அதிர்ச்சி! பாக்கியலட்சுமி சீரியல் கம்பம் மீனாவுக்கு ஏற்பட்ட திடீர் விபத்து.. பரிதாப நிலையில் வைத்த வேண்டுகோள்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் செல்வி கேரக்டரில் நடிகை கம்பம் மீனா நடித்து வருகிறார். இவர் இந்த சீரியலில் மட்டுமல்லாமல் பல சீரியல் நடித்து வருகிறார். இந்த நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு விபத்து ஏற்பட்டு விட்டது என்பது பற்றி உருக்கமாக பதிவு வெளியிட்டிருக்கிறார்.
கம்பம் மீனா சில மாதங்களுக்கு முன்புதான் அவருடைய அக்கா மகன் இறந்து போய்விட்ட சோகத்தை ரசிகர்களிடம் பகிர்ந்து இருந்த நிலையில் இப்போது அவருடைய கை எலும்பு உடைந்து கட்டு போட்டு இருக்கும் புகைப்படத்தை பார்த்ததும் ரசிகர்கள் கம்பம் மீனாவிற்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள் அந்த கேரக்டர்களின் படியே பிரபலமடைந்து வருகின்றனர். அதில் கதாநாயகியாக பாக்கியா இருந்தாலும் கதாநாயகிக்கு துணையாக இருந்து வரும் செல்வி கேரக்டரும் அதிகமாக இப்போது ரசிகர்களிடம் பிரபலம் அடைந்து இருக்கிறார்.

ஆரம்பத்தில் இவர் பாக்கியலட்சுமி சீரியலில் அறிமுகமாகும் போது இவருடைய குரலை வைத்தும், இவருடைய உடல் மொழியை வைத்து பலர் கலாய்த்து வந்தனர். ஆனால் இப்போது அதிகமானோர் இவருடைய கேரக்டரை பாராட்டி வருகின்றனர். தன்னுடைய நடிப்பால் பலரையும் கவர்ந்திருக்கிறார் இவர் சீரியல் மட்டும் அல்லாமல் சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்
கம்பம் மீனா பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது திருமணம் செய்து வைத்து விட்டார்களாம். பிறகு இரண்டு குழந்தைகளுக்கு தாயாகி இருக்கிறார். பிறகு குடும்ப சூழ்நிலையால் இவர் எல்ஐசி ஏஜெண்டாக வேலை செய்து இருக்கிறார். அப்போதுதான் இவருக்கு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான தெக்கத்தி பொண்ணு எனும் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அந்த சீரியலின் மூலமாக இவர் பிரபலமடைந்திருக்கிறார்.
அதற்குப் பிறகு தமிழில் 75க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதில் சிலம்பாட்டம், வெடிகுண்டு முருகேசன், மாயாண்டி குடும்பத்தார், முண்டாசுப்பட்டி, களவாணி, சகுனி போன்ற திரைப்படங்களும் இருக்கிறது. இந்த நிலையில் வெள்ளி திரையிலும் சின்ன திரையிலும் கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் நடித்து வரும் கம்பம் மீனா தன்னுடைய குடும்ப புகைப்படத்தையும் அடிக்கடி இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில் இன்று தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் நடிகை கம்பம் மீனா தனக்கு விபத்து ஏற்பட்டு விட்டது. ஆனால் கெட்டதிலும் நல்லது என்று சொல்ற மாதிரிதான் உயிருக்கு எதுவும் ஆபத்து இல்லை என்று சொல்கிற மாதிரி கையில பெரிய கட்டு போட்டு இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதோடு ரசிகர்கள் தொடர்ச்சியாக கம்பம் மீனாவிற்கு ஆறுதல் கூறி அவர் சீக்கிரமாக பழைய நிலைக்கு திரும்ப வேண்டும் என்று கூறி வருகின்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications