பாக்கியலட்சுமி சீரியலில் ட்விஸ்ட்! மீண்டும் வந்த ராதிகா.. பரிதாப நிலையில் கோபி.. இப்படி ஒரு முடிவா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள் சில புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார்கள். அதிலும் ராதிகா சில நாட்களாக பாக்கியலட்சுமி சீரியலில் வராமல் இருந்த நிலையில் மீண்டும் அவர் சூட்டிங் ஸ்பாட்டில் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது எடுத்த வீடியோஸ் மற்றும் கோபி கேரக்டரில் நடிக்கும் சதீஷ் பகிர்ந்த வீடியோஸ் வெளியாகி இருக்கிறது.

பாக்கியலட்சுமி சீரியலில் எதிர்பாராத பல திருப்பங்கள் வந்திருக்கிறது. இந்த சீரியல் முடிவுக்கு வருவதாக கடந்த மாதத்திலேயே இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள் தெரிவித்து இருந்தனர். ஆனால் எதிர்பார்க்காத சில கேரக்டர்கள் திடீரென்று என்ட்ரி கொடுத்திருக்கிறார்கள். பாக்யாவின் ரெஸ்டாரண்டுக்கு எதிரியாக சுதாகர் வந்திருக்கிறார். அவருடைய மகன் நிதிஷுக்கு இனியாவை திருமணம் செய்து வைத்திருக்கிறார்.

Baakiyalakshmi Serial vijay TV

பாக்கியாவுக்கு பிரச்சனை

பாக்யாவின் ரெஸ்டாரண்டை விலைக்கு வாங்குவதற்காக சுதாகர் முயற்சி செய்தபோது பாக்கியா மறுத்திருந்தார். இதனால் தன்னுடைய மகனுக்கு இனியாவை பெண் கேட்டு வந்திருந்தார். அப்போதே பாக்கியா வேண்டாம் என்று மறுத்து இருந்தார். ஆனாலும் கோபியும், ஈஸ்வரி, செழியன் தான் இந்த திருமணத்தை நடத்தி வைத்திருந்தனர். திருமணத்திற்கு பிறகு பாக்யாவில் ரெஸ்டாரண்ட் தன்னுடைய கம்பெனி பெயருக்கு மாறிவிட்டது என்று பாக்கியாவை ரெஸ்டாரண்டை விட்டு சுதாகர் துரத்தி இருக்கிறார்.

சுதாகரின் சூழ்ச்சி

அப்போது பாக்கியா இந்த ரெஸ்டாரெண்ட் போனால் பரவாயில்லை ஆனால் இனியாவை இதே போல ஏதாவது பண்ணலாம் என்று நினைத்தால் நான் சும்மா இருக்க மாட்டேன் என்று மிரட்டி விட்டு வந்திருந்தார். இதனால் கோபத்தில் இருக்கும் சுதாகர் பாக்யாவின் இன்னொரு ரெஸ்டாரண்டையும் பிடுங்குவதற்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறார். இனியா ஊரில் இல்லாத நேரத்தில் சுதாகர் போடும் பிளான் இனியாவிற்கு தெரிய போகிறதா? அல்லது சுதாகர் பிளானுக்கு பதிலடி கொடுக்கப் போகிறாரா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

பாக்கியாவை நம்பும் கோபி

அதே நேரத்தில் பாக்கியா சொல்வதை குடும்பத்தில் யாரும் நம்பாமல் இருக்கிறார்கள். கோபிக்கு மட்டும் பாக்கியா சொல்வது உண்மையாக இருக்குமா என்று சந்தேகம் வருகிறது. ஆனால் செழியன் மற்றும் ஈஸ்வரி சுதாகருக்கு சப்போர்ட் செய்து கொண்டிருக்கிறார். இப்படியான நிலையில் ராதிகா சில மாதங்களாக இந்த சீரியலில் இருந்து காணாமல் போயிருந்தார்

மீண்டும் ராதிகா

ராதிகா இப்போது மீண்டும் சூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்திருக்கிறார். சூட்டிங் ஸ்பாட்டில் பாக்கியாவோடு எடுத்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அதே போல கோபி கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் சதீஷும் சூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த ஒரு புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார். அதில் கிராமத்து வீட்டில் மழைத்துளி உடன் விளையாடுவது போன்ற காட்சிகள் இருக்கிறது.

கோபியின் புகைப்படம்

இதனால் பாக்கியா வீட்டை விட்டு மீண்டும் கோபியை விரட்டி விடுவதால் கோபி தன்னுடைய கிராமத்திற்கு வரப்போகிறாரா? அல்லது இது கோபி ஏற்கனவே கிராமத்தில் தன்னுடைய அம்மாவோடு சில மாதங்களுக்கு முன்பு வந்திருந்தார் அப்போது எடுத்த புகைப்படமா? என்ற கமெண்ட்டுகளும் வருகிறது. எது எப்படியோ இந்த சீரியல் போகும் கதையை பார்க்கும் போது இன்னும் சில மாதங்களை கடந்து தான் இந்த சீரியலுக்கு முடிவு வரும் என்று தெரிகிறது.

இனியா எடுக்கபோகும் முடிவு

ஆனால் எப்படியும் பாக்யாவின் இரண்டாவது ரெஸ்டாரண்டை பிடுங்கும் முயற்சியில் சுதாகர் இனியாவை வைத்து கேம் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இனியா பாக்யாவை போல சுய கவுரவத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக வீட்டை விட்டு வெளியே வரப் போகிறாரா? அல்லது பாக்யாவை எதிர்த்து நிற்க போகிறாரா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+