பாக்கியலட்சுமி: செழியனால் வீட்டுக்குள் குழப்பம்.. ராதிகாவின் மனமாற்றம்.. ஜெனி கேட்ட கேள்வி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் செப்டம்பர் 26 ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்கலாம். அதில் செழியன் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததால் ஜெனி மற்றும் பாக்யா இருவரும் கேள்வி எழுப்புகின்றனர். ராதிகா பாக்யாவிற்கு ஆதரவாக பேசுகிறார்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் செழியன் குடித்துவிட்டு வீட்டிற்கு வருகிறார். கிச்சனுக்கு தண்ணீர் குடிக்க சென்ற பாக்கியா சாப்பாடு எடுத்து வைக்கிறேன் என்று சொல்ல செழியன் சாப்பாடு வேண்டாம் என்று கிளம்பும்போது பாக்கியா நீ குடிச்சிருக்கியா என்று கேட்க, செழியன் சமாளிக்கிறார். அதற்கு கார் எங்க விட்ட சத்தமே கேட்கலையே என்று பாக்கியா கேள்வி கேட்க, ஆபீஸ்ல கார் இருக்கு.

பிரண்ட் டிராப் பண்ணுனான் என்று சொல்ல, என்ன ஆச்சு என்ன பிரச்சனை என்று கேள்வி மேல் கேள்வி கேட்டுக்கொண்டே இருக்க செழியன் நான் மேலே போறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பி போய்விடுகிறார். மாடிக்கு செழியன் வந்ததும் ஜெனி உன்னோட பாப்பா தூங்கிகொண்டு இருக்கா, உன்னோட இன்னொரு பாப்பாவும் வயிற்றில் இருக்கு. எனக்கு ஒரு ஹக் கொடுத்துட்டு போ என்று சொல்ல, முதலில் மறுக்கும் செழியன் பிறகு கட்டி பிடிக்கிறார்.
அப்போது ஜெனியும் செழியன் குடித்திருப்பதை கண்டுபிடித்திருக்கிறார். உடனே ஆபீஸில் பிரச்சனை என்று சொன்னியே அதுக்காக தான் இப்ப குடிச்சிட்டு வந்திருக்கிறாயா? என்ன ஆச்சு என்று கேட்க, செழியன் நீயும் அம்மா மாதிரி கேள்வி கேட்காத. ஒரு பீர் குடிக்கிறதுனால இவ்வளவு பிரச்சனையா என்று கேட்கிறார். அதற்கு ஜெனி ஆன்ட்டி ஃபீல் பண்ணிட்டு இருப்பாங்க என்று சொல்ல, எனக்கு ஆயிரம் பிரச்சனை இருக்கு அதையெல்லாம் நான் சொல்லிட்டு இருக்க முடியுமா என்று கேட்கிறார்.

அதற்கு ஜெனி உன்னோட பிரச்சினையை நீ அவங்க கிட்ட சொன்னியா? என்று சொல்லி கேள்வி கேட்கிறார். ஆனால் அதை கண்டு கொள்ளாத செழியன் குளிக்க சென்று விடுகிறார். மறுபக்கத்தில் கோபி சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது ராதிகா இன்னொரு இட்லியை எடுத்து சாப்பிடுங்க என்று எடுத்து வைக்கிறார். கோபி இல்லை ஏற்கனவே நான் செந்திலை மீட் பண்ணும் போது ஜூஸ் குடிச்சிட்டேன்.
உனக்காகத்தான் இப்போ சாப்பிடுறேன் என்று சொல்ல, நீங்க குடிக்காம வந்ததுக்கு ரொம்ப நன்றி கோபி என்று ராதிகா சொல்கிறார். அதற்கு கோபி நான் பாரில் செழியனை பார்த்தேன். அவன் அங்கு குடிச்சிட்டு இருந்தான். எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது என்று சொல்ல, என்ன ஆச்சு என்று ராதிகா கேக்க ஆபீஸ்ல ஏதோ பிரச்சனைன்னு சொன்னதாக சொல்கிறார். உடனே கோபி பாக்கியாவை திட்ட அதற்கு ராதிகா உங்களுக்கு ஒரு பிரச்சனைனா நீங்க யார்கிட்ட போய் சொல்லுவீங்க? உங்க அம்மா கிட்ட சொல்லுவீங்களா? என்று கேட்க,

இல்ல நானே தான் சால்வ் பண்ணுவேன் என்று சொல்கிறார். அப்போ அப்படித்தானே அவனும் செய்யணும். அவனுக்கும் வயசு ஆயிடுச்சு. இந்த வயசுல அவங்க பிரச்சனையை அவங்க தீர்த்துக்கொள்ளனும். அப்படி இருக்கும்போது எல்லா இடத்திலும் பாக்யா தான் வந்து பார்க்கனும் என்று அவசியமில்லையே என்று சொல்ல கோபி அதிர்ச்சி அடைகிறார். நீ எப்பவும் உன் பிரண்டுக்கு தான் சப்போர்ட் பண்ணுவ என்று கோபி சொல்ல நான் நியாயத்த சொல்றேன் என்று சொல்லிவிட்டு கிளம்பி போகிறார்.

அடுத்த நாள் காலையில் இனியா காலேஜுக்கு போக ஈஸ்வரி அவரை கொண்டு விடப் போகிறார். அப்போது செல்வி நானும் வரேன் என்று சொல்ல ஈஸ்வரி வேண்டாம் என்று கிளம்பி போகிறார். அந்த நேரத்தில் பக்கத்து வீட்டுக்காரர்கள் இரண்டு பேர் வந்து எழில் போன் பண்றானா என்று கேட்க, அவன் தினமும் போன் பண்றான் அவன்கிட்ட பேசிட்டு தான் இருக்கிறோம் என்று பாக்யா சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அப்போது உங்க மாமியார் என்ன வெளியில போறாங்க புருஷன் இறந்து ஒரு வருஷம் கூட ஆகல ஆனா இவங்க வெளியே போகணும் என்பதற்காகவே போற மாதிரி இருக்கிறது என்று கேட்க அதற்கு பாக்கியா நான் தான் அவங்களை வெளியே போக சொன்னேன். வீட்டுக்குள் மாமாவை நெனச்சு அழுதுட்டே இருக்குறாங்க. கொஞ்சம் வெளியே போனா அவங்களுக்கும் நல்லா இருக்கும் என்று சொல்லிவிட்டு எனக்கு வேலை இருக்கிறது என பாக்கியா கிளம்பி போய்விடுகிறார்.

பிறகு பாக்கியா கிச்சனில் வேலை செய்து கொண்டிருக்கும் போது காய்கறிகளை ஜெனி கட் பண்ணிக் கொண்டிருக்கிறார். அப்போது செழியன் நேற்று குடிச்சிட்டு வந்திருந்தான் என்று ஜெனி சொல்ல செல்வி அதிர்ச்சியாகி யார் குடிச்சிட்டு வந்தாரா என்று கேட்கிறார். அப்போது செழியன் அங்கு வந்து காபி கேட்க பாக்கியா முதலில் கொஞ்ச நேரம் எதுவும் பேசாமல் இருந்துவிட்டு பிறகு காப்பியை எடுத்துக் கொண்டு வந்து கொடுக்கிறார். அப்போது செழியன் நேற்று இரவு நான் பேசியது தப்பு என்று பாக்கியவிடம் மன்னிப்பு கேட்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications