் பல எதிர்பார்க்காத சம்பவங்களும் உலகத்திலேயே நடக்காத சம்பவங்களும் நடைபெற்றது. சில மாதங்களுக்கு முன்பு அமிர்தாவின் இறந்து போன கணவர் மீண்டும் உயிரோடு வந்தார். இது குறித்து நான் ஏற்கனவே விமர்சித்து எழுதி இருந்தோம். ஆனால் இப்போது மீண்டும் இந்த சீரியலில் ரசிகர்களை சோதிக்கும் வகையில் தான் கதை சுற்றிக் கொண்டிருக்கிறது.

கடந்த வாரத்தில் இனியா டான்ஸ் போட்டியில் கலந்து கொள்ளும் போது அவருடைய தோழிகள் அவரை கிண்டல் செய்தனர். இது இப்போதைய சூழ்நிலையில் நடக்கிறதா? என்பது கேள்விக்குறிதான். அப்பாவும் அம்மாவும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டால் குழந்தைகளின் முகத்துக்கு நேராக அதுவும் கல்லூரியில் மாணவிகள் உனக்கு என்ன இரண்டு அம்மாவா? என்று கிண்டல் செய்வது போல காட்டுவது வேடிக்கையாக இருக்கிறது என்பது பலருடைய கருத்து.
அதுபோல இனியா டான்ஸ் குறித்தும் இணையத்தில் அதிகமாக விமர்சிக்கப்படுகிறது. இனியாவின் டான்ஸ் தான் இப்போது டாக் ஆப் தி சோசியல் மீடியாவாகி இருக்கிறது. இதெல்லாம் ஒரு டான்ஸ் என்று அதுக்கு பிரைஸ் கொடுக்கலைன்னு இந்த இனியா ராதிகாவை திட்டிக் கொண்டிருக்கிறார் என்று பலர் கிண்டல் செய்து கொண்டிருக்கின்றனர்.
ஏற்கனவே இனியா எப்போதும் அம்மா செய்யும் நல்லதை எல்லாம் மறந்துவிட்டு அப்பா செய்யும் கெட்டதுக்கு கூட ஆமாம் சாமி போடும் கேரக்டர் தான். அதனால் இனியாவையும் செழியனையும் இணையத்தில் அடிக்கடி விமர்சித்து வருவார்கள்.

இப்போது டான்ஸ் போட்டியில் இனியா கலந்து கொள்ளும்போது அவருடைய பெற்றோரை மேடைக்கு அழைப்பார்கள் அப்போது ராதிகா வரவில்லை என்றாலும் கோபி தான் கட்டாயப்படுத்தி ராதிகாவை மேடைக்கு கூட்டிட்டு வந்தார். ஆனால் இனியா கோபியை விட்டுவிட்டு ராதிகாவை மட்டும் திட்டி இருந்தார்.
சமீபத்தில் ராதிகாவின் செயல்பாடுகள் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பாராட்டப்படுகிறது. ராதிகா தான் கதாநாயகியாக உயர்ந்து கொண்டிருக்கிறார். பேசாமல் ராதிகாவையே கதாநாயகியாக மாற்றலாம் என்பது பலருடைய கருத்தாக இருக்கும் நிலையில் இப்போது இனியா ட்ரோல் செய்யப்படுகிறார். இந்த சீரியலில் உங்களுக்கு பிடித்த கேரக்டர் யாரு? அது போல இந்த கேரக்டர் சுத்த வேஸ்ட் என்று யார் நினைக்கிறீங்க? உங்க கருத்தை உரக்க சொல்லுங்க பாஸ்.












Click it and Unblock the Notifications