ஆபீஸ் திவாலாகி நடுத்தெருவுக்கு வந்த "கோபி”.. பாக்கியலட்சுமி சீரியலில் எதிர்பாராத டுவிஸ்ட்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் டிஆர்பியில் முன்னணி இடத்தை பிடித்திருக்கிறது.
இந்த சீரியலில் கோபி கேரக்டரில் நடிகர் சதீஷ் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இனி கோபியின் நிலைமை இதுதான் என்று சதீஷ் வெளியிட்ட வீடியோ வேகமாக பரவி வருகிறது.

பொதுவாக சீரியலாக இருந்தாலும் சரி, சினிமாவாக இருந்தாலும் சரி அங்கே வில்லன் ஸ்ட்ராங்காக அனைவரையும் கவரும் விதத்திலும் மிரட்டலாக இருந்தால்தான் அந்த சினிமா அல்லது சீரியல் கதை ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் பிரபலமடைந்து விடுகிறது. அந்த வகையில் சின்னத்திரையில் ஒரு சில சீரியல்களில் வில்லன்கள் கூட ரசிகர்களை கவர்ந்து விடுகிறார்கள் அதில் பாக்யலட்சுமி சீரியலும் ஒன்று.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் கோபியாக நடிக்கும் சதீஷ் நடிப்பை அதிகமான ரசிகர்கள் பாராட்டிக் கொண்டிருக்கின்றனர். அவர் வில்லத்தனம் செய்யும் போது அவருடைய எக்ஸ்பிரஷனாக இருந்தாலும் சரி அதே நேரத்தில் காமெடியாக இருந்தாலும் சரி கோபிக்கு நிகர் கோபி தான் என்று ரசிகர்கள் தொடர்ச்சியாக பாராட்டிக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால் கோபி வேறு, நிஜத்தில் நடிகர் சதீஷ் வேறு என்பதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி சதீஷ் நிரூபித்துக் கொண்டிருக்கிறார். அதே நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கப்போகிறது..? இனிவரும் எபிசோட்டில் என்ன நடக்கப்போகிறது..? என்பதை பற்றியும் கூட சில நேரங்களில் சதீஷ் க்ளூ கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் சீரியலில் பாக்கியாவிடம் கோபி இந்த வீடு உனக்கு வேண்டும் என்றால் 20 லட்சம் பணம் வேண்டும் என்று சவால் விட்டிருந்தார். தற்போது பெரும் கஷ்டப்பட்டு பாக்கியா அந்த சவாலில் ஜெயித்து கோபியை ராதிகாவுடன் வீட்டை விட்டு வெளியேற்றி இருக்கிறார். அதே நேரத்தில் இனியா ஸ்கூலில் ஃபர்ஸ்ட் மார்க் பெற்று இருக்கும் நிலையில் நான் சொல்லும் படிப்பை தான் இனியா படிக்க வேண்டும் என்று புதிதாக பிரச்சனை செய்து கொண்டிருக்கிறார்.
அதுபோல பாக்கியாவும் கோபியை விட அதிகமாக பிசினஸில் ஜெயித்துக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் ராதிகாவும் கோபியை விட இப்போது அதிகமாக சம்பளம் வாங்குகிறார். இந்த நிலையில் கோபி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவிட்டு இருக்கிறார். அதில் தெருவை துப்புரவு செய்யும் வேலையை பார்த்தபடி இருக்கும் கோபி, என்னுடைய ஆபீஸ் திவாலாகி விட்டது. அதனால் நான் இந்த நிலைமைக்கு வந்து விட்டேன் என்று கூறி இருக்கிறார்.
கூடவே," பட்டது போதும் பெண்ணாலே இதை பட்டினத்தாரும் சொன்னாரே. அவ சுட்டது போதும் சிவ சிவனே, சுட்டது போதும் சொல்லாலே நான் சுகப்படவில்லை அவளாலே. காசிக்கு போறேன் ஆளை விடு. என்னை இனிமேலாவது வாழ விடு. சுட்டது போதும் சொல்லாலே.." என்று பழைய பாடலை கேப்ஷன் ஆக கொடுத்து இருக்கிறார். அதே நேரத்தில் இரண்டு பொண்டாட்டி கட்டினால் நிலைமை இதுதான் என்று அவர் கருத்தும் சொல்லி இருக்கிறார். இது குறித்து அதிகமான ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications