Baakiyalakshmi : கோபிக்காக பாக்கியா செய்த செயல்.. மீண்டும் முதலில் இருந்தா? நல்ல முடிவு தான்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாக்கியலட்சுமி' சீரியலின் இன்றைய எபிசோடு, இனியாவின் வழக்கில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கோபியை குற்றவாளியாகச் சித்தரித்த சுதாகரின் சதி, சிசிடிவி ஆதாரம் மற்றும் பிஏ-வின் வாக்குமூலத்தால் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

சுதாகரின் உண்மையை வெளிப்படுத்திய பிஏ
இன்றைய எபிசோடில், பாக்யா, செழியன் மற்றும் ஆகாஷ் ஆகிய மூவரும் சிசிடிவி ஆதாரத்துடன் போலீஸ் ஸ்டேஷன் சென்று, "இனியாவுக்கும் எங்கள் அப்பாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை," என்று கூறுகின்றனர். ஆனால் போலீஸ்காரர்கள், "சிசிடிவி வைத்து மட்டும் சுதாகரை அரெஸ்ட் பண்ண முடியாது," என்று சொல்ல, எழில் சுதாகரின் பிஏ-வை அழைத்துவந்து, "என்ன நடந்ததுன்னு சொல்லு," என்று கேட்கிறார்.
பிஏ, "சுதாகர் தான் நிதிஷை கொலை பண்ணாரு," என்று வாக்குமூலம் கொடுக்கிறார். போலீஸ் இதை வீடியோவாகப் பதிவு செய்ய, பிஏ நடந்ததை ஆரம்பத்திலிருந்து சொல்லத் தொடங்குகிறார். நிதிஷ் ரெஸ்டாரண்டில் போதை பொருட்களை விற்கத் தயாராகும்போது, சுதாகர் வந்து சத்தம் போடுகிறார். இருவரும் கைகலப்பில் ஈடுபட, நிதிஷ், "எங்க அம்மாவோட பணத்துல வாங்கின ரெஸ்டாரண்ட் இது. எங்க அம்மாவை மட்டும் கல்யாணம் பண்ணலேன்னா நீ பிச்சை எடுத்துட்டு இருப்ப. உன்னை ஜெயிலுக்கு அனுப்புறேன் பாரு," என்று சுதாகரை கோபப்படுத்துகிறார். ஆத்திரமடைந்த சுதாகர், ஒரு கோலை எடுத்து நிதிஷின் தலையில் அடித்துவிடுகிறார். நிதிஷ் மயங்கி விழுந்துவிட, பிஏ எழுப்பிப் பார்க்கிறார்.
குற்றத்தை மறைக்க சுதாகரின் சதி
நிதிஷ் மயங்கி விழுந்ததைப் பார்த்த பிஏ, "இறந்துட்டாரு," என்று சொல்ல, சுதாகர், "இந்த பழியை ஏத்துக்கவே ஒருத்தி இருக்கா. அதுதான் நிதிஷோட வைஃப் இனியா," என்று கூறுகிறார். உடனே இனியாவை வரவழைத்து, நிதிஷ் மயங்கிக் கிடந்ததை அவர்களும் பார்க்க, சுதாகர் அந்த இடத்திலிருந்து கிளம்பிச் சென்றுவிடுகிறார்.
நிதிஷ் கொலை
மீண்டும் சுதாகர் மற்றும் பிஏ திரும்பி வந்து பார்க்கும்போது, நிதிஷ் கொஞ்சம் தெளிந்துவிடுகிறார். "இப்ப தம்பியை ஹாஸ்பிடலில் சேர்த்தால் காப்பாற்றி விடலாம்," என்று பிஏ சொல்ல, சுதாகர், "இவனை காப்பாற்றி அப்புறம் நான் ஜெயிலுக்குப் போகவா? இதுதான் எனக்கு கிடைச்ச நல்ல வாய்ப்பு," என்று கூறுகிறார். பின்னர், "இனியா தான் கொலை பண்ணியதாக நினைச்சுட்டு இருக்கா. அப்படியே இருக்கட்டும். இவன் கதையை நீயே முடிச்சிட்டு," என்று பிஏ-விடம் கூறுகிறார். பிஏ தயங்க, "நான் உனக்கு எவ்வளவு வேணும்னாலும் தரேன்," என்று சுதாகர் சொல்ல, வேறு வழியில்லாமல் பிஏ நிதிஷைக் கொலை செய்துவிடுகிறார்.
கோபியின் நிலை
இந்த உண்மைகள் அனைத்தையும் பிஏ போலீஸ் ஸ்டேஷனில் வாக்குமூலமாகச் சொல்லிவிடுகிறார். இதைக் கேட்ட எழில், "இந்த கேஸ்ல நாங்க விசாரிச்ச அளவுக்குகூட நீங்க எதுவும் விசாரிக்கல. எங்க அப்பாவை பிடிச்சுக்கிட்டு வந்து அவரை அடிச்சு கொடுமைப்படுத்தி, ஒத்துக்க வச்சுருக்கீங்க," என்று போலீஸாரிடம் கோபப்படுகிறார்.
மறுபக்கம், பாக்கியா, ஈஸ்வரி, இனியா ஆகியோர் டிவியில், நித்திஷைக் கொலை செய்தது சுதாகர் தான் என்று சந்திரிகா அளித்த பேட்டியைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இனியா, "டாடி வந்துடுவார்," என்று சொல்ல, செழியன், "எழில் அவரை கூட்டிட்டு வரத்தான் போயிருக்கான்," என்று கூறுகிறார். ஈஸ்வரி, "இந்த குடும்பத்துக்காகக் கொடுத்த எல்லா கஷ்டமும் போதும். இனிமேல் எங்களால் தாங்க முடியாது," என்று அழுதுகொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications